அறிவுக் கூர்மை என்பது யாதெனில்...!
ஒருவர் வியாபாரத்தில் அறிவாளியாக இருப்பார். மற்றொருவர் கணிணித் துறையில் அறிவாளியாக இருப்பார். இன்னொருவர் காலணியைத் தைப்பதில் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் சிறந்தவராக இருப்பார். வேறொருவர் அரசியலில் கொடிகட்டிப் பறப்பார்...
இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் எல்லாத்துறைகளிலும் அறிவாளிகள் என்று பொருளாகுமா...?
இவர்களால் தொழில் தொடர்புற்ற மற்ற சுழ்நிலைகளில் வெற்றியடைய இயலாமல் போகலாம். அப்போழுது இவர்களின் தொழில் திறமை பொருளற்றதாகிவிடும்.
இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும்,
அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கவியலாது...
இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல் வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அதுபோன்ற அறிவுக் கூர்மை நமக்குத் தேவையில்லை...
*நாம் எப்போதும் சிக்கல்களால் அறிவு குறைந்துவிட்டது என்ற அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது...*
*எந்தச் சூழ்நிலையையும் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் சிக்கல்களுக்குத் தீர்வு இருக்கிறது...*
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை விரும்பவில்லை என்பதால்,அந்தச் சூழ்நிலையைத் துரத்திவிட இயலாது...
அப்போது நாம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று ஆலோசித்து செயல்பட வேண்டும்...
*எனவே எந்தச் சூழ்நிலையையும் விருப்பு வெறுப்பு இன்றி அணுக வேண்டும்...*
ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நம் அறிவுக் கூர்மையோடு திறந்த மனதோடு ஆராய்தல் வேண்டும்..
*ஆம் நண்பர்களே...!*
*சிக்கல்களா...?,இல்லையா...? என்பது நிகழ்வுகளில் இல்லை. அதை நாம் எப்படி அறிவுக் கூர்மையோடு நாம் ஏற்கின்றோம் என்பதில்தான் இருக்கிறது...*
*கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல்நோக்கி எப்படிப் பயணிப்பது என்று காண்பதுதான் உண்மையான அறிவுக் கூர்மை...*
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
நானும் எவ்வலவோ போராடுகின்றேன், ஏப்படி கணக்குப் போட்டாலும் எனக்கு மட்டும் தவறாகவே வருகின்றது.
ReplyDeleteசரியான கதவை தட்டினால் வேறு ஒரு கதவு திறக்கின்றது. இங்கே தட்டினால் அங்கே திறக்கும் என்று கணக்கிட்டு செய்தால் அதுவும் தவறாகவே முடிகின்றது.
நமது வகுப்பறை மூத்த மாணவர் 8 வதாக பிறந்த கி.மு.ராமகிருஷ்ணன் சார் நன்றாக பந்து வீசுகின்றார். இரண்டு பந்துகள் அவுட் ஸ்விங், நானும் க்பேஸ்பால் வீரரை பொல் மட்டையை சுழற்றி அடிக்கமுயன்றேன், பலனில்லை. மூன்றாவது பந்து யார்க்கர், குனிந்து நிமிர்ந்து பார்த்து அடித்தேன்.சிக்ஷெர் லைனில் யாரோ கேச் புடித்துவிட்டார்கள் போலும்.லகான் படத்தைப் போல பவுன்டரி லைனை தான்டி பிடிக்க அதிஷ்டம் வேண்டும் போல இருக்கு.பொருளில்லார்க்கு இவ்வுளகில் இடமில்லை. இருபத்து எட்டு ரூபாய் கேட்கிறான் ஒரு காப்பிக்கு ரயில் நிலையத்தில்...மூன்று பந்துகளும் அவுட். எதற்காக இத்தனை அவஸ்தையை அனுபவித்தேன்? எல்லாம் உன் விதி என்று ஒரு வார்த்தையில் முடிக்கிரான் அதிஷ்டக்காரன். போதும் இந்த போரட்டம்... அலுவலகத்தில் 5 அனுபவம் குறைந்த பெண்கலுக்கு கீழே வேலை, அவர்கலுக்கு எல்லாம் வோர்க் ஆகின்றது. எனக்கு அடிப்படை செட்டப் கூட வேலை செய்யாமல் அவர்களிடம் உதவி கோரும் ஒரு நிலைமை. இப்படி ஒரு வேலை தேவை தானா? எல்லா இடங்களிலும் அவமானமும், அவமதிப்பும் தான். எதைப் பெற இத்தனை போறாட்டம்?
வீட்டிலும் சரி, வேலையிலும் சரி மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை.
அப்பன் தரும் சொத்தும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாமென்று மனம் குமுருகின்றது.
வகுப்பறைக்கு ஒரு சல்யூட், கண்மனிகலுக்கொரு சல்யூட், காத்துனுகிடக்கின்றவன் பொன்டாட்டியை நேத்துவந்தவன் தட்டினு போகலாம்னு பாக்கின்ற பேங்கலூரு டி.ஆர்.சி மாமாவுக்கு ஒரு சல்யூட்.
வகுப்பறையின் ஸ்டுடண்ட் நம்பர் ஒன் வித் ப்பெயில் மார்க்.