Astrology: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?
ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர். அவரின் 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.
கேள்வி இதுதான் இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன? ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்.
ஜாதகி ரிஷப லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் 12ல். விரைய ஸ்தானத்தில். உடன் 4ம் அதிபதி சூரியனும், 7 & 12ற்குரிய செவ்வாயும் கூட்டாக உள்ளார்கள். அத்துடன் சூரியனுடன் மோதி சுக்கிரனும் செவ்வாயும் அஸ்தமணமாகியுள்ளார்கள். லக்கினாதிபதி 12ல் விரையத்தில் அமர்ந்ததால் ஜாதகியின் வாழ்க்கை இளமையில் அவருக்குப் பயன்படும்படி உருப்படியாக இல்லாமல் போய்விட்டது. ஆனால் 5ல் திரிகோணத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான் தன் மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்கு நல்வழியைக் காட்டி நல்வழிப்படுத்தினார்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com