8.11.19

Astrology: Quiz: புதிர்: சொன்னாலும் கஷ்டமடா, சொல்லாவிட்டால் துக்கமடா!


Astrology: Quiz: புதிர்: சொன்னாலும் கஷ்டமடா, சொல்லாவிட்டால் துக்கமடா!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கார்த்திகை நட்சத்திரக்காரர். உடல் நலமின்றி இருந்தார் (Severe Health Problems) ஜாதகரின் 29 வது வயதில், அதாவது அவருக்கு ராகு திசையில் சனி புத்தி துவங்கியவுடன் உடல் நலக் கோளாறுகள் அதிகமாகி பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கத் துவங்கினாலும், பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டுத்தான் துவங்கினார்கள்,

கேள்வி இதுதான்: ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!

சரியான விடை 11-11-2019 திங்கட்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஜாதகர் 12 செப்டம்பர் 1968 அன்று காலை 10 மணி 17 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
    1. நோய்க்கான ஆறாம் இடம் ராகுவால் ஆக்கிரமிப்ப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே ராகுதசாவில் ஜாதகர் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
    2.ஆறாம் இடத்திற்கான குரு பாதக ஸ்தானம் ஆன சிம்மத்தில் அமர்ந்துசூரியனாலும் எரிக்கப்பட்டார். வலுவை இழந்தார்.
    3. லக்கினம் மாந்தியாலும் , ராசி நீச சனியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.,கர்ம ஸ்தான அதிபதி சந்திரன் நீச சனியால் பாதிக்கப்பட்டு இருவரும் லக்கினத்தைத் தங்கள் பார்வையில் வைத்துள்ளனர்.
    4.ஆயுள் காரகனான் சனி மேஷத்தில் நீசம் பெற்றார். வக்கிரமும் அடைந்தார்.
    5.எட்டாம் அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீசமும் பெற்றார். கேதுவாலும் பாதிக்கப்பட்டார்.
    6. ஆறில் அமர்ந்த ராகுவின் தசா, கர்மகாரகனான சனியின் புக்தியில் ஜாதகர் மிகவும் மோசமான நோய் வாய்ப்பட்டார்.

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியாரே ... கொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் துலா லக்கனம் ,லக்கனத்தில் மாந்தி , கஷ்ட பட்ட ஜீவனம் கூடவே சனி பார்வை சுபர் பார்வை என்பது லகினத்துக்கு இல்லை. கூடவே 6-இல் ராகு வேறு ருண ஸ்தானம் ,லகினத்துக்கு 1,க்கு 8க்கு குடையவர் அமர்த்த இடம் வேறு கெட்டு போய் நீச்சம் பெற்று கூடவே கேது கூட்டணி . மேற் சொன்ன காரணம் பொதுவாக ஒரு மனிதனுக்கு கஷ்ட வாழ்கை கொடுக்கும் . 6இல் அமர்த்த கிரகம் தசை ராகு வால் ஜாதகதர் கஷ்ட பட்டு உள்ளார் என்பது விதி அதேபோல் லகினத்துக்கு 11-அம அதிபதி பாதகாதிபதி சூரியன் நட்சத்திரம் கார்த்திகை சனி இன் வீட்டில் ..

    நன்றி ஸ்ரீ குமரன்
    9655819898

    ReplyDelete
  3. வணக்கம்

    தாங்கள் கொடுத்த ஜாதகரின் உடல் நல கேட்டிற்கான காரணங்கள் :

    துலா லக்கினம், கார்த்திகை நக்ஷத்திரம் , மேஷ ராசி ஜாதகர்

    பொதுவாக உடல் நலம் மற்றும் நோய் பற்றி அறிய ஜாதகரின் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தை பார்க்க வேண்டும்.

    இவரின் நான்காம் இடத்து அதிபதி சனி நீசமாக , வர்கோத்தமமாக லக்கினத்திற்கு ஏழில் சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து , தனது நீச பார்வையை லக்கினத்தின் மேல் செலுத்துகிறது. இது முதல் நிலை உடல் நல பாதிப்பிற்கான காரணம் ஆகும்.

    மேலும் ஆறாம் இடத்தில் நோய் பற்றிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து நோய் உருவாக்குவதை மேற்கொள்கிறது. இது தன்னுடைய தசையில் நோயினை உண்டாக தொடங்குகிறது.

