30.9.20

*எதையும் ஒத்திபோடுதல் சரியல்ல!!!!!


*எதையும் ஒத்திபோடுதல் சரியல்ல!!!!!
.................................................................

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு எளிமையான வழி ஒத்திப் போடுவதுதான். பொதுவாக ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்...

சோம்பலின் காரணமாக ஒத்திபோடுகிறோம்...

உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஒத்திப் போடுகிறோம்..

துக்கத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

இப்படியெரு செயலை ஒத்திப்போட பல காரணங்களை 
அடுக்கிக்கொண்டே போகலாம். ஒத்திபோடுவதற்கு காரணம் தேடும் நாம், நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா...?

எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட, எதாவது ஒரு முடிவை எடுக்கலாம். அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிலாவது மகிழ்ச்சியடையலாம்...

சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா...? அதுவா...? இப்படி செய்யலாமா...! அல்லது அப்படி செய்யலாமா...! என்ற குழப்பமே காரணம்...

ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம்
முடிவெடுக்கும் தருணத்தில் ஆலோசிப்பது நாம் செயல்படுவததை தள்ளிப்போட வைக்கிறது...

எடுத்துக்காட்டாக, உங்கள் வாகனத்தை சுத்தம் செய்தல், குளியலறையை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புதல், உடல் நலம் குன்றிய நெருங்கிய நண்பரை சென்று பார்ப்பது என்று நாளும் எதையாவது ஒத்திவைத்துக் கொண்டேதான் இருக்கிறோம்...

நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிபோடுவதாக கூறிகொண்டாலும், அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்...

*ஆம் நண்பர்களே...!*

*நாளை என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள், எந்த ஒரு முடிவும் துணிச்சலாக எடுங்கள்...!*

*இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் – நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள். ஆனால்!, இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்...!!*

*நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பதல்ல. நம் சோம்பல்தான் காரணம். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை, காரணத்தை தேடுபவன் வெற்றி பெறப்போவதில்லை...!!!*
-----------------------------------------------
படித்தத்தில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com