31.7.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு உடற் கோளாறால் நடக்க முடியாமல் போனது ஏன் ?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு உடற் கோளாறால் நடக்க முடியாமல் போனது ஏன் ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம் தனுசு லக்கினம் மகர ராசி. ஜாதகருக்கு அவருடைய 17வது வயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போய் விட்டது. என்ன காரணம் ? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 2-8-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம்

    தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்

    தனுசு லக்கின திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் தனது 17 வயதில் உடல் ஊனம் அடைந்தற்கான காரணங்கள் :

    1. ஒருவரின் நோய் பற்றி அறிய அவரின் ஆறாம் இடத்தை பார்க்க வேண்டும். இவரின் ஆறாம் இடத்து அதிபதி சுக்கிரன் மூன்றில் ராகுவுடன் இணைந்து சூரியனுடன் அஸ்தங்கதம் ஆகி உள்ளார். மேலும் உயிரை பற்றி சொல்லும் லக்கின அதிபதி குரு, நீச சனியின் நேரடி பார்வையில் உள்ளார். மேலும் செவ்வாயின் பார்வையும் லக்கின அதிபதி குருவின் மேல் உள்ளது.

    2. ஒருவரின் உடலின் தண்டுவடம் போன்ற உறுப்புகளின் தன்மையை சூரியன் கட்டு படுத்தும். இவரின் சூரியன் சனியின் வீட்டில் ராகுவுடன் சேர்ந்து மூன்றாம் வீட்டில் உள்ளது . மேலும் ஆறாம் அதிபதியின் தொடர்பிலும் சனியின் ஆதிக்கத்தில் உள்ளதால், ஜாதகர் தனது பதினேழாம் வயதில் ராகு தசையின் சனி புக்தியில் சூரியனின் அந்தரத்தில் தண்டுவட கோளாறு ஏற்பட்டு நோய் வாய் பட்டார் .

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா. 31/7/20 புதிருக்கான பதில். லக்னம் எந்த சுப கிரகத்தின் பார்வை இல்லை. லக்னநாதன் குரு பகவான் சனி மற்றும் செவ்வாய் பார்வையில் . சந்திரன் மாந்தி மற்றும் சனி பார்ப்பதால் பலவீனம் அடைந்துள்ளார். சூரியன் சனி வீட்டில் கிரகண தோசத்தில் உள்ளார்.குருவின் வீட்டில் உளள ராகு திசை ஆரம்பித்ததும் குரு 11 லவ் சனி மற்றும் செவ்வாய் பார்வை பெற்றதும் காலை நடக்க இயலாமல் செய்தார். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. ஐயா கேள்விக்கான பதில்
    1 .ஜாதகத்தில் மூன்றாம் வீடு பாதிப்படைந்து உள்ளது (கழுத்து தொண்டை கழுத்து எலும்புகள் ) உடல்காரகன் சூரியன் ராகுவின் பிடியில் ,ஆறாம் அதிபதி சுக்கிரனுடன்
    2 .பனிரெண்டாம் வீடு கால்கள் ) அதற்குரிய செவ்வாய் மூன்றாம் அதிபதி சனியுடன் 12/6 positionஆகவே செவ்வாய் திசையில் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கால்கள் செயலிழந்து இருக்கின்றன
    நன்றி
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  4. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: ராகு ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் சனி வீட்டில் சுய சாரத்தில்.ராகு தசை சுய புக்தியில் பாதிப்பு.

    ReplyDelete
  5. Dear Sir,

    This native lagna lord Jupiter is in 11th place (Enemy to sukran), but Mars and Saturn together is aspecting to Jupiter 7th aspects from 5th place.

    Sani Neecham together with Mars aspects to lagna lord is the reason for his disabilities.


    Thanking you sir
    C. Jeevanantham.

