13.12.19

Astrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ; நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா !!!!!


Astrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ;
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா !!!!!

ஒரு சகோதரியின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை.

திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை ----12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் அய்யா , ரிஷப லக்கனம் லகினத்தின் அதிபதி சுக்கிரன் லகினத்தில் கூடவே சனி பார்வை லகினத்துக்கு ,2-அம் இடம் குடும்பஸ்தானம் செவ்வாய் ,தீவிர மாந்தி கூடவே ,2-க்கு உடையவன் புதன் 12-இல் பகை கிரகம் கூடவே சூரியன் ,கேது .2-அம இடம் பாதிப்பு ,7-அம இடம் சனி 7-க்கு உடையவன் 2-இல் மாந்தி உடன் கணவன் குறிக்கும் செவ்வாய் பலம் இழந்து உள்ளால் .12-அம் இடம் கட்டில் சுகம் அங்கே சுட்டு எரிக்கும் சூரியன் , கேது ,புதன் ஒருவருக்கும் பகை கட்டில் சுகம் என்பது இலலாம போய் விட்டது .இதுவே அவருக்கு திருமணம் கை கூடாமல் போய் விடத்துக்கு காரணம் .

    நன்றி நன்றி ஸ்ரீ குமரன்
    9655819898

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்!
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகி மே மாதம் 10ம் தேதியில் காலை 08-15 மணியளவில் பிற்ந்தவர்.
    ரிஷப ல்க்கினம். கன்னி ராசி. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அம்ர்ந்துள்ளார்.2 - 12 ம் பதிகள் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை.குடும்ப வாழ்க்கையை குறிக்கும் 2ம் வீட்டில் செவ்வாய். சந்திரனுக்கு 2ம் வீட்டில் ராகு. குடும்ப வாழ்வு அமைவது கடினம்.லக்கினத்திற்க்கு 7ல் சனி பகை வீட்டில். ராசிக்கு 7ம் அதிபதி குரு ராசிக்கு 12ல் மறைவு.7ம் வீட்டிற்க்கோ 7ம் அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை.திருமணம் வாய்ப்பில்லை.
    ஜாதகி இருப்பு திசை சூரி 2வ + சந் 10வ + செவ் 6வ + ராகு 18வ + குரு 16வ = 52.
    ஆக 52 வயது வரை யோகமற்ற தசா புத்திகள் நடைபெற்றதால் திருமணம் அமையவில்லை.திருமண பருவ கால்த்தில் 18 வயது முதல் அட்டமாதிபதி குருவின் சாரம் பெற்ற ராகு தசையும் அடுத்து வந்த அட்டமாதிபதி குருவின் தசையும் திருமணம் நடத்த அனுமதிக்கவில்லை.
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. ஐயா கேள்விக்கான பதில்
    ௧.லக்கினாதிபதி சுக்கிரன் ஒன்றில் அது கேந்திர வீடு தன ஏழாம் பார்வையால் களத்திர வீட்டை பார்க்கிறார் காரகன் பாவ நாசம்
    2 ஏழுக்குரிய செவ்வாய் அந்த இடத்திற்கு எட்டில் மறைந்துள்ளார் மேலும் மாந்தியுடன் எழில் சனி
    3 .இரண்டுக்குரிய புதன் லக்கினத்திற்கு 12 இல் மறைந்துள்ளார்
    4 .பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தின் மேல் செவ்வாயின் பார்வை வேறு
    ஆகவே திருமணம் மறுக்க பெற்றது
    தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  4. ஜாதகி 10 மே மாதம் 1957ல் காலை 7 மணி 18 நிமிடத்திற்குப் பிறந்தவ்ர். பிறந்த இடன் சென்னை
    என்று எடுத்துக்கொண்டேன்

    1.7ம் இடத்தில் சனைச்சரன்.
    2. 7ம் டத்துக்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் அமர்ந்து மாந்தியுடன் கூட்டணி.
    3.7ம் இடத்து அதிபன் செவ்வாயும் சனைச்சரனும் 6க்ஷ் 8 க்காக நிற்பது.
    4. திருமணத்திகான காரகன் சுக்கிரன், செவ்வாய் சூரியன் கேதுவால் சூழப்பட்டுள்ளது.
    5.லக்கினமும் கேது சூரியன், செவ்வாயால் சூழப்பட்டுள்ளது.
    6.லக்கினாதிபதி சுக்கிரன் மேலும் காரகன் சுக்கிரன் சூரியனால் அஸ்தங்கதம்.
    7. குடுமப ஸ்தான அதிபதி புதன் மற்றும் குழந்தை ஸ்தான அதிபதியும் ஆன புதன் சூரியனால் அஸ்தங்கதம்.
    8.அஷ்டவர்கத்தில் 7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே
    9. பாவ பல அட்டவணையில் 7 ம் இடத்திற்குக் கடைசி 12வது ரேங்க்.
    10..திருமண வயதான 19 வயதில் ராகு தசா துவங்கி 18 ஆண்டுகல் 37 வயதுவரை.
    11 குருதசா 8ம் இடத்தின் அதிபதியின் தசா 16 ஆண்டுகல் உதவி செய்யவில்லை.

