25.8.19

Astrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, "ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்?"  என்று  கேட்டிருந்தேன்.

பதில்:

கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் சேர்க்கை. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபக்கம் சனி மறுபக்கம் செவ்வாய். 7ம் அதிபதி சனீஷ்வரன் 12ல் (விரையத்தில்) களத்திரகாரகன்
சுக்கிரனும் 12ல். 12ம் அதிபதி புதனும் 12ல். அனைத்தும் திருமண வாழ்க்கைக்கு எதிரான அமைப்பு. இந்தக் காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை!!!1

இந்தப் புதிரில் 12  அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 30-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger Santhanam Salem said...
சுக்கிரன் (களத்திரகாரகன்) சனீஸ்வரன் (7 மற்றும் 8ம் வீட்டு அதிபதி) மறைவு இடமான 12ம் வீட்டில் மற்றும் சேர்க்கை // 2ம் வீட்டு அதிபதி 2க்கு விரைய ஸ்தானமான லக்கனத்தில் // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு சேர்க்கை // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு மீது செவ்வாய் பார்வை // சந்திரன் (லக்கினாதிபதி) நீசம் // 2ம் வீட்டின் மீது சனீஸ்வரன் (7 மற்றும்
8ம் வீட்டு அதிபதி) பார்வை // இவ்வளவு பாதக அமைப்பு போதாதா?
2ம் வீட்டின் மீது பார்வை கொண்ட குரு பகவான் மட்டுமே குடும்ப அமைப்பை உருவாக்கினார் santhanam salem
Friday, August 23, 2019 10:02:00 AM
---------------------------------------------------
2
Blogger kumaran said...
வணக்கம் ஐயா . பெண்ணை குறிக்க கூடிய கிரகம் சுக்கிரன் அதேபோல் காலா புருஷனுக்கு 7-அம் இட அதிபதி

