21.4.21

Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!



Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சதய நட்சத்திரக்காரர். ஜாதகத்தில் ராஜ யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன. அத்துடன் பத்தாம் வீட்டதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் ஜாககருக்கு அவர் செய்யும் வேலையில் தொடர்ந்து பல ஏற்றங்களைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. (If the lord of the 10th is powerful and is in lagna, the native will be successful in profession or business) ஆனால் ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை

அடுத்து வந்த புதன் திசையில் சொந்தத் தொழிலைச் செய்யத்துவங்கி பெரும் பொருள் குவித்தார் என்பது தனிக்கதைஅந்தக்கதை நமக்கு வேண்டாம். துவக்கத்தில், அதாவது அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!

ஜாதகர் கடக லக்கினக்காரர். அந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு 19 ஆண்டுகள் சனி மகா திசை காலமாகும். அதாவது அவர் வேலை பார்த்த நாட்களில் நடந்தது. சனி மகா திசை காலமாகும். சனீஷ்வரன் இந்த ஜாதகத்திற்கு 7 மற்றும் 8ம் வீடுகளுக்கு உரியவன். லக்கினாதிபதி சந்திரன் எட்டாம் வீட்டில். அதுவும் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில். சனீஷ்வரன் எட்டாம் வீட்டிற்கு உரிய கஷ்டங்களையே பலனாகக் கொடுத்தார். அதற்கு முன் நடந்த குரு திசையின் கடைசி ஆண்டுகளும் அவருக்கு சாதமாக இருக்கவில்லை. குரு ஆறாம் இடத்திற்கு உரியவர். மேலும் கேதுவின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஜாதகரின் மத்திம வயதுக்காலம் ஏற்றங்கள் இன்றி கழிந்ததற்கு மேலே குறிப்பிட்டுள்ளதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com