அடால்ஃப் ஹிட்லர்
இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியுமா? உலகம் முழுவதும் அறிந்த பெயர். உலகையே ஆட்டிவைத்த பெயர். இரண்டாம் உலக யுத்தத்தின் நாயகனே அவர்தான். 1933 முதல் 1945 வரை சுமார் 12 ஆண்டுகள் அவர் தலைமைப் பதவியில் இருந்தார். எண்ணற்ற நாடுகளை யுத்தங்களின் மூலம் தன் வசப்படுத்தினார். ஜெர்மனியை வல்லரசாக்க வேண்டும் என்ற அவருடைய கனவு நிறைவேறவில்லை. அது அவரையே காவு வாங்கியது.
பிறந்தது: 20.4.1889 - தற்கொலை செய்து கொண்டு இறந்தது: 30.4.1945 மொத்தம் வாழ்ந்தது 56 ஆண்டுகளே ஆயினும் உலக சரித்திரத்தில் தனக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போனார்.
அவருடைய ‘நாஜி’ படையால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை தெரியுமா? மொத்தம் ஒரு கோடி எழுபது லட்சம் மக்கள். அதில் 60 லட்சம் யூத இனத்தைச் சேர்ந்த மக்களும் அடக்கம்.
முழுமையாக அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்திக் கிடைக்கும் பகுதியைப் படியுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Adolf_Hitler
-------------------------------------------------------------------------
அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்
Example horoscope for the terrible desire of power
பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் யாருக்குத்தான் ஈடுபாடு இருக்காது? இருந்தாலும் அதை தன் முனைப்போடு சாதித்துக் காட்டுவதற்கு ஜாதகமும் துணை செய்ய வேண்டுமல்லவா?
ஒருபடி மேலே சென்று சொன்னால், பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் ஈடுபாடு, ஆர்வம், பக்தி என்று இல்லாமல் வெறியும் கொண்டு அலைந்தவர்களில் முதன்மையானவர் ஹிட்லர் என்று சொன்னால், மறுப்பதற்கில்லை. அவருடைய ஜாதகமும் அதைத்தான் சொல்கிறது.
பத்தாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை விழுந்தவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் மற்றகிரகங்களின் அமைப்பும் சேர்ந்து அதைச் சாதிக்கவைக்கும்.
முதலில் ஹிட்லரின் லக்கினத்தைப் பாருங்கள். துலா லக்கினம். லக்னாதிபதி சுக்கிரன் 7ல், ஏழாம் வீட்டுக்காரன் செவ்வாயுடன் சேர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். ஒரு இடத்தில் இருப்பதைவிட, பார்வைக்கு வலிமை அதிகம்.
அத்துடன் உச்சம் பெற்ற லாபாதிபதி சூரியனும் அந்த இடத்தில் கூட்டாக இருக்கிறார். அவருடன் பாக்யாதிபதி புதனும் சேர்ந்து கொண்டுள்ளார். 4 வலிமையான கிரகங்கள் ஏழில். அவைகள்தான் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தன. அதே 4 கிரகங்கள்தான் அவருக்கு ஆளுமை சக்தியைக் கொடுத்தன. மற்றவர்களின் பலவீனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுத்தன.
அந்த ஆளுமை சக்தி நல்ல வழியில் செல்லவில்லை. அதற்குக் காரணம் என்ன?
துலாலக்கினத்தின் நம்பர் ஒன் வில்லனான குரு, தனது சொந்தவீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அந்த 7ஆம் வீட்டை, அதாவது அந்த 4 கிரகங்களையும் தன் பார்வையின் கீழ் வைத்திருப்பதைக் கவனியுங்கள். அந்த நிலைதான் அவரை ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோல் ஆட்சியாளராக மாற்றியது.
சந்திரன் மற்றும் குருவுடன் சேர்ந்த கேது, சண்டாள யோகத்தை வலுவாகக் கொடுத்தது. ஆனால் கொடூர மன நிலைமையும் அதுதான் கொடுத்தது
ஆறாம் வீட்டுக்காரனின் பார்வை பெற்ற ஏழாம் வீட்டால் அவருக்கும் உலகம் முழுவதும் பல எதிரிகள் உருவானார்கள். அவருடைய அழிவிற்கும் அதுவே காரணம் ஆனது!
செவ்வாயும் சுக்கிரனும் கூட்டணி போட்டால், ஆசாமி பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருப்பான். அவரும் அப்படித்தான் இருந்தார்.
லக்கினம் (1) சந்திர லக்கினம் (3) சூரியன் (7) ஆகியவைகள் ஒற்றைப்படை ராசிகளில் அமரும்போது மகாபாக்கிய யோகம் கிடைக்கும். அவருக்கும் அது இருந்தது. இல்லையென்றால் வெறும் 12 ஆண்டுகளில் உலகின் பாதியை அவர் எப்படி தன்வசப் படுத்தி ஆண்டிருக்க முடியும்?
துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அதாவது 4 & 5ஆம் வீடுகளுக்கு உரியவன். அவன் பத்தாம் வீட்டில் அமர்ந்து அவரை ஆட்சியாளராக்கினான். Saturn gave him the power and he became a ruler.
The same Saturn aspected by Mars also gave him the fall in the end. He committed suicide and died
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
Dear Sir,
ReplyDeleteYou have explained very well. Thanks for detailed explanation.
Thanking you,
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஜீவானந்தம்!!!!
Deleteவணக்கம் ஐயா தங்கள் நடையில் மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ReplyDeleteஉங்களின் பாராட்டிற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!
Delete10 ஆம் வீட்டில் சனிபகவான், அந்த நபர் நுழையும துறையில் உச்சம்.... (உ:சுவாமிவிவேகானந்தர் )அருமயான விளக்கம் ஐயா.... நன்றிகள்
ReplyDeleteநல்லது உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!
Deleteவண்ணம் குருவே,
ReplyDeleteஅலசல் பாடம் அபாரம். முதலில் இவ்வளவு அசாத்ய மன நிலை கொண்ட மனிதனின் வாழ்க்கை பற்றிய விபரங்கள் மனதில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது.
இரண்டாவது அவரின் ஜாதக அலசல் கலங்கல். ஒரு ஜாதகத்தை இத்தனை கோணத்திலும் பார்க்கப் படவேண்டும் என்பது எவ்வளவு ஆழம்!
தவறு ஏற்பட வாய்ப்பும் இல்லையே!
நன்றி ஆசானே👍👌💐
நல்லது உங்களின் மேலான பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்லது. நன்றி நண்பரே!!!!
DeleteArumai iyya..Ungal pani menmelum sirakka ennudaya vazhthukal
ReplyDeleteநல்லது. நன்றி நண்பரே!!!!
Deleteவிளக்கம் அருமை , அய்யா
ReplyDeleteநல்லது உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
ReplyDeleteஅருமையான அலசல்
ReplyDelete