Astrology:ஜோதிடம் : மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்!!!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ரேவதி நட்சத்திரம். தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார் அன்பர். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில் பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார்.
இப்போது
இரண்டு கேள்விகள்:
1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம்
என்ன?
2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்காக காரணம் என்ன?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!!
1. லக்கினத்தில் எட்டாம் வீட்டுக்காரன்
சுக்கிரனும் ராகுவும் டெண்ட் அடித்து அமர்ந்திருக்கிறார்கள். அது நன்மையான அமைப்பு
அல்ல!
2. ஆறாம் வீடும் பன்னிரெண்டாம் வீடும்
பாபகர்த்தாரி யோகத்தில் 6ற்கு ஒரு
பக்கத்தில்செவ்வாய் மறுபக்கம் கேது. அதேபோல் 12ற்கு ஒரு
பக்கம் சனி மறுபக்கம் ராகு
3. எட்டாம் வீட்டின் மேல் சனி மற்றும்
செவ்வாயின் பார்வை.
4. 1 & 7ல் ராகு &
கேது அமர்வு!
எல்லா தீய வீடுகளும் மேலும் கெட்டிருக்கின்றன
வழக்குகளுக்கு இதுதான் காரணம்!
-----------------------------------------
அதே போல் ஜாதகருக்கு கை கொடுக்கும் சூப்பரான அமைப்பும்
ஜாதகத்தில் உள்ளது. அதனால்தான் அவர் போராடி வெற்றி பெற்று வழக்குகளை உதறிவிட்டு
விடுதலையாகி வெளியே வந்தார்.
1. 8 மற்றும் 12ம் வீடுகளின்
மேல் லக்கினாதிபதி மற்றும் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் பார்வை!
2. ஆறாம் வீட்டுக்காரர் சூரியன் சுப கர்த்தாரி
யோகத்தில் - வழக்குகளை உதறுவதற்கு இவர் பெரும்பங்காற்றினார்
3. எட்டாம் வீட்டுக்காரர் சுக்கிரன் உச்சம்
பெற்று லக்கின கேந்திரத்தில் அமர்ந்துள்ளது நன்மையான அமைப்பு
4. பன்னிரெண்டாம் வீட்டுக்காரனான
சனீஷ்வரன்சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
----------------------------------------------
இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு
உரிய ஜாதகம்:
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com