களத்திர காரகன் சுக்கிரன் , இந்த பெண் ஜாதகத்தில் மந்தன் உடன் சேர்க்கை பெற்று உள்ளார் . கேது விருக்கு 2-அம வீட்டில் உள்ளார் , கேது தடை , கேடு , breakup , போற்றவற்றிக்கு காரகன் , அதேபோல் கடக லக்னிம் லக்கனத்தில்
சூர்யன் பகை கொண்டு உள்ளார் , லகினநாதன் சந்திரன் லகினத்திற்கு 5-அம வீடு புத்திர , பூர்வ இடம் இல் நீச்சம் ஆகி உள்ளார் அதனால் இவர்க்கு சந்ததி ,குழைந்து , என்பது இல்லாமல் போகும் என்பதை குறிக்கின்றது கூடவே ராகு
சேர்க்கை பெற்று உள்ளார் ராகு, சந்திரன் இரண்டு பகை கிரகம் . மற்றும் கணவர் குறிக்க கூடிய கிரகம் செவ்வாய் சிம்மத்தில் பகை பெற்று குடும்பஸ்தஹணம் இல் உள்ளார் இந்த சேர்க்கை இந்த ஜாதகத்திற்கு பிரிவினை குடுத்து உள்ளது .அதேபோல் லகினத்துக்கு 12-இல் சுக்கிரன் மறைவு பெற்று -அம மறைவு அதிபதி தசை நடந்து கொண்டு உள்ளது .இதுவே இதற்கு காரணம் . அதேபோல் லகினத்துக்கு 7-அம அதிபதி சனி 12-இல் மறைவு பெற்று உள்ளார்.படுக்கை இடம் சரி இல்லாத நிலைமை . இதுவே பிரிவிற்கு காரணம் ஆகி உள்ளது..
Friday, August 23, 2019 11:07:00 AM
--------------------------------------------------------
3
Blogger ezhil said...
sukran thasai guru pudthi + elarai sani nadapil vivakarathu nadandu irukum.
sukran sani yai guru parkirar, 2 idathaiyum sevai, guru parkirar thirumanam nadathivaithu irupar.
amsathilum sukran sani servai. chandiran + RAGU this all would have made the girls mind to think in wrong way resulting divorce. guruvum sevaiyum yogathipathi. second marriage will be good life.
i dont have tamil font
Friday, August 23, 2019 12:19:00 PM
------------------------------------------------
4
Blogger seethalrajan said...
வாதியருக்கு வணக்கம். உங்கள் உடல் நிலை சரியானது மிகவும் மகிழ்ச்சி.
கொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் கடக லக்கினம், லக்கின அதிபதி நீசம், ராகு கூட்டு வேறு, அது நல்ல பலன் இல்லை. பாக்கிய அதிபதி குரு 8ல் மறைவு, 7ம் அதிபதி 12ல், கூடவே சுக்ர தசை 10 வயது முதல் 30 வரை. சுக்கிரனும் சனி,
12ம் அதிபதி கூட்டு, எல்லாம் சேர்ந்து திருமணம் கெடுத்து விட்டனர்.
சந்திரனுக்கும் 7ம் அதிபதி சுக்கிரன் 8ல் மறைவு. அதுவும் கேடானது. 2ம் விட்டு மேல் சனியின் பார்வை. நன்றி.
Friday, August 23, 2019 4:18:00 PM
-------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி நீசமாகியுள்ளார்
2 . ஏழாம்அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் மேலும் ஏழாம் இடத்திற்கு ஆறில் காரகன் சுக்கிரன் பனிரெண்டில்
3 .செய்வாய் இரண்டில் ௪.சனியும் சுக்ரனும் சேர்த்திருப்பது குடும்ப வாழ்க்கைக்கு நல்லதல்ல
4 .இரண்டாமதிபதி சூரியன் இரண்டிற்கு பனிரெண்டில்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, August 23, 2019 5:20:00 PM
-----------------------------------------------------
6
Blogger Unknown said...
Guru aspect Mars which is in 2nd position.
Saturn together with venus, which is pathagathi as well as 11th lord. So divorce happend
Saturday, August 24, 2019 8:19:00 AM
--------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
தங்கள் புதிருக்கான பதில்
ஜாதகியின் திருமண வாழ்வு கேட்டு போனதற்கான காரணங்கள்
1 . ஜாதகி கடக லக்கினம் , சிம்ம ராசி , கேட்டை நக்ஷத்திரம் .
திருமண வாழ்வு சிறப்பாக அமைய இரண்டாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் பார்க்க வேண்டும் .
முதலில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி சூரியன் ராசியாதிபதி இரண்டிற்கு பனிரெண்டாம் இடத்தில் நின்று திருமண வாழ்வை விரயம் செய்தது. மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனியும் , களத்திர காரகன் சுக்கிரனும் லக்கினத்திற்கு பனிரெண்டில் அமர்ந்து திருமண வாழ்வை இல்லாமல் செய்தது. மற்றும் கேதுவின் மூன்றாம் பார்வையால்

குடும்ப ஸ்தான அதிபதி பார்க்க பட்டு குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது. மேலும் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த

