22.12.20

அறிக்கை போர்

அறிக்கை போர் 

*"வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது"* 

 சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்குமான அறிக்கை போர் சூடுபிடித்து எகிறுகின்றது, தன் நிபுணர் குழுவினை அனுப்பும் தீவிர முடிவில் இருக்கின்றது அமெரிக்கா, ஆனால் அது சீனாவின் தன்மானத்தில் விழும் அடி என்பதால் அது தவிர்க்க பார்க்கின்றது

கொரோனா வைரஸை சீனா உருவாக்கியது என அமெரிக்கா குற்றம்சாட்ட, சீனா தந்திரமாக பதிலளிக்கின்றது, "வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது. உயிரை உருவாக்கும் நுட்பம் இன்னும் வரவில்லை

மேலோட்டமாக பார்த்தால் இது சரியென தோன்றும், வைரஸ் கண்ணுக்கு தெரியாத உயிர் தான் நிச்சயம் அதை உருவாக்க முடியாது. விஷவாயு தாக்குதல் வேறு, நோய்பரப்பும் கிருமிகளை கண்டறிந்து வளர்த்து பரப்புதல் என்பது வேறு

சீனா இதைத்தான் சொல்கின்றது, இதற்கு முன் இல்லாத ஒரு கிருமியினை நாங்கள் எப்படி உருவாக்கி உயிர் கொடுக்க முடியும்

ஆனால் மேற்கு நாடுகள் அதற்கும் பதில் வைத்திருக்கின்றன *"அப்பனே, உயிரை யாரும் உருவாக்க முடியாது, ஆனால் இருக்கும் உயிருக்கு எப்படி வெறியூட்டி மிருகமாக்குவது என்பது உலகம் கண்ட கலை.* 

மாட்டுக்கே சாராயம் ஊற்றினால் தறிகெட்டு திரிவதை போல, மதம்பிடித்த யானை கண்ணில்பட்டதை எல்லாம் நொறுக்குவதை போல, *வைரஸ்களுக்கும் சில விஷயங்களை செய்தால் அவை வெறிபிடித்த கொலைவெறி வைரஸாக மாறாதா?* 

நீ ஏதோ செய்து அதன் இயல்பினை மாற்றி வெறி பிடிக்க வைத்திருகின்றாய், அதை ஒப்புகொள்" என சீறுகின்றன‌. 

"போய்யா யோவ் அதெல்லாம் உன் வேலை, நாங்கள் அப்படி அல்ல" என சொல்லி முகத்தை திருப்புகின்றது சீனா

மேற்குலகம் விடுவதாக இல்லை, நிலமை சீரியசாக செல்கின்றது

======================================

படித்ததில் தெரிந்துகொண்டது

அன்புடன்

வாத்தியார்

=================================



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே,
    எது எப்படியோ உலகமே உருண்டு இருண்டு கிடக்கிறது வைரஸின் பிடியில்?
    நாளை என்பதே கிட்டத்தட்டச் கேள்விக்குற!
    மீண்டும் வேறொரு வைரஸ் வெகு வேகமாக பரவுவதாகப் படித்தேன்
    இங்கிலாந்தில்??!!
    என்ன செய்ய???

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com