Astrology: Quiz: புதிர்: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன ?
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்
சரியான விடை 29-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்
சரியான விடை 29-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
மதிப்பிற்குரிய அய்யா ,
ReplyDeleteநான் தங்களின் புது மாணவன்.எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்கிறேன். ஏதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டி மன்னிக்கவும்.
திருவோணம் என்பது சந்திரனின் நட்சத்திரம். ஜாதகர் அந்த சந்திரா திசையில் பிறந்து 6 ஆண்டு 5 மாதம் 4 நாட்கள் வரை வாழ்ந்திருக்கிறார்.
அந்த சந்திரன் 6 வது வீட்டில் இருந்தாலும் தனது 7 ஆம் பார்வையால் ( 12 ஆம் வீட்டை ) கடக வீட்டை பார்க்கிறார். அந்த சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்திருந்தால் நிச்சயம் நல்ல விரயத்தைத்தான் கொடுத்திருக்கும். மாறாக தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் பார்வை விழக்கூடிய இடம் என்பது தனது சொந்த வீடான கடகத்தில் என்பதால் அவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. அதற்கு பிறகு செவ்வாய் திசை 7 வருடம். அந்த குஜ பகவான் 4ஆம் வீட்டிற்கு உரியவர். அவர் லக்கினத்தில் கேதுவுடன் இருக்கிறார். அனால் அவர் பார்வை 4ஆம் வீட்டில் இருக்கிறது. அடுத்து ஜாதகருக்கு ராகு திசை 18 வருடம். ஆனால் ராகு 7 ஆம் வீட்டில் குரு பார்வையில் இருக்கிறது. ஆக மொத்தம் (சந்திரன்+செவ்வாய்+ராகு) (6 . 5 + 7 + 18 ) 31 . 5 வருடம் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 4ஆம் வீட்டில் அந்த வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் பார்வை உள்ளது. அதே போல 7 ஆம் வீட்டில் குரு பார்வை இருக்கிறது. நிச்சயம் இந்த வீடுகள் எல்லாம் நன்றாக இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. பின் எவ்வாறு 31 வயது வரை வாழ்க்கை சரி இல்லாமல் போனது என்று எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.
வணக்கம் ஐயா. 12ம் அதிபதி 6ல் மறைவது நன்மை.ஆனாலும் நீசம் பெற்ற சனியின் வீட்டில் அவரது பார்வையில் இருந்ததால் மேலும் பன்னிரெண்டாம் இடத்தையும் பார்ப்பதால். குழந்தை பருவத்திலும் நோய் (இடது கண் அல்லது காது) சம்பந்தப்பட்ட தொல்லை இருந்திருக்கும். அடுத்து 7 வருட செவ்வாய் யோகாதிபதியின் தசை ஆனால் கேதுவுடன் சேர்ந்து லக்னத்திலேயே இருப்பதால், மந்தநிலை, பொறுப்பற்ற தன்மை,கோவம்,மாறுபட்ட எண்ணம் மற்றும் செயல் இவைகளால் படிப்பும் தடைபட்டிருக்கம். அடுத்த ராகு 18 வருடம் 7ஆம் இடத்தில் நீசம் பெற்ற சனியின் வீட்டில், படிப்பை முற்றிலும் கெடுத்து கூடா நட்பு கூட வைத்திருப்பார். அதற்கு அடுத்து வந்த குரு பகவான் 5ஆம் அதிபதி ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பதாலும் மேலும் 7ல் உள்ள ராகு 9ல் உள்ள சனி ஐ பார்பதாலும் முற்றிலும் நிலமை நல்ல அமைப்பிற்கு திரும்பி இருக்கும்.சிம்ம லக்னத்திற்கு சனி நீசம் பெற்று இருப்பதால் நல்ல குடும்ப வாழ்க்கையும் அமைந்திருக்கும். அடுத்து வரும் அவரது திசையும் நன்மையே செய்யும்.நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற புதிருக்கான காரணங்கள்
1 சிம்ம லக்கினம் , திருவோண நக்ஷத்திரம் , மகர ராசி ஜாதகருக்கு , இளம் வயதில் தன் பெற்றோருக்கு பிரச்சினையாக இருந்ததற்கு , லக்கின அதிபதி மற்றும் லக்கினத்தில் அமர்ந்த கிரகங்களை பார்க்க வேண்டும். இதில் லக்கினத்தில் கேதுவுடன் செவ்வாய் அமர்ந்து , யாருக்கும் அடங்காத தன்மையை கொடுத்தது.
2 மேலும் லக்கினத்தை ராகு நேரடி பார்வையில் உள்ளதால் நிலைமை இன்னும் கோளாறானது. இது ஜாதகரின் ராகு தசையில் அதாவது 13 வயது முதல் ஆரம்பமானது. அதனால் ஜாதகர் யாருக்கும் அடங்காமல் தன் போக்கிற்கு அலைந்தார்.