செவ்வாயை சனி மூன்றாம் பார்வையால் இன்னும் கடின படுத்தியது.
2 ஒன்பதாம் இடத்து அதிபதி அதாவது பாக்கிய ஸ்தான அதிபதி குரு ஒன்பதாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து திருமண பாக்கியத்தை குறைத்தது. மேலும் ஒன்பதாம் வீடு அதிபதியுடன் மாந்தி வேறு அமர்ந்து பாக்கியத்தை இன்னும்
குறைத்தது. இதே நிலை நவாம்ச கட்டத்திலும் அதாவது குருவுடன் மாந்தி அமர்ந்து இருந்து பாக்கிய ஸ்தானத்தை காலி செய்தது.
3 ஐந்தாம் வீட்டில் நீச சந்திரனுடன் அமர்ந்த ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் விட்டு வைக்க வில்லை. காலி செய்தது.
நவாம்ச கட்டத்திலும் இதே நிலையே அதாவது ஐந்தில் ராகு நின்று இன்னும் நிலைமையை மோசமா மாக்கியது.
4 திருமண யோகத்திற்கு குடும்ப வாழ்விற்கு காரணமான குரு களத்திரகாரகன் சுக்கிரன் , களத்திர கார அதிபதி சனி இவை எல்லாம் லக்கினத்திற்கு எட்டு, பனிரெண்டில் மறைந்து குடும்ப வாழ்வை சிதைத்தது.
5 மேலும் லக்கினத்தில் அமர்ந்த சூரியன் முன் கோபத்தை தூண்டி முதல் திருமணத்தை விவகாரத்தில் முடிய செய்தார்.
ஆனால் குரு பார்வை பெற்ற இரண்டாம் இடத்து செவ்வாயால் இரண்டாம் திருமணம் சாத்தியம் ஆனது.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, August 24, 2019 9:23:00 AM
---------------------------------------------------------
8
Blogger Shanmugasundaram said...
Good morning Sir.The lady was born on 30.06.1974 5.30am place covai.Kettai nakshtra 4th padam Viruchaga rasi  kadaga lagnam.Lagna lord moon is in neecham with rahu.Seventh house lord saturn is in 12th place with twelfth lord.moreover venus also placed in twelfth house. Marriage was happened during venus dasa mercury bukthi in the same bukthi divorce happened due to the above planetary position.thanks sir vazhga valamudan
Saturday, August 24, 2019 9:40:00 AM
-------------------------------------------------------------
9
Blogger kmr.krishnan said...
ஜாதகி 30 Jஉல்ய் 1974 காலை 5 மணி 31 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்
7ம் இடத்திற்குரிய சனைச்சரன் 12ல் மறைவு. அதுபோலவே களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைவு. குடும்ப ஸ்தனதிபதி சூரியன் தன் வீட்டிற்கு 12ல் மறைவு. 5ம் இடத்தில் சந்திரனும் ராகுவும் ஜாதகி சற்றே மனக்கவலை அடைபவர் என்பதைக் காட்டுகிறது.லக்கினம் சூரியனாலும், வாக்கு ஸ்தானம் செவ்வாயாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் ஜாதகி பேச்சில் தீப்
பொறி பறக்கும்.சுக்கிர தசா புதன் புக்தியில் திருமணம் . இருவருமே 12ல் மறைந்ததால் அந்த தசா புக்தி முடியும் முன்னரே விவாக ரத்து வந்தது.லக்கினம் இருபக்கமும் சனி செவ்வாயால் சூழப்பட்டுள்ளது.
kmrk1949@gmail.com
Saturday, August 24, 2019 2:48:00 PM
---------------------------------------------------------------------
10
Blogger Thanga Mouly said...
ஜாதகிக்கு லக்கினாதிபதி நீசமடைந்து ராகுவுடன் கூட்டணி அடைந்துள்ளார். குடும்பஸ்தன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் அவருக்கு விரயத்தில் அஸ்தமனம் அடைந்துள்ளது. 7ம் மற்றும் 8ம் அதிபதி சனி, களஸ்திர காரகன் சுக்கிரன் உடன் இணைவு மற்றும் விரயத்தில் அமர்வு திருமண
வாழ்க்கையை தொடர வாய்ப்பளிக்கவில்லை.
மனோகாரகன் லக்கினாதிபதியாகி அவர் முற்றிலும் பாதிப்பு பெற்றது ஜாதகி விவாகத்தினை வெறுப்புடன் ரத்துச் செய்வதத்திற்கு காரணம் என்பது எனது மேலோட்டமான கருத்து.
Saturday, August 24, 2019 5:05:00 PM
----------------------------------------------------
11
Blogger jaga.gm said...
7th GOD SANI IN 12TH PLACE
2ND GOD SURIYAN IS IN 12TH PLACE OF HIS OWN HOUSE
2ND GOD SURIYAN NEESAM IN NAVAMSAM
ALSO GURU IS IN 8TH PLACE NOT ABLE TO HELP
SO DIVORCE HAPPENED
Saturday, August 24, 2019 9:38:00 PM
-------------------------------------------------
12
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு
அன்பு வணக்கங்கள். புதிரிற்கு பதில் வருமாறு
ஜாதகி 30 ஜுலை 1974ல் பிறந்துள்ளார்.
அவரது திருமணம் சுக்கிர (களஸ்திரஸ்தானாதிபதி/விரயஸ்தானாதிபதி) தசையிலும் புதன் புத்தியிலும் நடந்துள்ளது.
களஸ்திரஸ்தானாதிபதியும், 7ம் அதிபதியும் விரயஸ்தானத்தில்.
புத்திரஸ்தானத்தில் நீச சந்திரன் ராகுவுடன் கூடி
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்
ராசிக்கு 8ல் சனி – இதுவே கல்யாண பிரிவிற்கு காரணமாகும்
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 25, 2019 2:47:00 AM
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com