9.8.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன? அது எப்போது சரியாகும்? அல்லது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 11-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
====================================================================

5 comments:

  1. கேள்விக்கு பதில் இருக்கட்டும்.

    வாத்தியாரை full form ல் பார்ப்பது, இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை தருகிறது.

    வெ. நாராயணன்
    புதுச்சேரி

    ReplyDelete
  2. ஜாதகர் 8 ஆகஸ்டு 1972 மாலை 4 மணி 46 நிமிடங்கள் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    ஜாதகருக்கு 10 ஆம் அதி பதி எட்டாம் இடத்தில் அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதமும் அடைந்ததால்
    இவருக்கு வேலை மாறுதல் அதிகம் இருக்கலாம். அல்லது மனத்திற்குப்பிடித்த வேலை இல்லாமல் இருக்கலாம். சுய வர்கத்தில் சனீஸ்வரனுக்கு 7 பரல் கிடைத்து ஓரளவு வலிமை பெற்றதால் வேலை என்று எப்போதும் ஒன்று இருக்கும்.

    தற்சமயம் சுக்கிரதசா புதன் புக்தி 30 ஆகஸ்டு 2020 வரை உள்ளது. இது கொஞ்சம் நல்ல நேரம் தான். அதன் பின்னர் வரும் கேது புக்தியில் 30 அக்டோபர் 2021ல் அலுவலகத்தில் சண்டையிட்டு வெளியேறுவார்.

    அடுத்துவரும் சூரியதசா 6 வருடங்கள் நன்றாக இருக்க வாய்ப்பு. ஏனெனில் அது 9ம் இடத்தவனின் தசா. அதற்கு அடுத்துவரும் சந்திரதசா 10 ஆண்டுகள் பாதிப்பலன் கொடுக்கும். எப்படியாயினும் இவருக்கு சந்தோஷம் வேலையில் கிடைக்கவே கிடைக்காது. மனோகாரகன், 10ம் அதிபன் 5ம் அதிபன் செவ்வாய் ஆகியோர் அஸ்தங்கம் அடைந்ததால் மன உளைச்சலும், வேலையில் அலைக்கழிப்பும் தொடர்கதை தான்.

    ReplyDelete
  3. தனுசு லக்கினம், ஆறாம் அதிபதியின் தசை, சுக்கிர தசை நன்மை செய்வதாக அமையவில்லை.
    பத்தாம் அதிபதி, பாக்கியாதிபதி, மனோகாரகன் யாவரும் 8 இல் மறைவது, வெறுப்பு மற்றும் மன அழுத்தத்தினை அளித்திருக்கும்.
    நிலைமை சூரிய தசையில் ஓரளவு சரியாகவும் செவ்வாய் தசையில் நிவர்த்தியாகவும் கூடும்.

    ReplyDelete
  4. வணக்கம்

    மிக நீண்ட நாளுக்கு பிறகு தங்கள் புதிர் வந்து உள்ளது .. அதற்கான பதில் :

    ஜாதகரின் வேலையின் மீதான வெறுப்பு விருப்பு விற்கான காரணங்கள் :

    1 . ஜாதகருக்கு புதன் தசையில் சனி புக்தியில் வேலை கிடைத்தது. ஆனால் அதன் மீது ஜாதகருக்கு பிடித்தம் இல்லாமல் போனது . ஏனென்றால் புதன் ஆனது ஜாதகரின், ஜாதகரின் பத்தாம் இடத்து அதிபதி ஆவர். பத்தாம் இடமானது ஒருவரின் வேலையையும் , வேலை செய்யும் துறையையும் குறிக்கும் இடம் ஆகும். ஆதலால் பத்தாம் இடத்து அதிபதி புதன் மற்றும் கர்மகாரகன் சனியின் புக்தியில் வேலை அமைந்தது. ஆனால் லக்கின அதிபதி குரு விற்கு ஒண்ணாம் நம்பர் வில்லன் புதன் ஆவார் . மேலும் புதன் எட்டில் மறைந்து ராகு பார்வை பெற்று கேது வுடன் கூட்டணியில் உள்ளதால் மனக்கசப்பை மேலும் வேலை மீது அதிக படுத்தியது.

    2 . மேலும் எட்டாம் இடத்தின் அதிபதி மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள் பொதுவாக நல்ல பலன்களை தராது. அது கஷ்டங்களை தான் அதிக படுத்தும். அந்த வேலையை புதன் சரியாக செய்தது. மேலும் அது ஆறாம் இடத்தில் அமர்ந்த சனியின் பார்வையில் உள்ளதால் கஷ்டங்களை அதிக படுத்தியது.

    3 . இந்த நிலை பின்னர் 22 வயதில் வந்த கேது தசையிலும் 29 வயதில் வந்த சுக்கிர தசையிலும் தொடர்ந்தது. அது 49 வயதில் வந்த சூரிய தசையிலும் ஓரளவு சரியானது என சொல்லலாம். ஆனால் முழுவதும் சரியாகி இருக்காது. ஏனென்றால் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் கேது பிடியில் எட்டாம் இடத்தில் உள்ளது.

    நன்றி

    ப சந்திரசேகர ஆசாத்
    MOB: 8879885399

    ReplyDelete
  5. பிறப்பு 08-08-1972, 16:40, சென்னை.
    சனி தசையின் இறுதியில் பிறந்த ஜாதகர்க்கு, தன் 6 வயது முதல் 23 வயது வரை நடந்த 10 க்குரிய சுய சாரத்தில் கேதுவின் பிடியில் அமர்ந்த புதன் தசையில் வேலை அமையவில்லை. தொடர்ந்து வந்த குருவின் சாரம் வாங்கிய கேது தசையின், குரு புத்தியில் வேலை கிடைத்திருக்கும். 10 ஆம் வீட்டு அதிபதி புதன் 8 ஆம் வீட்டில் ஆட்சிபலம் பெற்ற சந்திரனுடன் அமர்ந்து, சனி பார்வையிலிருக்க கிடைத்த வேலை பிடிக்காமல் வெறுப்பு மிஞ்சியது. மேலும் 10 க்குரிய புதனே மாரக-பாதகஸ்தானமான 7 குரியவன் என்பதால் வேலை கொடுத்து அதன் விளைவாக பாதகம் செய்வான். தனுசு லக்கினமாகி, லக்கினாதிபதியும் ஜாதகத்தின் முழுமுதற்சுபருமான குரு 1 ஆம் வீடாகிய முதல் கேந்திரகோணத்தில் அமர்ந்து, 11 குரிய பாதகாதிபதியின் பார்வையில் அமர்ந்ததால், ஜாதகர் தன் நல்ல குணத்தால் எளிதில் பிறரால் ஏமாற்றப்பட்டு பின்பு வருந்துபவராக இருப்பார். மனோகாரகன் சந்திரனுடன் கேது 10 டிக்ரீக்குள் இணைவு. சுக்கிர தசை முதல் சற்று நிம்மதியடைந்திருப்பார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com