26.3.21

Astrology: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?


Astrology: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள் 

தனுசு லக்கின ஜாதகம். சந்திரன் தான் மனகாரகன். மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்தான். சந்திரன் எட்டில் அதுவும் தேய்பிறை அவதாரத்துடன். தேய்பிறைச் சந்திரன் தீயதாகும். அத்துடன் அவருடன் கேது கூட்டாக உள்ளார். அதுவும் இல்லாமல் கேது மகா திசை நடப்பு. இந்த அமைப்புக்கள்தான் ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தங்களுக்குக் காரணம். 30 வயதாகும் போது அவருக்கு சுக்கிர மகாதிசை துவங்கும். சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கிறார். லக்கினத்தில் இருக்கும் லக்கினாதிபதி குருவின் பார்வையால் சுக்கிரன் பல நன்மைகளை வாரி வழங்குவார். அந்த கால கட்டத்தில் எல்லாம் நிவர்த்தியாகிவிடும் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம் கீழே உள்ளது!


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com