வாத்தியார் கேட்ட லிப்ட்!
கவிதைப் போட்டி ஒன்றின் தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. இதைத் தலைப்பாகக் கொடுத்திருக்காங்களே - நாம் சுளுவாக எழுதிவிடலாம் என்று நினைத்தேன்.
எழுதினதோடு சும்மா இருந்திருக்கக்கூடாதா? என் போதாத நேரம் அதை வகுப்பில் வைத்து கொஞ்சம் கரெக்ட் பண்ணிவிடலாம் என்று வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போனதுதான் தப்பாகப் போய்விட்டது சாமிகளா !
தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்ன்னு ஒரு எட்டுப் போய்விட்டுத் திரும்பறதுக்குள்ள - ஒரு வாலில்லாத பயல் அந்தக் காகிதத்தில ஒரு அடிக்குறிப்பை எழுதி வைத்துவிட்டான்.
சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் எழுதியிருந்தான்!
படிப்பைத் தவிர பசங்களுக்கு மத்ததெல்லாம் நல்லா வருது சாமி - நல்லாவே வருது!
இரண்டையும் கீழே கொடுத்திருக்கேன் - நீங்களே பாருங்க!.
----------------------------
கவிதைத் தலைப்பு: கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
மனைவியோடு வெளியில் போனால் மட்டுமே
மனமுவந்து வண்டியை எடுப்பது வழக்கம்
வாகனம் இன்றி வாசலில் நிற்கிறேன்
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
கட்டியிருக்கும் வெள்ளை வேஷ்டி, சட்டை
கணப் பொழுதில் கசங்கிவிடும் - நனைந்துவிடும்
ஆகவே பேருந்தில் அடியேன் செல்வதில்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
ஆட்டோக் காரரிடம் பேரம் இன்றி
அதிரடியாய்ச் சென்று திரும்ப
அடியவன் எனக்குப் பழக்கம் இல்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
இந்தியப் பொருளாதாரத்தை
இயன்றவரை மேம்படுத்த
அடியேன் பெட்ரோல் போடுவதில்லை
ஆகவே கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
-------------------------
(நான் இல்லாத நேரத்தில் வகுப்புப் பையன் ஒருவன்
எழுதி வைத்த அடிக்குறிப்பு கீழே உள்ளது)
இரண்டு பங்க்குகள் என்தந்தைக்(கு) உண்டு
இலவசப் பெட்ரோல் உங்களுக்(கு) உண்டு
அறுவையின்றி, சிகிச்சையின்றி, வகுப்பைக் கடக்க
அடியேன் எனக்குக் கிடைக்குமா லி•ப்ட்?
எப்படி இருக்கு - என்னைவிட பயல் நல்லா எழுதியிருக்கானில்லையா?
----------------------------
அப்புறம் யோசித்தேன் - என் வகுப்பில நாகபட்டினத்தில இருந்து ஒரு தம்பி வந்து படிக்குது. நல்லா படிக்கும் - அதனால அந்தத் தம்பியை மொத பெஞ்ச்சில உட்கார வச்சிருக்கேன்.
இந்த அடிக்குறிப்பை அந்தப் பையன் எழுதியிருந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்து பார்த்தேன்
அவன் எழுதியிருந்தா இப்படித்தான் எழுதியிருப்பான்
கடவுள்கொடுத்த கால்கள் உண்டே கடப்பதற்கு,
நடப்பதற்கு மனம்தான் தேவை! - அடடா
எங்களைப்போல பள்ளிக்கு ஓடிவரவா சொல்கிறோம்?
எதற்குக் கேட்கிறீர்கள் எல்லோரிடமும் லிப்ட்?
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================
Very nice. Many good suggestions are there in the verse.Save petrol, Do not ask cheap help from others,walking is good for help etc.,
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteவாலுப் பையனிடம் நல்லாவே இருக்குது சரக்கு!😊
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
வாலுப் பையனிடம் நல்லாவே இருக்குது சரக்கு!😊/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!