17.1.20

Astrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாக படித்து கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 19-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. ஐயா வணக்கம்!
    1.லக்னாதிபதி சந்திரன் 7ல் செவ்வாய்யுடன் சேர்க்கை,செவ்வாய் 4ஆம் பார்வையாக தன் வீடான 10ஆம் இடத்தை பார்க்கிறார்.
    2.உயர் கல்விக்கு 4ஆம் இடம் ஆகும், அதில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் கேது சேர்க்கை,கேது வர்க்கோத்தமம்.உயர் கல்வி உண்டு.
    3.வித்தைக்காரகன் கல்விக்காரகன் புதன் நவாம்சத்தில் உச்சம்.
    4.ராகு/கேது வேற்று மொழி ஆகும்
    5.ராகு/கேது வர்க்கோத்தமம்
    6.வாக்கு ஸ்தானமான 2ஆம் இடத்தில் 6&9ஆம் அதிபதி குரு கேது சாரம் பெற்றுள்ளார். குரு நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார். அவர் 9ஆம் பார்வையாக 10ஆம் இடத்தை பார்ப்பதால் ஆசிரியர் பணி.குரு ஆசிரியர் .வேற்று மொழிக்கு இதுவும் காரணம்
    7.தொழில் காரகர் ஆன சனி நவாம்சத்தில் உச்சம் சுய சாரம் பெற்றுள்ளார்.
    8.ராகு திசையில் இவை சாத்தியம் ஆனது. ராகு 10இடத்தில் அவர் வர்க்கோத்தமம். அந்த ராகு கேது சாரம் பெற்றுள்ளார். எனவே கேது 4ஆம் இடத்தில் உயர் கல்வி கேது வர்க்கோத்தமம் .

    இப்படிக்கு
    அடியேன் யுவராஜ்

    ReplyDelete
  2. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியடன் அமர்ந்து லக்கினத்தை தன பார்வையில் வைத்துள்ளார்
    2 .கல்வி விதைக்கு அதிபதியான புதன் சூரியனுடன் பூர்வபுண்ணியம்.நுண்ணரவிக்கான ஐந்தாம் இடத்தில
    3 .எட்டு ஒன்பதிற்கு அதிபதியான சனி ஒன்பதில் அமர்ந்ததால் தன் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் புலமை பெற்றுள்ளார்
    தாள்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா🙏

    கடக இலக்கினம், மகரம் இராசி ஜாதகம்.

    இரண்டாமிடத்தில் உள்ள குரு பகவானும், ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்த புதனும் தெலுங்கு மொழியில் புலமை பெற வைத்தனர். மேலும் குருவும் புதனும் அம்சத்தில் உச்சம் பெற்று பலம் பெற்றுள்ளனர். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் உச்சமும் சந்திரன் சேர்ந்து சந்திரமங்கள யோகம் பெற்று, தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி இதுவே காரணம் ஆகும்.

    பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...


    பணிவுடன்,
    முருகன் ஜெயராமன்,
    புதுச்சேரி.


    ReplyDelete
  4. அய்யா வணக்கங்கள்!
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகர் 5 டிசம்பர் 1967ம் ஆண்டு இரவு 10-30 மணியளவில் கடக லக்கினத்தில் பிறந்தவர்.லக்கினாதிபதி வளர்பிறை அதிலும் யோகசந்திரன் 7மிடத்தில் அமர்ந்து லக்கினத்தை பார்ப்பது மிக சிறப்பு.அதிலும் யோக காரகன் செவ்வாயுடன் இணைந்து 7மிடத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்ப்பட்டுள்ளது.சந்திரன் தன் சொந்த வீட்டையும் செவ்வாய் தன் சொந்தவீடான 10மிட மேஷத்தையும் பார்த்தது சிறப்பு.1,4,7,10 கேந்திரங்கள் பலம் பெற்றுள்ளன.
    குடும்பம் வாக்கு கல்வி ஸ்தானமான 2ம் வீட்டில் பாக்கியாதிபதி குரு சிம்மவீட்டில் அமர்ந்து விசேஷ பலம் பெற்று கல்வி ஞானம் அருளியுள்ளார். உயர்கல்வி ஸ்தானமான 4ல் அதிபதி சுக்கிரன் ஞானகாரகன் கேதுவுடன் இணைந்து அந்நிய மொழி, அந்நிய தேசம் வாசம் குறிக்கும் ஆகுவின் பார்வை பெற்றுள்ளதால் அந்நிய மொழியில் புலமை. ராகுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்று ராகு அமர்ந்த தன் வீட்டை தானே பார்ப்பதால் அந்நியத்தில் திறமை.
    அன்புடன்
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  5. வணக்கம்.
    கடக லக்கினம், மகர ராசி ஜாதகர்.
    அவரின் தாய் மொழி தமிழானாலும், தெலுங்கு மொழியில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக சிறப்புறப் பணியாற்றி பேரும் புகழுமடைய ஜாதகப்படி என்ன காரணம்?
    1) இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் வலிமையுடன் (சுய பரல்7) அமர்ந்துள்ளார். அவரின் 9ம் தனிப்பார்வை 10மிடத்திலும், அதில் அமர்ந்துள்ள ராகுவின் மேலும் உள்ளது.
    2) கர்ம ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான செவ்வாய் உச்சமடைந்து, லக்கினாதிபதி சந்திரனுடன் சேர்ந்து 7மிடமான மகர ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தன் 4ம் தனிப்பார்வையினால் 10மிடத்தையும், 8ம் தனிப்பார்வையினால் 2மிடத்தையும், அதில் அமர்ந்துள்ள குரு பகவானையும் பார்க்கிறார்.
    3) கர்ம காரகன் சனி நவாம்சத்தில் உச்ச பலத்துடன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
    4) பல்மொழி நிபுண காரகன் புதன் நவாம்சத்தில் உச்ச பலத்துடன், வாக்கு ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்ந்து,5மிடத்தில் அமர்ந்து நிபுணத்துவ யோகத்தை ஜாதகருக்கு வழங்கினர்.
    மேற்கண்ட கிரக நிலைமைகள் ஜாதகருக்கு தாய் மொழி தமிழானாலும், சுந்தரத் தெலுங்கினில் தேர்ச்சி பெற்று ஆசிரியாராக சிறப்புடன் பணியாற்றி நற்பெயரைப் பெற உதவின..

    ReplyDelete
  6. குரு 2ஆம் இடத்தில் (வாக்கு ஸ்தானம்) - நல்ல பேச்சு திறன்
    புதன் 5 ஆம் இடத்தில் கேந்திரத்தில் - நல்ல அறிவு
    மற்றும் 12 ஆம் அதிபதி - பிற மொழி பயிலும் அமைப்பு
    ராகு 10 இல் குரு பார்வையில் - ஆசிரியர் தொழில்

    ReplyDelete
  7. வணக்கம், இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி உச்சம் பெற்ற ராஜ யோகதிபதி செவ்வாய் உடன், மேலும் அந்நிய மொழிக்கு காரணமான ராகு செய்வாய் வீட்டில், அவரே 10ல் அமர்ந்து அந்நிய மொழி தொழிலை அமைத்து கொடுத்தார். நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com