Astrology: Quiz: புதிர்: குழந்தைப் பேறு கிட்டாத பெண்மணியின் ஜாதகம்!!!
ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. ஆயில்ய நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த நல்ல பெண்மணிக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை?
ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 14-6-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஐயா,
ReplyDelete1 . இந்த பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் ராகு உள்ளது. Rahu spoiled the 5th place.
2 . 5 ஆம் இடத்து அதிபதி புதன் , சனி உடன் சேர்ந்து கெட்டு விட்டது. சுக்கிரன் கூட சனி உடன் சேர்ந்து கொண்டு குழந்தை பிறப்பை வெகுவாக தாமத படுத்தியது.
3 . குருவின் பார்வை இருந்தாலும் குரு கேது சேர்க்கை குழந்தை இல்லாமல் செய்து விட்டது.
நன்றி ஐயா .
ஐயா நான் இந்த பதிவிற்கு புதியவன்
ReplyDeleteதங்களுடைய பதிவுகளை வாசித்து வருகிறேன். அதன் அடிப்படியில் இந்த என் புதிய முயற்சி.
லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில ராகு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டின் அதிபதி செவ்வாயின் பார்வை ஐந்தாம் வீட்டின் மேல். இதுவே குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு கரணம் என நினைக்கின்றேன்.
மேலும் லக்கினாதிபதி சுக்கிரன் சனியின் ஆதிக்கத்தில்
K. RAVI
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி சுக்ரன் ஒன்பதில் பாக்யாதிபதி சனியுடன் ,குடும்பஸ்தானதிபதி புதனுடன் அமர்ந்துள்ளார் ஆகவே திருமண வாழ்கை நன்றாக அமைந்துள்ளது.
2 .ஐந்தாம் அதிபதி புதன் சனியுடனும் ,ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் உள்ளார்
௩.ஐந்தில் ராகு ,ஐந்தாம் வீட்டின் மீது எட்டாம் அதிபதி குருவின் பார்வை ,
மேலும் காரகன் குரு ராகு கேதுவுடன் அமர்ந்து கெட்டுப்போய் உள்ளார் ,
3 .விரயாதிபதி செவ்வாயின் பார்வையும் ஐந்தாம் இடத்தின் மீது உள்ளது ,
ஐந்தாம் இடமும் காரகனும் கேட்டு போனதால் ஜாதககிக்கு குழந்தை இல்லை
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
வணக்கம்
ReplyDeleteதங்கள் புதிருக்கான பதில்
ஜாதகி ரிஷப லக்கினம், கடக ராசி , ஆயில்ய நக்ஷத்திர காரருக்கு குழந்தை பேரு அமையாமல் போனதற்கான காரணங்கள்
குழந்தை பேரு அமைய ஜாதகியின் ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் இவற்றை பார்க்க வேண்டும்.
இதில் ஜாதகியின் ஐந்தாம் இடத்தில் ராகு நின்று ஐந்தாம் இடத்தை செயலற்று போக செய்தது மேலும் ஐந்தாம் இடத்தின் மீது எட்டாம் அதிபதி குருவ்யுடன் சேர்ந்த பனிரெண்டாம் அதிபதி செவ்வாயின் பார்வை மேலும் ஐந்தாம் இடத்தை மோசம் செய்தது. மேலும் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டத்தில் ஐந்தாம் அதிபதி புதன் பாதகாதிபதி சனியின் பிடியில் உள்ளார் மற்றும் நவாம்ச கட்டத்தில் புதன் கேது வுடன் கூடிய நிலை அனைத்தும் ஐந்தாம் இடத்தை சேத படுத்தியது.
ஒன்பதாம் இடம் லக்கின அதிபதி யுடன் சனி இருந்தாலும் குழந்தை பேற்றினை தர இயலவில்லை ஏனென்றால் பாதகாதிபதி யாக சனியே உள்ளதால் அவரால் சரியாக செயல் பட இயலவில்லை. மேலும் நவாம்சத்தில் ஒன்பதாம் அதிபதி சனி மாந்தி கூட்டணி உள்ளதால் அவரால் குழந்தை பேற்றினை தர இயலாத நிலையே உள்ளது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
வணக்கம் ஐயா. புத்திர பாவமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து கிரகண தோஷமுடைய குரு மற்றும் விரையாதிபதி செவ்வாய் பார்வை பெறுகிறார். ரிஷப லக்னத்திற்கு குரு எட்டுக்குடையவரும் எதிரிடை கிரகமுமாவார். புத்திர பாவாதிபதி புதன் ஆறுக்குடையவர் பாதகாதிபதி உடன் பாதக ஸ்தானத்தில் இருந்து பலமிழந்தார்.பாதகாதிபதி சனி பகவான் பார்வை குரு பகவான் மேல் விழுந்தது குழந்தை பேறு இல்லாத நிலைக்கு ஜாதகரை தள்ளி விட்டது.
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு வணக்கம், லக்னாதிபதி சுக்ரன் மற்றும் 5க்குடைய புதன் இரு கிரகங்களும் ஆட்சி பெற்ற பலமான சனியின் வீட்டில் அமர்ந்தது. மேலும் குரு செவ்வாய் மற்றும் கேதுவுடன் கூட்டணி இவை இரண்டுமே குழந்தைப்பேறை கெடுத்துவிட்டன.
ReplyDeleteGud evening sir,
ReplyDelete5th house occupied by malefic raghu.
5th house lord is conjunction with saturn.
puthira karagan "Guru" is conjunction with Malefic kethu and sevai
in Navamsam also 5th house lord bhudan is conjunction with malefic kethu.
Thanks.
ரிசப லக்கினம், கடக ராசி ஜாதகி.
ReplyDeleteஅவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஜாதகப்படி என்ன காரணம்?
1) புத்திர ஸ்தானமான கன்னி ராசியில் ராகு நங்கூரமிட்டு அமர்ந்துள்ளார்.
2) புத்திர ஸ்தானாதிபதி புதன் மற்றும் இலக்கினாதிபதி சுக்கிரன் கத்திரியின் பிடியிலுள்ளனர்.
3) புத்திர காரகன் குருவும், செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் கத்திரியின் பிடியில் அகப்பட்டு வலுவிழந்து உள்ளார்.
புத்திர ஸ்தானம் வலுவிழந்து உள்ளதால் ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
வணக்கம், கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் 1,5,9 அனைவரும் பாதக ஸ்தானத்தில் இருந்து பாதிக்க பட்டு உள்ளனர், மேலும் 5ல் ராகு, காரகன் குரு கேதுவுடன், 5ம் வீட்டுக்கு கொடிய எதிரியானா செவ்வாய் சேர்க்கை, ஆகையால் குழந்தை இல்லை.
ReplyDeleteபுத்திர காரகன் குரு கேதுவுடன் மற்றும் சனியின் பார்வையில்
ReplyDelete5ஆம் வீட்டில் ராகு
5ஆம் அதிபதி புதன் சனியுடன்
இந்த அமைப்புகளால் குழந்தை இல்லை
ஐந்தாம் வீட்டுக்காரன் புதன் சனியின் பிடியில் என்று இருக்க வேண்டும் ஐயா. சுக்ரன் என்று கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஐந்தாம் வீட்டுக்காரன் புதன் சனியின் பிடியில் என்று இருக்க வேண்டும் ஐயா. சுக்ரன் என்று கொடுத்துள்ளீர்கள்.////
கவனக்குறைவு. திருத்தன் செய்து விட்டேன். தவறைச் சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!