22.6.20

நடிகை சோபியாலோரென் அசத்தலாகச் சொன்னது!!!


நடிகை சோபியாலோரென் அசத்தலாகச் சொன்னது!!!

சோபியா லோரென் 26-9-1934ல் ரோம் (இத்தாலி) நகரில் பிறந்தவர்
17 வயதில் உலக அழகி பட்டம் பெற்றார்
24 வயதில் அமெரிக்க திரை உலகைக் கலக்கினார்

அந்தக் காலத்து கனவுக்கன்னி அவர்!!!

1958ம் ஆண்டு அமெரிக்காவின் பாரமவுண்ட் பிலிம் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இவர் நடித்த 5 படங்களும் தொடர் வெற்றிகளைக் கொடுக்க அகில உலக பிரபலமானார். இவரைப்
பற்றிய மேல் விபரங்களுக்கு விக்கி மகாராஜாவிடம் கெளுங்கள்.
சொல்வார்

வாருங்கள், அவர் அசத்தலாகச் சொன்னது என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

”எனக்கு தேவையான அளவு தன்னம்பிக்கைஏற்பட்டபோது, கிடைத்த வாய்ப்புக்கள் பறி போயின! தோற்று விடுவோம் என்று உறுதியாக
நான் நம்பியபோது வெற்றிகள் வந்து என்னைத் த்ழுவிக்கொண்டன!
வெறுப்பின் உச்சத்தை நான் தொட்டபோது, என் மீது அதீதமான
அன்பைச் செலுத்தி என்னை ஒருவர் விரும்பத்துவங்கினார்.
தூக்கத்திற்காக பல மணி நேரம் துவண்டு படுக்கையில் புரண்டபோது தூக்கம் வரவில்லை. வெளிச்சம் வந்து சேர்ந்தது. ஆமாம் விடிந்து விட்டது. வெளிச்சம் வந்து விட்டது. பின் எங்கே தூங்குவது?

ஆமாம் இதுதான் வாழ்க்கை.

நீங்கள் எதை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் திட்டமிடுங்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை உங்களுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.

வெற்றி உங்களை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தும்!
ஆனால் தோல்வி இந்த உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்!!!

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!

பல சமயங்களில் இதுதான் இறுதி முடிவு என்று நினைத்து நாம் நமது நம்பிக்கையைக் கைவிடும்போது, கடவுள் புன்னகையோடு சொல்வார்:
“Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"(வளைவுதான் முடிவு அல்ல)
--------------------------------------------------------
*WORTH READING IT AGAIN AND AGAIN* அதனால் மொழிமாற்றம் செய்து பதிவிட்டேன்

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே 👍!
    தங்களின் 22.6.20 பதிவில் சோஃபியா லாரென்ஸ் அவர்களின்
    எண்ணக் கீரல்கள் அசத்தலானவை!
    மறைந ஆப்பிள் சிஇஓ அவர்களின்
    கடைசி வார்த்தைகள் ஒப்பற்ற வை.
    இந்த அம்மணியும் சொன்னது:

    "ஆமாம் இதுதான் வாழ்க்கை.

    நீங்கள் எதை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் திட்டமிடுங்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை உங்களுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது."
    என்ன!ஆணித்தரம்!!




    ReplyDelete

  2. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே 👍!
    தங்களின் 22.6.20 பதிவில் சோஃபியா லாரென்ஸ் அவர்களின்
    எண்ணக் கீரல்கள் அசத்தலானவை!
    மறைந ஆப்பிள் சிஇஓ அவர்களின்
    கடைசி வார்த்தைகள் ஒப்பற்ற வை.
    இந்த அம்மணியும் சொன்னது:
    "ஆமாம் இதுதான் வாழ்க்கை.
    நீங்கள் எதை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் திட்டமிடுங்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை உங்களுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது."
    என்ன!ஆணித்தரம்!!/////

    உண்மை! இதைத்தான் ஞானம் என்கிறோம்! ஞானத்தின் வெளிப்பாடுதான் அவருடைய வார்த்தைகள் நன்றி வரதராஜன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com