7.4.21

Astrology: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன?


Astrology: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் மக நட்சத்திரக்காரர். அவருக்கு 27 வயது நடக்கும்போது தொடர்ந்து 6 ஆண்டு காலம் மன அமைதியின்றி தவித்தார். அதற்குப் பிறகு சிகிச்சைக்குப்பின் எல்லாம் சரியானது. அதாவது அவருக்கு சூரிய மகா திசை நடந்த காலத்தில் மன அமைதியில்லாமல் போனது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி சந்திரன் 2ல் - சூரியனுடைய வீட்டில். சந்திரன் லக்கினாதிபதி மட்டுமல்ல மனகாரகனும் (Lord of the mind) அவன்தான். அவன் அமர்ந்த இடத்திற்குரிய சூரியன் 11ல். அதுவும் பரம எதிரியான சனீஷ்வரனின் பார்வையுடன்.(3ம் பார்வை) சூரிய மகாதிசை நடந்தபோது அதே சனியின் பார்வையால்தான் மன அமைதியில்லாமல் போனது. The Lagna Lord Moon (Authority for mind) is the dispositor (Ruler) of the sun in a maraka house. சூரிய திசை முடிந்து சந்திர திசை துவங்கியவுடன் நிலைமை சரியானது

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com