    சனியும் நீச மாக வர்கோத்தமமாக உள்ளதால் ராகு தசை சனி புக்தியில் நோய் உண்டானது. மேலும் ஆறாம் இடத்து அதிபதி குரு துலாம் லக்கினத்திற்கு அசுப கிரகமாகும் . அது ஆறாம் இடத்திற்கு ஆறில் உள்ளது. மேலும் நவாம்சத்திலும் லக்கினத்தில் இருந்து ஆறாம் இடத்தில் மறைந்து உள்ளார்.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  4. துலா லக்கினம் மேஷ ராசி . லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன் நீச்ச பங்க அமைப்பில் இருந்தாலும் ராகு கேதுவின் பிடியில். ஆயுள் காரகன் சனி நீச்சம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். ஒன்பதாம் அதிபதி புதன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் உச்சம் பெற்று நீச்ச சுக்கிரன் மற்றும் கேதுவின் கூட்டணியில் உள்ளார். இவரது நோய்க்கான காரணத்தை ஆராய்ந்தால் ஆறாம் வீட்டில் உள்ள ராகு மற்றும் ஆறாம் பாவகத்தில் உள்ள வக்கிர சனி ஆறாம் வீட்டோன் குரு மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளதால் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டிருக்க கூடும். ஆறாம் வீட்டிற்கு ராகு, சனி மற்றும் செவ்வாய் அதை தீவிரப்படுத்த ஆறாம் வீட்டோன் குருவின் பார்வை இவருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியது.கோச்சார ஜென்ம சனி இதனை இன்னும் தீவிர படுத்தி அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவே .

    ReplyDelete
  5. ஐயா கேள்விக்கான பதில்
    l லக்கினாதிபதி விரயத்தில் (12ல்
    2 ஆறாம் அதிபதி குரு பதினொன்றில் (ஆறாம் இடத்திற்கு ஆறில்
    3 .லக்கினத்தில் மாந்தி
    4 .6ஆம் இடத்தில ராகு
    5 .நாலாம்திபதி சனி அந்த இடத்திற்கு நாலில் காரகன் பாவ நாசம் )
    6 .உடல் காரகன் சூரியன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து கேட்டு உள்ளார்
    ஆறில் அமர்த்த ராகு திசையில் சனி புத்தியில் உடல நல குறைவு ஏற்பட்டுள்ளது
    தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா🙏

    1. துலா இலக்கினம், மேச இராசி ஜாதகம்.

    2. உயிராகிய லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி விரய தானம் சென்றுள்ளார். லக்னாதிபதி ராசி மற்றும் அம்சத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு கெட்டுள்ளார். லக்னத்தில் மாந்தியும் லக்கினத்தின் மீது நீச சனியின் பார்வையும் கூடுதல் பாதிப்பு.

    3. நான்காம் இடாதிபதி சனீஸ்வரன் ராசி மற்றும் அம்சத்தில் நீசம் அடைந்துள்ளார். உடல் காரகனான சந்திரனும் ராசியில் நீசனோடும், அம்சத்தில் ராகுவுடனும் சேர்ந்துள்ளார்.

    இவ்விதம் உயிரும் உடலும் கடுமையாக ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஜாதகருக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

    பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....


    பணிவுடன்,
    முருகன் ஜெயராமன்,
    புதுச்சேரி.

    ReplyDelete
  7. ஜாதகருக்கு மாந்தி லக்கினத்தில் அமர்ந்து இருக்க, நீசச் சனி வர்க்கோத்தம நிலையில் மேலும் நீசனுக்குரிய அசுபத்ததன்மையினை ஜாதகருக்கு ஏற்படுத்துகின்றார்,

    இங்கு 6ம் வீட்டில் திசா நாதன் ராகுவும், சனியானவர் தனது முழுப் பார்வையினால் லக்கினத்தினை(உடல்) பார்ப்பது, ராகு திசை சனி புத்தி நடக்கும் போது ஆரோக்கிய நிலைக்கு சவாலானது.

