27.11.19

இவையல்லவா சிறந்த அறிவுரை!!!


இவையல்லவா சிறந்த அறிவுரை!!!

1
வாழ்க்கையில் தடுமாறி விழுந்தவனுக்கு ஆறுதல் கூறா விட்டாலும் பரவாயில்லை, அவமானப் படுத்தாதீர்கள்.

சூழ்நிலை உங்களை பதற்றப் பட வைக்கிறதா, இல்லை சூழ்நிலையையும் பதற்றப் படாமல் கையாளுகின்றீர்களா என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர் யார். ஒரு கட்டம் அப்படி என்றால் மறுகட்டம் இப்படி. ஏற்றம் இறைவன் பரிசு. இறக்கம் கர்ம வினைக்கு தீர்வு.

புத்திசாலித் தனமாக பேசுபவர்கள் குறைவு. புத்திசாலி என்று நினைத்து கொண்டு பேசுபவர்கள் தான் அதிகம்.

ஜால்ரா அடிப்பவருக்கு உடனடி மரியாதை கிடைக்கும் ஆனால் நிலைக்காது. தகுதி திறமை உள்ளவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் குறையாது.
--------------------------------------------------------------------------
2
"வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றி உங்கள் குடும்பமும், நண்பர்களும் உங்களை நேசிப்பது தான்" என்கிறார் உலகப் பணக்காரர் வாரன் பஃப்பட்.

"பலர் ஏகப்ட்ட பணம் சம்பாதித்து மிகப் பெரிய கட்டிடங்கள், தொழில்களை அமைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒருவரும் விரும்புவது கிடையாது என் கையில் அவை அனைத்தும் வீண் தான்.

அன்பு மட்டும் தான் உலகில் விலைக்கு வாங்க முடியாத பொருள். எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க முடியும். அன்பை வாங்க முடியாது. அன்பை அடைய நீங்கள் அன்பானவராக இருக்க வேண்டியது அவசியம். அதிகமாக அன்பை கொடுக்க, கொடுக்க அதிகமாக அது திரும்ப கிடைக்கும். அதிலும் உங்கள் குடும்பம், நண்பர்களின் அன்பை எத்தனைக்கு எத்தனை அதிகமாக அடைகிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்"

தனது சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல் இது..
-----------------------------------------------------------------------
3
திரும்பத் திரும்ப செய்வது தான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஓடுவது வெற்றிக்கு வழியாகாது.

யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவது தான் மனித இயல்பு. அப்படிக் கோபத்தை காட்டியும் நம்முடன் இருப்பவர்கள் நம் உறவினர்கள் மட்டும் தான்.

எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் உலகத்தை தான் நினைப்பது போல மாற்ற நினைத்து நிம்மதியை இழக்கிறார்கள்.

எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. அது சுயமரியாதைக்கு இழுக்கு.  முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை.

நிதானமாக சிந்தித்து செயல் படுவது, உறுதியோடு செயல் படுவது, கடுமையாக உழைப்பது என்று இருந்தால் மன நிறைவான வாழ்க்கை அமையும்.
----------------------------------------------------------------------------------
4
’ சலனப் பட்ட மனம்..''
..................................

சிறு கல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் *மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில் தான் முடியம்..*

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது.. ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது.

ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

சலனம் இல்லாத கிணற்றில். சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும்.

அதற்கு காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிக தெளிவாகத் தெரிகிறது. அது போலத்தான் நம் உள்ளமும்..

எந்தவித சலனம் இல்லாமல் இருந்தால் தான் நாம் எண்ணிய குறிக்கோளை எளிதில் அடையலாம்..

ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே கலந்து பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர்.

ஒரு கட்டத்தில் ஒருவன் களைப்பு அடைந்தான். ஆனால் பந்தயத்தில் தோற்பதை அவன் விரும்பவில்லை.

அதனால் மற்றவனை திசை திருப்பும் விதமாக தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அதை எடுக்க விரும்பிய மற்றவன் கவனம் தடுமாறியது..

இதற்கிடையில் தங்க ஆப்பிளை உருட்டி விட்டவன் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தான்..

ஆம்., நண்பர்களே..,

மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான்.. சலனத்திற்கு இடம் கொடுத்தால், நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது.
---------------------------------------------------------------------
5
உன் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் நீ இருக்காதே - உள்ளுக்குள் அழுது கொண்டு வெளியில் நீ சிரிப்பாய்.

போலி மனிதர்களை நம்பி நீ வாக்குக் கொடுக்காதே - நீ பொய்யனாக காண்பிக்க படுவாய்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்களை நம்பாதே - உன் முடிவிலிருந்து நீயே மாறி விடுவாய்.

மற்றவர்களின் குறைகளைப் பேசுபவர்களோடு சேராதே - ஒரு நாள் இதற்கு நீயும் இரையாக்க படுவாய்.

ஏமாற்றியவர்களோடு திரும்பவும் இணைந்து கொள்ளாதே - நீ மேலும் நோகடிக்கப் படுவாய்.

