2.9.19

அசத்தலான அறிவுரைகள்!!!!!


அசத்தலான அறிவுரைகள்!!!!!

1. மனிதனின் நல்ல பண்புக்கு காரணம், அவன் இருக்கக் கூடிய இடம், பழகக் கூடிய மனிதர்கள், அவன் தாய் தகப்பனார்.

2. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் நபரை பார்க்க போனால், அவரது குடும்ப நபர்களிடம் எப்படி நடந்ததென கேட்காதீர்கள், அதை சொல்லிச் சொல்லி அவர்கள் மனம் இடிந்து போகும், அதை மற்றவர்களிடம் கேளுங்கள், இவர்களிடம் ஆறுதல் மட்டும் சொல்லுங்கள்.

3. நம்மால் ஒருவருக்கு பிரச்சனைகள் வருகிதென்றால் அந்த இடத்தை விட்டு விலகிடனும் அது உறவானாலும் சரி, நட்பென்றாலும் சரி.

4. பிறரை எண்ணி தேற்றிக் கொள்வதும் மனம் தான். பிறரைப் போல் எண்ணி தாழ்த்திக் கொள்வதும் அதே மனம் தான்._*

5. நம் மதிப்பு தெரியாதரிடம் மரியாதையை எதிர் பார்ப்பது தவறு.

6.அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் சில வேளைகளில் உங்களை சிறந்த முடிவை எடுக்க அனுமதிக்காது._*

7.சோகமான நேரம் கூட சுகமாக மாறிப் போகும், வலிகள் கூட தொலைந்து போகும் நல்ல நண்பர்களுடன் இருந்தால்.

8.நீங்கள் உங்களை பற்றி நல்ல விதமாக உணராத வரை இன்னொரு நபரை நல்ல விதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை.

9. உறவு, நட்பு, தொழில் கூட்டாளி எதிலும் ஒருவரிடம் பழகும் போது பிடிக்கவில்லை எனில் ஆரம்பத்திலேயே விலகி விடுங்கள், அது இருவருக்குமே நல்லது.

10. பெண்ணிற்கு சிறந்த கல்வியை வழங்குவதோடு நல்ல துணையை அமைத்துக் கொடுத்து விடுங்கள். கல்வி அவளுக்கு புகழைத் தந்தாலும் புரிந்து கொண்ட கணவனால் மட்டுமே நிம்மதியை தர முடியும்.*

11. அநியாயத்தை தட்டி கேட்பதில் எல்லாருக்குமே விருப்பம் தான். ஆனால் அதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் கூட்டம் தான் நம்மை ஊமையாய் கடந்து விட செய்கிறது.

12. கொஞ்ச காலம் எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கி வைக்கலாம் என்று பார்த்தால், அது நம்ம கூடவே ஒட்டிக் கொண்டு வருகிறது.*

13. தெரியாததை தெரிந்து கொள்ள  வெட்கப் பட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதை விட, தைரியமாக எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொள்வது சிறந்தது.

14. சில ஆண்களின் எண்ணம், பெண்கள் அனைவரும் சுயநலவாதிகள் என்று. ஆனால் பல பெண்கள் தனக்கென வாழ்ந்ததே இல்லை.

15. பணக்காரராக இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். மற்றொன்று உங்களிடம் இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.*

16. ஒரு மனிதன் தன்னை மிகச் சிறந்தவராக எப்படி எல்லாம் தயார் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு நிறைய வழிமுறை வகுப்புகள் இருக்கின்றன, என்னவொரு பிரச்சினை எனில் ஒழுங்கற்ற, சீரற்ற ஒரு சமூக அமைப்பில் இருந்து கொள்வதால் இந்த வழிமுறைகள் எல்லாம் பயனற்றுப் போகின்றன.

17. தான் உண்டு தன் வேலை உண்டு" என்று இருப்பதற்கு மறுபெயரே சுயநலம்.

18. பிறரைப் பற்றி பொறமைப் பட நேரமிருந்தால், அதை உங்கள் அடுத்த உயர்வுக்கான சிந்தனையாய் மாற்றிக் கொள்ளுங்கள். பயனிருக்கும்.

19. *உங்களைக் குறைத்து மதிப்பிடுபவரிடம், உங்கள் உயரத்தை "விளக்கிக் கொண்டு" இருக்காதீர்கள்.*

20. தான் எந்த ஒரு வேலையும் செய்து கஷ்டப் படக் கூடாது என நினைப்பவர்கள் சோம்பேறியாகி விடுகிறார்கள்.

21. 🏵வாழ்க்கையில் நம்மை காயப் படுத்திய விஷயங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் தான் நம் முன்னேற்றத்திற்கான வழிகள்.

22. பெண்களின் திருமணதிற்கு "சீர்" செய்வதோடு, பெண்களின் திருமண வாழ்க்கையை "சீர்"  செய்வதே ஒரு சிறந்த தந்தையின் கடமையாகும்.

23. *மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி என்றும் மனம் சார்ந்தது தான்.*

24. நாம் கஷ்டப் படும் போது வருத்தப் படாதவர்கள், நாம் சந்தோஷமாக  இருக்கும் போது மட்டும் பொறாமைப் படுவார்கள்.

25._உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட முதலில் உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் உங்கள் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உங்கள் உணர்வுகள் தான்._*

26. _நாம் நடந்து கொள்ளும் முறையே நம்மை சிறப்பிக்கும்_*

27. உங்களின் அருமை தெரிந்தவர்களிடம்  கோபம் காட்டாதீர்கள்!

28. உங்களின் குணம் அறியாதவர்களிடம் மரியாதை எதிர் பார்க்காதீர்கள்!*

29. குறைகளை மட்டுமே கூறாதீர்கள்!

30. நிறைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறுங்கள்!*

31. பெற்றோருக்கு முதலில் பிள்ளையாய் இருங்கள்! நாட்டுக்கு நல்லவனாய் பிறகு மாறுவீர்கள்!

32. கைபிடித்தவளை கலங்க வைக்காதீர்கள்! காலக்கடைசியில் அவளே உங்கள் தாயாவாள் மறக்காதீர்கள்! 

33. நண்பன் வீடென்றால் இழுத்து போட்டு எல்லா வேலைகளையும் செய்யுங்கள்!

34. எதிரி என்றால் தள்ளி நின்று பேசுங்கள்!

35. துரோகி என்றால் அந்த திசையே செல்லாதீர்கள்!

36. வாழ்வில் விட்டு கொடுங்கள் ; வாழ்க்கையையே விட்டு கொடுக்காதீர்கள்!*
-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  2. ////Blogger subathra sivaraman said...
    Good morning sir,sup sir/////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  3. ////Blogger subathra sivaraman said...
    Good morning sir,sup sir/////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com