    ReplyDelete
  8. அய்யா வணக்கங்கள்!
    ஜாதகர் 1968, செப்டம்பர் 12ம் தேதி காலை 10-30 மணியளவில் பிறந்தவர். துரதிருஷ்டமான ஜாதகம். துலா லக்கினம், லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீச்சம் அடைந்துள்ளார்.
    லக்கினத்திற்க்கு சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் உச்சமான 12ம் பதி புதனுடனும் கேது வுடனும் இணைந்து பலம் பெற்ற ராகுவின் பார்வையும் பெற்று கெட்டுவிட்டார்.
    நோயை குறிக்கும் 6ம் பதி குரு பதகாதிபதி சூரியனுடனும் செவ்வாயுடனும் இணைந்து ஜாதகரை நோயில் விழ வைத்துள்ளார். யோகாதிபதி சனி நீச்சமடைந்து தேய் பிறை சந்திரனுடன் இணைந்து லக்கினத்தை பார்த்து கெடுத்து விட்டார்.
    கேது கொடி பிடிக்கும் தோஷ ஜாதகம். பாவர்கள் அனைவரும் பலம் பெற்று சுபர்கள் அனைவரும் பலவீனமடைந்து விட்டதால் இந்த நிலை.
    ( இது போன்ற அமைப்பில் இருந்த எனது தம்பியை கடந்த மார்ச் மாதம் நாங்கள் இழக்க வேண்டியதாகி விட்டது )
    அன்புடன்
    -பொன்னுசாமி

    ReplyDelete
  9. வணக்கம்.
    துலா லக்கினம். மேஷ ராசி ஜாதகர்.
    கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோச ஜாதகம்.(லக்கினம் மட்டும் வெளியிலுள்ளது).
    ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?
    ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோகஸ்தானம் எனப்படும்.
    இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம்.
    ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள்மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும் .
    1) லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் நீசமடைந்து மறைவு.
    2) உடலிலில் தோன்றக்கூடிய அனைத்துவகையான நோய்களைத் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் விளங்குகிறது. அதில் ராகு அமர்வு மற்றும் அதன் அதிபதி குரு சிம்மத்தில் அமர்ந்து கத்திரியின் பிடியில் செயலிழந்து விட்டார்.
    3) 6மிடத்தில் அமர்ந்த ராகு அதிக அமிலம்சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளைநோய், குடல்புண், தோல் வியாதிகள் போன்றவற்றை அவரின் தசையில் ஏற்படுத்துவார்.
    மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு ராகு தசையில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பாதிப்ப்டைந்தார்.

    ReplyDelete
  10. பிறப்பு: 12/09/1968, 10:20 AM, Chennai.
    துலாம் லக்கினமாகி, லக்கினத்தை 6 இல் நீசமான சனி பார்க்க, லக்கினாதிபதி சுக்கிரன் நீச சனியுடன் இணைந்து பாபத்துவமான சந்திரனின் சாரம் வாங்கி, விரயஸ்தானத்தில் நீசமாகி, கேதுவுடன் 2 டிக்ரிக்குள் இணைந்து லக்கினமும் லக்கினாதிபதியும் வலுவிழந்த ஜாதகம். மேலும் 4 மற்றும் 5 க்குரிய யோககாரகனான சனியும் நீசமாகி, 9 க்குரிய புதன் கேதுவுடன் 5 டிக்ரிக்குள் இணைந்து 1, 5 9 ஆம் பாவம்களும் அதிபதிகளும் பலவீனமாகி உள்ளதால், உடல் நலக்குறை இருக்கும். லக்கினத்தை விட 6 ஆம் வீடு உச்சபுதனின் சாரம் பெற்று அமர்ந்த ராகுவினாலும் புதன் மற்றும் சுக்கிரனின் பார்வையாலும் வலுப்பெற்று ஜாதகரை நாள்பட்ட நோய்வாய் படுத்தியது. ராகு தசையில் ராகுவிற்கு வீடுகொடுத்த குரு தன் நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து அஸ்தமனாகி 6 க்கு 6 ஆம் வீடான 11 ஆம் வீட்டில் நிற்க, ரோஹஸ்தனாதிபதி குரு புத்தியில் உடல் நலம் கெடாமல், நீசசனி புத்தியில் உடல் நலக்கோளாறு அதிகமானது. ஜாதகருக்கு நீரிழிவு நோயால் சிறுநீரகங்கம் பாதிப்பு, கால் பாதம் அழுகல் மற்றும் நிணநீர் அமைப்பில் பிரச்சனை இருந்திருக்க வாய்ப்புள்ளது. கேது புத்தியில் ஆயுள் முடிந்திருக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com