27.1.21

சோவியத் நாட்டின் மாமேதை ஸ்டாலின்!!!


சோவியத் நாட்டின் மாமேதை ஸ்டாலின்!!! 

*ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்.. 

*அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.* 

*கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது.* 

*முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார்.* 

*பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் .* 

*அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,* 

*மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி....* 

*அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.* 

*அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல்,* 

*மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு...* 

*கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் என்று கூறினார்.* 

*அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இன்று வரை கட்சிகள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து....,* 

*மக்களை கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ளனர்.* 

*பணத்திற்கு ஓட்டை விற்கும் தேசத்தில் இனி நல்ல ஆட்சி அமைவது ஏது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை தானே.* 

 படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார் 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. வணக்கம் குருவே,
    ஸ்டாலின் ரஷ்ய அதிபராயிருந்தும் கேவல எண்ணங்கள் தானே மனத்தினுள் கொண்டிருந்தார் தன் மக்களைப் பற்றி! கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை அடக்குமுறை தானே !₹
    தமிழ்நாட்டு முதல்வர்கள் காமராஜர் வரை வாழ்ந்தோர் மக்களை
    ஏமாற்றி அரசு செலுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்
    ஏனெனில் அவர்கள் மனச்சாட்சிக்கு மரியாதையும் அரியணைக்கு கௌரவமும் தந்திருத்தனர்!💐
    வேறு ஒன்றும் சொல்ல மனம் அஞசுகிறது இன்றைய கால கட்டத்தைப் பற்றி!👍
    நேற்றைய பதிவு படிக்கத் தாமதம் ஏற்மட்டதற்கு வருந்துகிறேன்!
    வேலு நாச்சியார் அவர்களின் வீரத்துக்கு எமது மரியாதைக்குரிய வணக்கத்துடன் நினைவு அஞ்சலி
    வாத்தியாரையா!💐💐

    ReplyDelete
    Replies
    1. நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

      Delete
  2. ஏனோ தெரியவில்லை. ரஷியநட்டு ஸ்டாலினின் நினைவூட்டல். எல்லாமே எப்பொழுதுமே புரிவதில்லை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

      Delete
  3. இது நாணயத்தின் ஒரு பக்கம். மற்றொறு பக்கத்தை பார்க்களறுப்பது ஏன் ? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறைவனின் இயக்கத்தில் வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது என மேதைகள் கூறுவதும் செவியில் விழுகிறது.

    ReplyDelete
  4. உண்மைதான், உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. Replies
    1. நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

      Delete
  6. அழகிய உவமை
    - கில்லர்ஜி

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய அய்யா, மிக அருமையாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  8. அரசியல் உலகின் அப்பட்டமான உண்மை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com