4.3.21

எழுபதில் வாழ்ந்த எங்கள் காலம்!!!


எழுபதில் வாழ்ந்த எங்கள் காலம்!!!

அந்தக் காலம் .

ஊசி போடாத *Doctor* ..

சில்லறை கேட்காத *Conductor* ..

சிரிக்கும் *police* ...

முறைக்கும் *காதலி* ..

உப்பு தொட்ட *மாங்கா* ..

மொட்டமாடி *தூக்கம்* ..

திருப்தியான ஏப்பம்...

Notebookன் *கடைசிப்பக்கம்* ...

தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..

இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...

கோபம் மறந்த *அப்பா* ..

சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..

அக்கறை காட்டும் *அண்ணன்* ..

அதட்டும் *அக்கா* ...

மாட்டி விடாத *தங்கை* ..

சமையல் பழகும் *மனைவி* ...

சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..

வழிவிடும் *ஆட்டோ* காரர்...

 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..

அரை மூடி *தேங்கா* ..

sunday *சாலை* ...

மரத்தடி *அரட்டை* ...

தூங்க விடாத *குறட்டை* ...

புது நோட் *வாசம்* ..

மார்கழி *மாசம்* ..

ஜன்னல் *இருக்கை* ..

கோவில் *தெப்பகுளம்* ..

Exhibition *அப்பளம்* ..

முறைப்பெண்ணின் *சீராட்டு* ...

எதிரியின் *பாராட்டு* ..

தோசைக்கல் *சத்தம்* ..

பிஞ்சு *பாதம்* ..

எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,

சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,

முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,

 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,

 *ரஜினி, கமல்* படம்    தியேட்டரில் .

 * சிவாஜி,எம் ஜியார்* .

 துவரங்குறிச்சி சின்னச்சாமியில்  - அண்ணன்களோடும் , நண்பர்களோடும் சைக்கிளில் .குடும்பத்தோடு மாட்டு வண்டியில்.

கபில் தேவின் *கிரிக்கெட்* .

குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.

டீக்கடை தினத்தந்தி

ஹிந்து பத்திரிகை மிகவும் நேர்மையாக. இருந்தது.

 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,

சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,* 

தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,

தேக்கு இலையில் ஆயா கூடையின் 5 காசு இட்லி

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,

ஐந்துமணி நேரம் மூழ்கி  விளையாண்டாலும் ஜலதோஷம் அறியா குளத்து நீர்.

பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..

பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...

எல்லா வீடுகளிலும், *ரேடியோவில்*  
K.S. ராஜாவின் குரலோடு பொங்கும் பூம்புனல் ,பாடல் கேட்பது சுகமானது

வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்

பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,

சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,

இதை எழுதும் *நான்* ..

படிக்கும் *நீங்கள்* ..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,....
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com