3 . இந்த நிலை பெற்றதற்கு ராகு தசையே முக்கிய காரணமாகும். மேலும் ராசி நாதன் சனி ராசி கட்டத்தில் நீச ஸ்தானத்தில் ஒன்பதில் இருந்ததும், மற்றும் நவாம்ச கட்டத்தில் எட்டாம் இடத்தில் ராகு வுடன் அமர்ந்து இந்த நிலை ஏற்பட செய்தார்.
4 பின்னர் வந்த குரு தசையில் இது சரியானது. ஏனென்றால் சிம்ம லக்கினத்திற்கு குரு உகந்த சுப கிரகமாகும்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 லக்னதிபதி சூரியன் இரண்டில் லாபத்தில்
2 .இரண்டாம் அதிபதி புதன் உச்சம் பெற்று புதஆதித்திய யோகத்துடன்
3 .லக்கினம் ராகுவின் நேரடி பார்வையில்
4 .கர்மகாரகன் சனி நீசம் தொழிலிஸ்தான அதிபதி சுக்கிரனும் பத்தாம் இடத்திற்கு 6/8 நிலை
5 ஆகவே இளம் வயதில் வந்த திசைகள் (ராகுதிசை )வரை
ஜாதகருக்கு பலனளிக்கவில்லை
6 .அடுத்து வந்த குரு திசையில் குரு தன் ௫,7 ஆம் பார்வையால் சனி,ராகுவை கட்டுபடுத்தி ஜாதகர் க்கு நல்ல தொழிலை அமைத்து கொடுத்து ஜாதகரின் வாழ்வை மேம்படுத்தி இருக்கிறார்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
வணக்கம். கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் இளமை பருவத்தில் 13-31 வயது வரை ராகு தசை நடைபெற்றது. அவர் நல்ல பலன் செய்ய மாட்டார். ராகு நல்லது செய்யும் இடம் ஆன மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் இடத்தில் ராகு இல்லை.
ReplyDeleteராகு பச்ஜொந்தி கிரகம், தான் அமர்ந்த வீட்டு அதிபதி போல் மாறி பலன் அளிப்பார். அவர் அமர்ந்த வீட்டு அதிபதி சனி நீச்சம். 3,6,11 லும் ராகு இல்லை. செவ்வாய் பார்வையில் ராசியில், நவாம்சத்தில் சனி, செவ்வாய் கூட்டு. ஆதலால் நல்லது செய்ய வில்லை. குரு சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் நல்ல வழி மாறினார். நன்றி.
ஜாதகர் 10 அக்டோபர் 1970 விடியற்காலை 2 மணி 49 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ReplyDeleteதிருவோணம் நட்சத்திரக் காரர்களைச் சாதாரணமாக பொது மனிதர்களாகவே அடையாளம் காண்கிறார்கள்.வீட்டிற்கு அதிகம் உதவியில்லை என்பார்கள்.
ஜாதகருக்கு கும்பத்தில் ராகு.குருவின் பார்வை செவ்வாயின் பார்வை.கும்பம் ஜாதகரின் 7ம் இடம். ஜாதகரின் 14 வயதில் ராகு தசா ஆரம்பித்தது.7ம் இடத்துக்கான சனைச்சரன் 9ல் அமர்ந்து நீசம் அடைந்தார்.எனவே ராகு சனைச்சரனைப்போல தன் தசாவில் களத்திர லாபங்களைக்கொடுட்த்ஹிருப்பார். அது ராகு என்பதால் முறையான வழிகள் இல்லாமலும் இருந்திருக்கலாம். ராகுதசா 32 வயதில் முடிந்து குரு தசா ஆரம்பித்தவுடன் ஜாதகர் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.
"ஜோதிடப் புதிர்: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்கு காரணம் என்ன ?"
ReplyDeleteசிம்ம லக்கினம், மகர ராசி ஜாதகர். இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகருக்கு 6 1/2 வருடம் சந்திர தசை குழந்தைப் பருவத்தில் கழிந்தது. அதன் பின் வந்த 7 வருட செவ்வாய் தசையில் படிப்பு ஏறவில்லை. 13 வயதிற்கு பின் ராகு தசை தொடங்கி 30 வயது வரை நடந்துள்ளது.
ராகு தசையில் வந்த 7 1/2 சனியும் சேர்ந்து கொண்டதால், ஜாதகர் பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. கர்மகாரகன் சனி நீசம் வேறு.
பிறகு வந்த குரு தசையில் மேற்கண்ட நிலை மாறி எல்லாம் சீரானது.
இரா.வெங்கடேஷ்.