11.2.21

Astrology: Jothidam:: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?


ஜோதிடம் : அலசல் பாடம் 

Astrology: Jothidam:: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக? 

ஒரு அன்பரின்  ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தனது 44 வது வரை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவரை காலதேவன் புரட்டிப் போட்டுவிட்டான். பார்த்துவந்த உத்தியோகத்தில் பல பிரச்சினைகள். வேலையை உதறிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் பல மடங்கு பிரச்சினை. அந்த நிறுவனம் கடும் நிதி நெறுக்கடியில் உள்ளதை அங்கே சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. உடனடித் தீர்விற்கும் வழி தெரியவில்லை.

 இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்:

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று

- என்னும் மனநிலை 

கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்! 

நான் அடிக்கடி சொல்வதைப்போல மகா திசைகளும் புத்திகளும்தான் 

(sub periods) ஜாதகப் பலனை வழங்கக்கூடியவை. நல்லதோ அல்லது கெட்டதோ அவைகள்தான் வழங்கும்

கொடுத்துள்ள ஜாதகத்தில் எட்டாம் அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டாகச் சேர்ந்து 10ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னுடைய மகா திசை துவங்கியவுடன் ஜாதகரைப் புரட்டிப்போட்டார். அந்த வீட்டின் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை! எட்டாம் அதிபதியால் கஷ்டங்களைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? ஆகவே ஜாதகர் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக நேரிட்டது!!!


 அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் குருவே,
    ஜாதக அலசல் நம்மை அந்தந்த ராசி அவர்களின் அதிபதி மற்றும் அவர்களின் duty பற்றி நினைக்கும்
    போது தேர்வு முடிவுகள் போல் உதறல் எடுக்கிறது ஆசானே!👍💐

    ReplyDelete
  2. நல்லது. எதஃற்காக உதறல்? இறைநம்பிக்கை வையுங்கள் எல்லாம் சரியாகிவிடும். நன்றி!

    ReplyDelete
  3. Respected sir,
    Thank you for your explanation under this category of "ALASAL" You are giving gist of the rules by giving examples of horoscope. Really this kind of message is very useful.

    ReplyDelete
    Replies
    1. நல்லது. நன்றி நண்பரே!!!

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com