18.3.21

நேர மேலாண்மை" (Time Management)



நேர மேலாண்மை" (Time Management)

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...

நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால்!, பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது...

நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் நாள்தோறும் நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்...

நமக்கு நெருக்கமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் செவி சாய்த்து கேட்க முடியாமல் போகிறது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது...

"நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்களது நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்...

உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள். உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்...

எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம்...

ஆம் நண்பர்களே...!

கால நேரத்தை பணிக்கு ஏற்றவாறு ஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் சரியான நேரத்தில் பணிகள் முடிந்து நமது வேலைபளு மீதமாகும். அதோடு மனதுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்...!

மறுநாள் வேலைக்கு முதல்நாளே திட்டமிடுங்கள். நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், நாம் எதிர்பாராத வேறு வேலைகள் வரலாம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதை செய்யும் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில வேலைகள் தாமதமாகலாம். அவைகளைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்...!!

முதலில் கடினம் என்று தோன்றினாலும் சிறிது கட்டுப்பாட்டுடன் முயற்சித்தால் நேர மேலாண்மையை எளிதாக செய்யலாம். எந்தவொரு செயலையும் செய்ய ஒரு முறைக்கு, இருமுறை ஆலோசித்து முடிவெடுங்கள்...!!!

நேர்மை தவறாமல், நேரம் தவறாமல் எதையும் பின்பற்றினாலே வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேறலாம். வெற்றியின் முதுகெலும்பு இவை இரண்டும்தான்...!
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com