    ReplyDelete
  5. வணக்கம்.
    விருசப லக்கினம், கன்னி ராசி ஜாதகி. கடுமையான செவ்வாய் தோசமுள்ள ஜாதகம்.
    அவருக்கு 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
    1) லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே அமர்ந்தாலும், கத்திரியின் பிடியில் சிக்கி வலுவிழந்துள்ளார்.
    2) யோகாதிபதி சனி ஏழில் அமர்ந்து வக்கிர கதியிலுள்ளார். அவரின் நேர் பார்வையில் சுக்கிரன் மற்றும் 10ம் தனிப்பார்வயில் வக்கிர குரு உள்ளனர்.
    3) குடும்பாதிபதி புதன் 12ல் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார். 12ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
    4) ஜாதகிக்கு 19 வயதில் ஆரம்பித்த ராகு தசை 36 வயது வரை நடந்துள்ளது. அதன் பின் வந்த வக்கிர குரு தசையும் சாதகமாக அமையவில்லை.
    தசாபுக்திகள் சரியாக அமையாத காரணத்தால், கோச்சார கிரக பலன்களும் கிட்டவில்லை. தவிர சந்திரனும் குருவும் 1, 12 நிலையிலுள்ளனர். மேற்கண்ட காரணங்களால், 40 வயதாகியும் ஜாதகிக்கு திருமணம் கூடி வரவில்லை.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, 1) லக்னம், லக்னாதிபதி பாப கர்த்தாரி யோகத்தில் 2) 2ம் அதிபதியும், 12ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனதால், குடும்ப ஸ்தானம் வலுவிழந்து. மேலும் 2இல் மாந்தி.3) 7ம் இடம்-கர்த்தாரி யோகத்தில் மாட்டிய லக்னாதிபதி பார்வை.7ல் யோக காரகன் சனி இருந்தும் பயனில்லை.4)7ம் அதிபதி செவ்வாய் 2ல்.அவர் பரிவர்த்தனையால் பலமாகி, 12ம் அதிபதியின் அசுப பலனை கொடுக்கிறார்.5) பெண்களுக்கு 8ம் வீட்டையும் பார்க்க வேண்டும். கெட்டுப்போன செவ்வாயின் நேரடி பார்வை 8இடத்திற்கு.5) சந்திர லக்னத்தை வைத்து பார்த்தாலும் 7ம் இடத்திற்க்கு,8ம் அதிபதி செவ்வாய் பார்வையினால்,அசுபமான லக்னாதிபதி சந்திரன் பார்வை.2ல் ராகு, 7ம் அதிபதி குரு 12ல், 8ல் கேது மற்றும் 12ம்அதிபதி சூரியன். ஆகவே திருமணத்திற்கு எல்லா வழியும் அடைபட்ட ஜாதகம் நன்றி.

    ReplyDelete
  7. My comments

    1) லக்னாதிபதி பாபகர்தாரி யோகம்
    2) செவ்வாய் 2 - தோஷம்
    3) களதிற ஸ்தானம் - சனி. சனி பார்வையில் லக்னாதிபதி

    திருமணம் கடினம்

    ReplyDelete
  8. கொடுக்கப்பட்ட ஜாதகத்தில்
    1. களத்திர ஸ்னத்தில் சனி
    2. 2ம் வீட்டில் செவ்வாய்
    3. ராசிக்கு 7ம் அதிபதி குருவிற்கு சனியின் 10ம் பார்வை.
    4. ராசிக்கு 2ல் ராகு
    5. லக்கினத்திற்கு பாப கர்த்தரி
    6. மேலும் 19 முதல் 37 வயது வரை ராகு தசை. ராகு நன்மை செய்யும் இடத்தில் இல்லை. ராகுவிற்கு சுபர் சம்மந்தம் இல்லை. தனக்கு ஆகாத சூரியன் பார்வையில் ராகு. இவை அனைத்தும் திருமணம் ஆகாதற்கு காரணம். நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com