13.3.20

Astrology: Quiz: புதிர்: திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!

Astrology: Quiz: புதிர்: திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரம். திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார், எத்தனையோ சிபாரிசுகள் வைத்தும் தன் பெற்றோர்களை விட்டு வந்து தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். கணவனின் மனநிலைமையை எண்ணிப் பாருங்கள்!

அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 15-3-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. அன்புடன் வணக்கங்கள்!
    ஜாதகி 31-10-1973 காலை 10 மணிக்கு பிறந்தவர்.தனுசு லக்கினம்.
    லக்கினாதிபதி குரு நீச்சம். 2மிடம் கெட்டுள்ளது.
    6 மற்றும் 8ம் அதிபதிகள் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து ராகு மாந்தியுடன் கூட்டாக அமர்ந்து லக்கினத்தை கெடுத்துள்ளனர்.
    சனியும் கேதுவும் இணைந்து 7ல் அமர்ந்து 7மிடத்தையும் லக்கினத்தையும் கெடுத்துள்ளனர்.
    7ம் அதிபதி சயன ஸ்தானமான 12ல் அமர்ந்ததுடன் செவ்வாயின் பார்வையும் உள்ளதால் 12மிடமும் கெட்டது.
    திருமண யோகமற்ற ஜாதகம்
    அன்புடன்
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  2. ஐயா

    சுக்கிரன் உடன் ராகு மற்றும் மாந்தி சேர்ந்து உள்ளது . 2 ஆம் அதிபதி சனி பகவான் உடன் கேது சேர்ந்து கெட்டு விட்டது . 7 ஆம் அதிபதி 12 இல் மறைந்து விட்டார். லக்கின அதிபதி யும் 2 இல் நீச்சம் ஆகி விட்டார் . எனவே அம்மணி குடும்ப வாழ்க்கையை மறுத்து விட்டார்.

    Thank you
    C. Jeevanantham.

    ReplyDelete
  3. ஜாதகர் 31 அக்டோபர் 1973 அன்று காலை 11 மணிக்குப்பிறந்தவர் பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்ட்டேன்.

    லக்கினத்திலேயே ராகு: லக்கினத்திலேயே 6,8 அதிபர்கள்;லக்கினத்திலேயே மாந்தி. 7ம் இடத்திற்கான புதன் 12ல் மறைவு;7ம் இடத்தில் சனி கேதுவுடன்;வக்கிரம் அடைந்த சனி.

    சுக்ரன், களத்த்ரகாரகன் ராகுவால் பாதிக்கப்பட்டார்.மாந்தியால் பாதிக்கப்பட்டுள்ளார்;

    7ம் அதிபன் புதன் வக்கிரம்.7ம் இடத்திற்கு 20 பரல் மட்டுமே.
    நவாம்சத்தில் 6,8 அதிபர்கள் 7ம் இடத்தில்.
    இந்தக்காரணங்களால் திருமணம் முறிந்தது

    ReplyDelete
  4. வணக்கம்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிர் வந்து உள்ளது

    தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்

    1. தனுசு லக்கினம் , தனுசு ராசி ஜாதகி கொண்ட விடாப்பிடியான பிரிவிற்கான காரணங்கள்

    2. பொதுவாக திருமண வாழ்வை தீர்மானிப்பது இரண்டாம் இடம், ஒன்பதாம் இடம் மற்றும் ஏழாம் இடம் ஆகும்

    3. இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி இரண்டிற்கு ஆறு மற்றும் சனி அமர்ந்த நிலையில் இருந்து எட்டு என்ற நிலையில் உள்ளார். இது நீண்ட திருமண பந்தத்திற்கு உகந்ததல்ல.

    4. மேலும் இரண்டாம் இடத்தில் லக்கின அதிபதி குரு நீசமாக உள்ளார். லக்கினத்திலேயே அமர்ந்த மாந்தி குண கேட்டை கொடுத்தது மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு அதனை அதிக படுத்தியது

    5. ஏழாம் இடத்து அதிபதி புதன் ஏழிற்கு ஆறில் மறைந்து நல்ல பலன்களை தர இயலவில்லை, மேலும் ஏழில் சனி மற்றும் கேது கெட்ட பலன்களையே தந்தது.

    6. ஒன்பதாம் இடத்து அதிபதி சூரியன் செவ்வாயின் நேரடி பார்வையால் நல்ல பலன்களை தர இயலவில்லை

    மேற்கூறிய காரணங்களினால் நீண்ட திருமண வாழ்வு ஜாதகிக்கு இல்லாமல் போனது.