சரியான முடிவு எடுக்காமல் எந்த செயலிலும் இறங்காதே - உன் வாழ்நாள் முழுதும் நீ துயரப் படுவாய்.

உனக்கு சரி என்று தோன்றினால் யாருக்காகவும் நீ பின்வாங்காதே.
-----------------------------------------------------------------------------------
6
கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றாவிட்டால் கல்வி கற்றது வீண் விரயம் தான்.

தன்னை நேசிக்கும் கணவன் தன் பெற்றோரையும் மதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் விருப்பம்.

தர்மம் செய்ய பழகுங்கள். தவறு செய்ய பயப்படுங்கள். நல்லவை உங்களைத் தேடி வரும்.

தேவைப்படும் இடத்தில் பேசுங்கள். தேவையில்லாத இடத்தில் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

சுயநலம் அதிகமானால் நம்மை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி விடும். சுயநலத்துடன் பொதுநலம் சேரும் போது வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
----------------------------------------------------------------------------
7
பிரச்சினை வந்தால் கவலைப் படாமல், பிரச்னையை சமாளிக்க மனதை பக்குவப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த வரை பிறரிடம் உதவி கேட்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் முன்னேற முடியாது.

கணவனை கேட்டு முடிவெடுக்கும் மனைவியும், மனைவியிடம் எதையும் மறைக்காத கணவரும் நல்ல குடும்பத்திற்கான முன்மாதிரி.

நம்முடைய எண்ணம் செயல் யாவும் பிறருக்கு நன்மையும் பயனும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன தேவையோ, புரியுமோ அதை மட்டும் எடுத்து சொல்வது நல்லது. புரிந்து கொள்ள முடியாததை சொல்வதால் யாருக்கும் பயனில்லை.
--------------------------------------------------------------------------------
8
பெருமையைப் பகிர்ந்து கொள்ள பெற்றோர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மனைவி. செல்வத்தை பகிர்ந்து கொள்ள மக்கள். மனக் குழப்பம் தீர நல்ல நண்பர்கள். இவை அமைந்தால் இல்லறம் நல்லறமாகும்.

அடுத்தவருக்கு உதவ பணமோ வசதியோ அனுபவமோ கல்வியோ  அவசியமில்லை. அக்கறை இருந்தால் போதும்.

கணவன் மனைவி சண்டையில் இருவரது பெற்றோரும் விலகி இருந்தால் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு கிடைத்து விடும்.

வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக புரிதல் அவசியம். புரிதல் இருந்தால் பிரிதல் என்றுமே வராது.

ஆண்கள் பெரும்பாலும் மனைவியை விட மற்ற பெண்கள் அழகு என்று நினைப்பார்கள். பெண்கள் பெரும்பாலும்  கணவனை விட மற்ற ஆண்கள் புத்திசாலி என்று நினைப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
9
ஒருவர் திறமையை ஒருவர் ஊக்குவித்து, ஒருவர் கவலையில் ஒருவர் பங்கு கொண்டு, ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து, ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து, ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து, ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே நல்ல இல்லறம்.

சந்தித்த பல ஏமாற்றங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களும் ஏமாற்ற நினைப்பார்கள்.

ஒருவரின் கோபத்தை குறைக்க இன்னொருவரின் மௌனமே சிறந்த இல்லறம்.

உலகத்தில் யாரும் சந்தோசமாக இருப்பதாக சொல்லவில்லை. தானே புத்திசாலி என்று நினைப்பது போல் தானே துக்கமுள்ளவன் என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் முயற்சி செய்யாமல், எதுவும் உங்கள் விருப்பம் போல் தானாக நடக்காது.
----------------------------------------------------------------------------------------
10
ஆணும் பெண்ணும் எத்தனை சாதித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும், ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இனிய இல்லறம்.

பணத்தை தொலைத்தாவது வாழ்வைத் தேட வேண்டும். வாழ்வைத் தொலைத்து விட்டு பணத்தை தேடக் கூடாது.

உங்கள் மனதை சரியாக அறிந்தவர்கள், உங்கள் செயலை தவறாக நினைக்க மாட்டார்கள்.

சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்கக் கூடாது. பிறகு அந்த அவப் பெயர் நீங்காது.

சந்தோஷமோ துக்கமோ சமநிலையில் இருக்க பழகினால்,
===================================================================
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. அரும்பெரும் தத்துவ அறிவுக்குவியல்..........

    அருமை அருமை ஐயா..........

    பகிர்வுக்கு என்றும் அன்பும் நன்றியும்.......

    அன்புடன்
    விக்னசாயி..

    =============================

    ReplyDelete
  2. /////Blogger vicknasai said...
    அரும்பெரும் தத்துவ அறிவுக்குவியல்..........
    அருமை அருமை ஐயா..........
    பகிர்வுக்கு என்றும் அன்பும் நன்றியும்.......
    அன்புடன்
    விக்னசாயி../////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com