    ReplyDelete
  6. பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

    1. எலும்புக்கு காரகரான சூரியன் தனது பகைவீட்டில், தனது இன்னொரு பகைவரான ராகுவின் கிரஉறணப் பிடியில் கட்டுண்டு பலவீனப்பட்டுள்ளார். அதனால் இந்த ஜாதகருக்கு ராகு தசை, ராகு புத்தியில் தண்டுவடக் கோளாறு ஏற்பட்டது.
    2. உடல் மற்றும் மனோகாரகனும், 8க்குடையவனுமான சந்திரன் மாந்தியுடன் சேர்க்கை பெற்று பலவீனமடைந்துள்ள நிலையில், மகராசியின் அதிபதியான சனிபகவானால் 10ம் பார்வையால் பார்க்கப்படுவது அவரை நடக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது.
    3. உச்சம் பெற்ற சனி பகவான் மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாய் லக்னாதிபதியை 7ம் பார்வையாக பார்ப்பது லக்னாதிபதியை செயலிழக்க செய்துள்ளது.

    நன்மதிப்புக்களுடன்,

    இராம. சீனிவாசு,
    திருச்செங்கோடு.

    ReplyDelete
  7. ஐயா
    ஆறுக்குடைய சுக்கிரன், பாதகாதிபதி புதன், எட்டுக்குக்குடைய சூரியன் மற்றும் ராகு ஆகிய எல்லோரும் மூன்றாம் வீட்டில். எனவே இவர் ராகு திசை ராகு புக்தியில் நோய்வாய் பட்டுள்ளார். மேலும் நவாம்சத்திலும் ராகு பாதகஸ்தானத்தில் இருந்துகொண்டு லக்கினத்தை பார்க்கிறார்.

    கே. ரவி

    ReplyDelete
  8. DOB: 5/3/1970 2:40 am
    1. Lagnadhipathi Guru in 11th house aspects 3rd/5th/7th house, but neesam in amsam.
    2. For the spinal cord we need to look at the sun's position and 5th house also 6th house
    3. Sun/sukran/budhan are (aspected by guru) but Graha dosha (with rahu). So sun/sukran/budhan are weak in Rasi. But kethu from 9th house(sun’s house) aspecting sun in 3rd house. The sun in a good position in amsam may give some immune power/other support to the jadagar during his lifetime.
    3. In the 5th house Saturn is neesam sitting along with owner Mars which spoiled the 5th house and mars even though weak guru’s paarvai (also Saturn paarvai on guru both rasi and amsam)
    4. During Mars dasa end he got the disease and was not able to walk.
    5. he may not get recovered during his life because following Rahu/guru/Sani/budhan dasas are not favourable

    ReplyDelete
  9. ஜாதகர் 5 மார்ச் 1970ல் காலை 2மணி 30 நிமிடம் போலப் பிறந்தவர்.

    5ம் இடத்தில் சனி செவ்வாய் மேஷத்தில் மிக நெருக்கமாக. சனி ஊனமுற்ற்வராகக்கருதப்படும் கிரகம் 5ம் இடத்தில் நீசம் பெற்று பரம எதிரியுடன் பகை கொண்டு நிற்பது.

    உடல் காரகன் சூரியன் 3ல் இருந்து ராகுவின் மிக அருகாமை இருந்தது.10க்கு உடைய புதன் சூரியன், ராகு சம்பந்தப்பட்டது.

    17 வயதில் வந்த ராகு தசா ராகு புக்தி கடுமையாகத்தாக்கி ஊனமாக்கிவிட்டது.

    ReplyDelete
  10. வணக்கம்.

    தனுர் லக்கினம், மகர ராசி ஜாதகர்.

    அவருடைய 17வது வயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போய் விட்டது.என்ன காரணம்?

    உடல் அமைப்பைப் பொறுத்தவரையில், 5-ம் ஸ்தானம், வயிற்றின் மேல் பகுதி மற்றும் முதுகைக் குறிக்கும்.
    5மிடத்தில் அமர்ந்துள்ள நீச சனி மற்றும் செவ்வாய் கூட்டணி விபத்து மற்றும் ரத்த காயங்களை குறிக்கிறது.
    இதன் காரணமாக ஜாதகரின் 17ம் வயதில் செவ்வாய் தசை முடியும் தருவாயில் முதுகுத் தண்டு பிரச்சினை ஏற்பட்டு நடக்கும் சக்தியை இழந்தார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com