    நன்றி
    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்!
    1>லக்னாதிபதி குரு 2ல் அமர்ந்து நீச்சம் குடும்பம் பாதிப்பு
    2>2ஆம் அதிபதி சனி தன் வீட்டுக்கு 6ல் கேதுவுடன் சேர்க்கை
    3>உபயோகமாக லக்னத்திற்கு 7ஆம் அதிபதி பாதகாதிபதி ஆகும் புதன் 12ல் அமர்ந்து சுகத்தை கெடுத்தது புதன் தன் வீட்டுக்கு 6ல்.
    4>7ல் அமர்ந்த கிரகம் சனி மற்றும் கேது ஆகும். சனி லக்ன அசுபர் மற்றும் இயற்கை அசுபர் கேது இயற்கை அசுபர் 7ஆம் இடம் பாதிப்பு.
    5>கலஸ்திரக் காரகனான சுக்கிரன் கேது சாரம் பெற்றுள்ளார்.
    6>கணவன் காரகனான செவ்வாய் கேது சாரம் பெற்று ஆட்சி பலத்தில் உள்ளதால் கணவனை அமைத்துக் கொடுத்தார் சனி கேதுவால் பிரிக்கப்பட்டது.
    7>மாங்கல்ய ஸ்தானமான 8ஆம் அதிபதி லக்னத்தில் உள்ளதால் உண்டு
    8>புதன் அமர்ந்த சாரம் தவிர அனைத்து கிரகங்களும் அசுபர் சாரம்.
    9>திருமணத்திற்கு உண்டான 2ஆம் இடம் 7ஆம் இடம் 12ஆம் இடம் செவ்வாய் சுக்கிரன் பாதிப்பு.
    10>பாக்யாதிபதியான சூரியன் நீச்சம்.

    இப்படிக்கு
    அடியேன் யுவராஜ்.

    ReplyDelete
  6. ஒரு அற்புதமான ஜாதகம் இன்று. என்னைப் பொருத்தமட்டில் இதுப் போன்ற ஜாதகர்கள் இருக்கின்றார்களா என்று ஒரு ஐய்யமே. நான் ஜாதகம் பார்ப்பதில் அரைகுரைகூட இல்லை. வெறும் ஓரிரு பாடங்களை அதிலும் ஒரிரு விடயங்களை மட்டும் ஞாபகம் வைத்திருப்பவன். எனக்கு என்ன தேன்றுகின்றது இந்த ஜாதகத்தில் என்றால் லக்னத்தில் சந்திரனும், சுக்கிரனும், எப்போதும் உசிப்பி விடும் பாபி ராகுவும், மொத்தமாக வீட்டின் பலனை கெடுக்கும் மாந்தியும் உள்ளனர். முதலிரு கிரகங்களால் தோற்றத்தில் அழகும், நிறமும் சுந்தரமானவலாக இருப்பாள். இரண்டாம் அதிபதி 7 இல். உடன் ஞானகாரகன் கேது கூட்டனி. ஏழாம் அதிபன் புதன் 12‍ல் மறைந்து அந்த வீட்டின் அதிகாரத்தை மறைத்தான். அதை வழினடத்தும் முடவன் நவாம்சதிதில் ஆட்சிப் பெற்றதால் ராசியில் முழு பலத்துடன் செயல் பட்டு, ஜாதகிக்கு பாதி நன்மையும், பாதி கஷ்டமும் தரவல்லவன், ஆனால் உடன் கேது, எதயும் நல்லபடி நடக்கவிடாமல் காலை வாரி ஞானம் தருபவன். இரண்டாம் வீட்டின் மேல் சனியின் பார்வைப் பட்ட குரு. இந்த ஜாதகத்தில் யோககாரகன் சூரியன், நீசமாகி வாழ்வை பெரிய சந்தோஷ்மில்லாமலாக்கினான். சூரியன் கெட்டதானால் ஜாதகியின் பெற்றோர்கள் இவரை அடித்து வழற்காமலும், சொல்லிக்கொடுத்தும் வழற்க மாட்டார்கள், குறிப்பாக சூரியனான தந்தை. தாயாரின் பேச்சு பெரிதும் செல்லுபடியாகாது. ஆட்சிபெற்ற செவ்வாய், பெண்ணிற்க்கு தனித்து நின்றாலும் ஆலுமையையும் உடன் சிரிய தைரியத்தையும், திமிரையும் கொடுத்திருப்பான். புதன் மறைந்திருப்பாதாலும், அமர்ந்தவீட்டினதிபதி செவவாய் ஆட்சியென்பதாலும், படிப்பில் அதிகபட்ஷ‌ம் ஏதாவது ஒரு டிகிறி. அதுவே அதிகம். அரிவு ஆட்சிபெற்ற செவ்வாயின் பலனாலும், கெட்டுப்போன சந்திரனாலும் எகப்பட்ட மனப் போராட்டமும், ஏகசிந்தனையுமிருக்கும். எகத்திற்கு என்னங்களை அசைப்போடுவார், செவ்வாய் பேசவும் வைப்பார்.
    நவாம்சத்தில் 7‍ம் வீட்டில் எதிரும் புதிருமாய், சுக்கிரனும், பிரகஷ்பதியும். செட்டே ஆகாத துனைவனை இது ஏற்படுத்தும். இரண்டாம் திருமணம் செய்தால் மனம்புரிந்தவனான நல்ல துனைவனாகவும் வரலாம். நவாம்சத்தில் 10‍ல் புதனுடன் கூடிய மனோகாரகன், பண‌ம் சம்மந்தபட்ட‌, ஜீவனாம்சம், தொழில் சார்ந்த விஷயங்களில் மனதை உருத்தி அலைக்கழிக்கும்.

