27.2.20

சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா?


சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா?

*ஒரு தலை ராகம்* 1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம் .

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் அவற்றோடு நடிப்பு, ஒளிப்பதிவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு… வெகு ஜன மக்களின் பேராதரவையும் பெற்ற  டி.ராஜேந்தர் என்ற சகலகலாவல்லவனை தந்த படம் அது .

நாயகன் ராஜாவாக சங்கரும், நாயகி சுபத்ராவாக ரூபாவும் "ஒரு தலை ராகம்' படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது. மற்றும் உடன் பயின்ற நண்பர்களாக உஷா, தியாகு, சந்திரசேகர்,ரவீந்தர், தும்பு கைலாஷ் போன்ற புதுமுகங்கள் அனைவரும் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திற்கு அருமையாக பொருந்தியதால் படம் மிக யதார்த்தமாக அமைந்தது.

 படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதிய டி.ராஜேந்தரே பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார். "கடவுள் வாழும் கோவிலிலே', "வாசமில்லா மலரிது', "நான் ஒரு ராசியில்லா ராஜா', "இது குழந்தை பாடும் தாலாட்டு', "என் கதை முடியும் நேரமிது', "கூடையிலே கருவாடு' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை பல மாதங்களுக்கு முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.

 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆண் குரல்தான். பெண் குரல் பாடல் ஒன்றுகூட படத்தில் கிடையாது. காதல் என்ற பெயரில் நாயகனும் நாயகியும் பின்னிப் பிணைவதுபோன்ற காட்சிகளைக் கொண்ட படங்களுக்கு மத்தியில் நாயகனின் சுண்டு விரல்கூட நாயகியைத் தீண்டாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்ட "ஒரு தலை ராகம்' படத்தை ரசிகர்கள் உச்சியில் வைத்துதான் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்தில்  நடித்த ஷங்கர் ஒருதலை ராகம் ஷங்கர் என்ற பெயரிலேயே இன்றும் அறியப்படுகிறார் .

 "ஒரு தலை ராகம்' முதலில் ரிலீசானபோது தியேட்டர்கள் காற்று வாங்கியது. முதல் ஒரிரு நாட்களில் மிகச் சிலரே வந்து படம் பார்த்தார்கள். படம் பார்த்தவர்களின் வாய்வழி விமர்சனத்தால் கூட்டம் வர ஆரம்பித்தது. இரண்டாவது வாரத்தில் திரையரங்கை விட்டே தூக்குவதாக இருந்த படத்துக்கு மூன்றாவது வாரத்திலிருந்து டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்லூரி மாணவ மாணவியர் திருவிழாபோல் கூட்டம் கூட்டமாக "ஒரு தலை ராகம்' ஓடும் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்ததன் விளைவு, முதல் வாரம் நொண்டியடித்த படம் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதுடன் சில அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது. ஒரு வருடம் ஓடிய மிகச் சில தமிழ்ப்படங்களின் பட்டியலில் முற்றிலும் புதியவர்கள் பங்கு கொண்ட "ஒரு தலை ராகம்' படமும் இடம் பிடித்தது.
-------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir new information to hear about cine field thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. //இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.// 2009 ‍இல் இருந்து காத்து நிற்கின்றேன். எனக்கென்று யாரும் எதுவும் இது வரையில் தரவில்லை.. முருகேசனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் எனக்கு இது வரை ஏனோ வாய்க்கவில்லை.

    மேங்கோப்பு மேனாப் பற்றி கூகுலாரிடம் கேட்டால் அரை டஜன் ஆண்கள் பெயரையும், அரை டஜன் பெண்கள் பெயரையும் சொல்கின்றார். இந்த ஒரு டஜனில் எனக்கென்று முன்மொழிய ஒருவர் கூட இதுவரையில்லை என்றென்னும் பொழுது...

    ReplyDelete
  3. நல்ல பதிவு. ஆனால் தலைப்பில் உள்ள படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? ம்.... ராஜேந்தர் என்றாலே வேறு ரகம் தான். வாயிலேயே இசையமைப்பாரே? சிறப்பு.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  4. தெரிந்த விவரங்கள் ஆயினும் சுவாரஸ்யமானவிவரங்கள்.  இதில் இயக்கம் தொடர்பாகவோ, இசை தொடர்பாகவோ ராஜேந்தருக்கும் இன்னொருவருக்கும் (AA ராஜ் என்று ஞாபகம்) சண்டை வந்தது...   அப்புறம் அவர் தணியாத தாகம் என்று நினைக்கிறேன் சில அல்லது ஒரு பாடம் செய்து காணாமல் போனார்.

    ReplyDelete
  5. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir new information to hear about cine field thanks sir vazhga valamudan/////

    variety யாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவையும் சேத்துப் பதிவிடுகிறேன். நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Yes. I was 31 then.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  7. /////Blogger sundari said...
    good afternoon sir./////

    வணக்கம் சகோதரி!!!!

    ReplyDelete
  8. /////Blogger Th.Sabharinaathan said...
    //இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.// 2009 ‍இல் இருந்து காத்து நிற்கின்றேன். எனக்கென்று யாரும் எதுவும் இது வரையில் தரவில்லை.. முருகேசனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் எனக்கு இது வரை ஏனோ வாய்க்கவில்லை.

    மேங்கோப்பு மேனாப் பற்றி கூகுலாரிடம் கேட்டால் அரை டஜன் ஆண்கள் பெயரையும், அரை டஜன் பெண்கள் பெயரையும் சொல்கின்றார். இந்த ஒரு டஜனில் எனக்கென்று முன்மொழிய ஒருவர் கூட இதுவரையில்லை என்றென்னும் பொழுது...//////

    நம்பிக்கையோடு இருங்கள், காலம் ஒரு நாள் கனியும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்!!!!

    ReplyDelete
  9. /////Blogger சிகரம் பாரதி said...
    நல்ல பதிவு. ஆனால் தலைப்பில் உள்ள படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? ம்.... ராஜேந்தர் என்றாலே வேறு ரகம் தான். வாயிலேயே இசையமைப்பாரே? சிறப்பு.
    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்///

    உங்கள் புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள் நண்பரே!!!!

    ReplyDelete
  10. /////Blogger ஸ்ரீராம். said...
    தெரிந்த விவரங்கள் ஆயினும் சுவாரஸ்யமானவிவரங்கள். இதில் இயக்கம் தொடர்பாகவோ, இசை தொடர்பாகவோ ராஜேந்தருக்கும் இன்னொருவருக்கும் (AA ராஜ் என்று ஞாபகம்) சண்டை வந்தது... அப்புறம் அவர் தணியாத தாகம் என்று நினைக்கிறேன் சில அல்லது ஒரு பாடம் செய்து காணாமல் போனார்.//////

    அப்படியா? தெரியவில்லை சாமி! தகவலுக்கு நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com