8.1.21

30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!!


30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!! 

முப்பது வருஷத்துக்கு முன்னால நாம்ம ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... 

ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.

 பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

 பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு

ஊர்க்கத முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

 மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு சீட்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

 சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.

 விசேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.

 வழ வழப்பான சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.

இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.

 சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

 இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.

 

எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.

 இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்கும் தலைமுறைகளை பாக்க பரிதாபமாக இருக்கு.

இவர்கள் இழந்தது எத்தனையோ?.

இழக்க போவது எத்தனையோ?

 காக்கா கத்துது...உறவுகள்  வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

 விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏

 இந்த தலைமுறை மாறினால் மட்டுமே

அடுத்த தலைமுறை இழந்ததை மீட்கலாம்.

 பதிவு பிடித்து ஷேர் பண்ணினால் மட்டும் அல்லாமல்,

இந்த மொபைல் அடிமைத்தனத்திலுருந்து வாருங்கள்.

உங்கள் அடுத்த தலைமுறையோடு..

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Good morning sir real fact thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Change is inevitable. Next decade marriage function would be so different.

    ReplyDelete
  3. பின்னூட்டமிட்ட சண்முகசுந்தரம் மற்றும் கே.கே.ஆர் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  4. Excellent post sir.
    congrats on continuing your work by the grace of god.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com