    அப்புறம் திசா புக்தி. சின்னவயதிலேயே சுக்கிர திசை. குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும். சுக்கிரனோடு ராகு வேரு. சொல்லவா வேண்டும். அனேகமாக சுக்கிரதிசையிலேயே திருமனம் செய்திருந்தால் (அதாவது 21 வயதுக்குல்) வாழ்க்கையின் கடைசி 20 ஆன்டுகள் மீண்டும் சுகமாக வாழ்வார். ஆனால் என் கருத்து இவர் சூரிய திசையிலே திருமணமானவர். அதான் கனவனை பிரிந்துவிட்டார். இல்லையென்றால் கனவனோடு ஈடுபாடு இல்லாமல், சண்டை சச்சரவோடுமட்டும் இருந்திருப்பார்.

    எனைப் பொருத்த மட்டில் இத்தகைய ஜாதகர்கள் நடந்த நல்லதும், கெட்டதையும் அசைப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள். கறைப்பவர் கரைக்கவேண்டும். சொன்னால் இவர்களுக்கு புரியும். ஆனால் செவ்வாயினால் ஏதாவது ஒரே ஒரு விசயம் மட்டும் அறிவை ஆட் கொல்லும். அதை அறிந்து நிவர்த்தி செய்தாலேப் போதும். பிறட்ஷனை முடிந்துவிடும். எல்லோரும் கடவுலின் பிள்ளைகலென்றாலும், இவர்கள் முற்பிறவியின் வினைப்பயனாக எல்லாம் கொண்டுவந்தும் நிம்மதியின்றி வாழ வேண்டியிருக்கும்.

    சரி விஷயத்திற்கு வருவோம், எப்படி இருக்கிறது எனது கற்பனை. :)

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா! கொடுக்க பட்ட ஜாதகத்தில் லக்கின அதிபதி குரு நீச்சம். 7ல் சனி,கேது, களத்திர அதிபதி சுக்கிரன், குடும்ப அதிபதி சந்திரன் ராகுவால் பாதிப்பு, மேலும் 7,12 ம் இடம் பாதிப்பு உள்ளாயிருக்கு எனவே படுக்கை சுகம் இல்லை. 5ல் ஆட்சி பெற்ற செவ்வாய், காரகன் குரு பாதிப்பு. இவைகளால், பிரிவு ஏற்பட்டு உள்ளது. நன்றி.

    ReplyDelete
  8. ஐயா ,
    கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி குரு இரண்டில் நீசம் அது குடும்ப ஸ்தானத்திற்கு உரிய வீடு
    2.லக்கினத்தில் 6 ,8 ஆம் அதிபதிகளின் சேர்க்கை மாந்தியுடன்,
    3.௩. எழில் சனி கேது
    ஏழாம் அதிபதி புதன் பனிரெண்டில் மறைவு எல்லா கிரகங்களும் திருமணத்திற்கு எதிராகவே அமைத்துள்ளன ஆகவே ஜாதகிக்கு மன வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  9. தனுசு லக்கினம், தனுசு ராசி ஜாதகி.
    அவர் திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார்,அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
    1) லக்கினாதிபதியும், ராசியாதிபதியுமான குரு பகவான் 2மிடத்தில் நீசமடைந்துள்ளார்.
    2) குடும்பாதிபதி சனி 2மிடத்திற்கு 6மிடமான களத்திரத்தில் அமர்ந்து கேதுவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
    3)களத்திராதிபதி புதனோ 12மிடமான விருச்சிகத்தில் மறைந்து கத்திரியின் பிடியுலுள்ளார்.
    4) பாக்கியாதிபதி சூரியனும் நீசமடைந்துள்ளார்.
    5) லக்கினத்தில் மாந்தி +ராகு+சந்திரன்+ 6ம் அதிபதி சுக்கிரன் கூட்டணியில் ஜாதகியின் பிடிவாதத்தன்மை அதிகமாகி விட்டு கொடுக்கும் மனநிலை இல்லாமற் போனது.
    மேறகண்ட கிரக நிலை காரணமாக, ஜாதகி திருமணமாகி ஆறே மாதத்தில் எக்காரணமுமின்றி தன் கணவனை விட்டு பிரிந்து, பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    ReplyDelete
  10. sir, 7th house has sani and kethu puthan in 12th house lagana is having 8th house moon moon got sani vision sun neecham lagana is having mandhi that is why

    ReplyDelete
  11. 1. 2ம் அதிபதி 2க்கு ஆறில் மறைவு
    2. 2ல் நீச கிரகம்
    3. 7ல் சனி கேது 'பற்றற்ற நிலை'
    4. அஷ்டக சஷ்டக அதிபதிகளின் 7ம் பார்வை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com