12.2.20

சினிமா: நடிகர் திலகமும் அவருக்குக் கிடைத்த அரிய பாராட்டுக்களும்!!!!


சினிமா: நடிகர் திலகமும் அவருக்குக் கிடைத்த அரிய பாராட்டுக்களும்!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாய்மொழியாக வந்தது!:

1
”ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர். ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு  வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ்  பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன்.
எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும்
நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக  அமர்ந்திருந்தார்.
நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா...இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் தந்தை முன், என் நடிப்பிற்கு,
திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.”

2
”எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர். ஒருநாள்  ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி,
என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு
உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ;
என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன். நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட
இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல.
உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு
பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் மனைவி  முன், எனக்கு கிடைத்த விருது.”

3
”'செவாலியர்' விருது எனக்கு கிடைத்திருக்கிற செய்தியை அறிந்த
இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), என்னை பாராட்டுவதற்காக மாலையோடு வந்தார். அவருக்கு வயது, 85. என் இத்தனை வெற்றிக்கும் காரணியாக இருந்தவர்களில் முதலாமவர் பெருமாள் முதலியார். பராசக்தி
படப்பிடிப்பின் போது என்னைத் திட்டியும், பேசியும், சிலர்
அலட்சியப்படுத்தியபோது, 'இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடாதே;
இதை, ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடு. நீ நிச்சயம் ஒரு
நல்ல  நிலைக்கு வருவாய்...' என்று என்னை உற்சாகப்படுத்தியவர்.
அதன்பின், 32 ஆண்டுகள் என்னுடைய வளர்ச்சியை கண்டு
மகிழ்ந்தவர். அப்படத்தின் இயக்குனர் (கிருஷ்ணன் பஞ்சு) நேரில் வந்து என்னை பாராட்டுகிறார் என்றால், இதை விட எனக்கு வேறு பெரிய
விருது எது?”

நன்றி!
*நடிகர் திலகம்* *சிவாஜி கணேசன்* .
*" கதாநாயகனின் கதை* *நூலில்* *இருந்து"....*
-----------------------------------------------------------------
கேட்டதில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir nice information to hear thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. மிக அருமையான இனிமையான அநுபவங்கள் நாமும் அவ்வுலகம் போய் வந்தோம்.

    பகிர்வுக்கு என்றும் அன்பும் நன்றியும் ஐயா.

    =====================
    அன்புடன்
    விக்னசாயி.
    ===============

    ReplyDelete
  3. ஐயா, சுந்தர சீனிவாசன் அவர்களின் blogger link address please

    ReplyDelete
  4. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir nice information to hear thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Excellent Sir//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger vicknasai said...
    மிக அருமையான இனிமையான அநுபவங்கள் நாமும் அவ்வுலகம் போய் வந்தோம்.
    பகிர்வுக்கு என்றும் அன்பும் நன்றியும் ஐயா.
    அன்புடன்
    விக்னசாயி.//////

    நல்லது. நன்றி விக்னசாயி!!!!

    ReplyDelete
  7. /////Blogger senthilmahesh said...
    ஐயா, சுந்தர சீனிவாசன் அவர்களின் blogger link address please/////

    தெரியவில்லையே சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com