20.1.21

Astrology ஜோதிடம்:யார் யார் எங்கே இருக்கக்கூடாது?


யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு விண்ணரவியவரைப்பாரார்
கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!

குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது
சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir today lesson excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Good morning, Sir this is Gopal from Salem, I want your astro 2nd and 3rd published books. Yesterday, Umayal publication is unfortunately shop is closed. Pls let me know when its open.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    ஜோதிட பாட விளக்கம் எளிமையாக இருந்தது. எவரும் புரிந்து கொள்ள முற்படுவர் என்பதில் ஐயமில்லை ஆசானே!
    உமது பதிவுக்கு நீரே நிகர்!

    ReplyDelete
  4. நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  5. சேலம் கோபால அன்பரே! பொங்கலுக்குப் பிறகு இப்போது உமையாள் பதிப்பகம் திறந்துள்ளது. மின்னஞ்சல் அனுப்புங்கள்
    umayalpathippagam@gnail.com
    or whatsApp no 94430 56624

    ReplyDelete
  6. நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com