24.3.21

உனது கால்கள் சாதிக்கும் பெண்ணே!


உனது கால்கள் சாதிக்கும் பெண்ணே!

இன்றைய தேதியில் இந்தியாவின் அதிவேக ஓட்ட வீராங்கனைகளான டூட்டீ சந்த், ஹிமா தாஸ் ஆகிய இருவரையும் தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல்

ஃபெடரேஷன் கப் தேசிய தடகளப் போட்டியில் பி.டி.உஷாவின் (23.30) 200மீட்டர் சாதனையையும் முறியடித்திருக்கிறார் தமிழக வீராங்கனையான
தனலட்சுமி (23.26 நொடிகள்).


நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் 22.80 நொடிகளில் ஓடினால் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்.

கண்ணிமைக்கும் பொழுதுதான் ஒரு சாதனைக்கும் சறுக்கலுக்கும் இடையே நிற்கிறது.

ஆனால் சிறு வயதில் தந்தையை இழந்து,மிக சமீபத்தில் சகோதரியின் மரணத்தையும் சுமந்து, ஏழ்மை தரும் எல்லா சோதனைகளையும் தாண்டித்தான் அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். 

இந்தப் படத்தைப் பார்க்கும்போது இந்த 23.28 நொடிகளின் பின்னால் இருக்கும் பெருவலியும் தாகமும் புரிகிறது.

உன் கால்கள் உன்னை ஒலிம்பிக் தடகளங்களை நோக்கியும் அதன் பின் பரிசு மேடையை நோக்கியும் இட்டுச் செல்லட்டும் பெண்ணே... 🦵🏼🦵🏼🦵🏼 

வாழ்த்துகிறோம் பெண்ணே!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com