26.4.19

Astrology: ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?


Astrology: ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 28-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:

=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. கேது 2ம் இடத்தில் // 2ம் இடத்தின் மீது துலா லக்கினதிற்கு யோகமில்லாத செவ்வாய் பார்வை // 2ம் இடம் கெட்டது
    7ம் இடம் மற்றும் 7ம் இடத்து அதிபதி - பாபகர்த்தாரியோகம் // 7ம் இடம் கெட்டது
    சந்திரன் மீது சனி பார்வை - புனர்பூதோஷம்
    துலா லக்கினதிற்கு யோககாரகர்கள் சனி, புதன் சேர்க்கை இருந்தும் சனி, புதன் 6ல் மறைவு
    துலா லக்கினதிற்கு யோகமில்லாதவர்கள் சூரியன், செவ்வாய், குரு // இதில் செவ்வாய் குரு (6ம் இடத்து அதிபதி) லக்கின பார்வை
    ஆட்சி பெற்றுள்ள செவ்வாய் 7ம் இடத்து அதிபதி - காரகோபாவநாஸ்தி
    துலா லக்கினதிற்கு நல்ல பலன்களைக் கொடுப்பவர் சுக்கிரன் துலா லக்கினதிற்கு 8ம் இடத்து அதிபதி மற்றும் 6ம் இடத்து அதிபதி குரு பார்வையோடு
    துலா லக்கினதிற்கு மாரக அதிபதி (killer) செவ்வாய் // லக்கின பார்வை

    சந்தானம் சேலம்

    ReplyDelete

  2. வணக்கம்

    தங்கள் புதிருக்கான பதில்

    காலமகள் ஏன் கண் திறக்க வில்லை .

    1. பொதுவாக ஒருவருக்கு திருமணம் கைகூட லக்கினம் , லக்கின அதிபதி , இரண்டாம் இடத்தில் அமர்ந்த கிரகம் மற்றும் இரண்டாம் இடத்து அதிபதி , மேலும் ஒன்பதாம் இடத்தில அமர்ந்த கிரகம் மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதியும் முக்கிய காரணமாகிறார்கள்.

    2. இவருக்கு லக்கினத்திலேயே மாந்தி அமர்ந்ததும் , லக்கின அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்தில் எட்டில் மறைந்து மாந்தியுடன் கூட்டணி போட்டதாலும் லக்கினம் பலன் கிட்டவில்லை.

    3, இரண்டாம் இடத்தில் கேது லக்கின கட்டத்தில் அமர்ந்து திருமண வாழ்வை தடை செய்தார். இரண்டு மற்றும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்து களத்திர தோஷத்தை தந்ததோடு மட்டுமின்றி லக்கினத்தை அவர் கட்டுப்பாட்டில் வைத்து திருமண பந்தம் ஏற்படுவதை தடுத்தார். ஏனென்றால் செவ்வாய் துலா லக்கினத்திற்கு உகந்த கிரகமல்ல. மேலும் செவ்வாய் வர்கோத்தம பலம் பெற்றும் தீமையை அதிக படுத்தினார்.

    4. ஒன்பதாம் இடத்தில் குரு அமர்ந்தாலும் 6 மற்றும் 9 பரிவர்த்தனை பெற்று மறைவு ஸ்தான வேலையை மட்டும் செய்தார். திருமணத்தை நடத்த முடியவில்லை. ஒன்பதாம் இடத்து அதிபதி ஆறில் மறைந்து அணைத்து பாக்கியத்தையும் கிடைக்காமல் செய்தார். அதில் திருமணமும் ஒன்றாகும்.

    5. துலா லக்கினத்திற்கு யோக காரனான சனியும் ஆறில் சூரியனோடு இணைந்து, மறைந்து பலன் தரவில்லை.

    நன்றி.

    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB: 8879885399

    ReplyDelete
  3. ஐயா ,
    கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி திரிகோணத்தில் அமர்ந்துள்ளார்
    2 .இரண்டில் கேது
    3 .கேதுவின் நாலாம் பார்வை சுக்ரனின் மீது
    4 .ஏழாம் அதிபதி செவ்வாய் எழில் அமர்ந்துள்ளார்
    5 அனால் அவரே இரன்டுக்குரியவர்
    6 .இரண்டாம் இடத்திற்கு ஆறில்
    இந்தகாரணகளினால் திருமணம் நடை பெறவில்லை
    7 .மேலும் காரகன் பாவநாசம் ஏன்பதிற்கிணங்க அயன சயன போக அதிபதி புதன் பனிரெண்டாம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார்
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  4. ஜாதகர் 12 ஏப்ரல் 1966ல் இரவு 8 மணி 21 நிமிடம் போல் பிற்ந்தவர்.பிற்ந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
    ஜாதகரின் திருமணத்திற்கான 7ம் இடம் செவ்வாயால் அக்கிரமிக்கப்பட்டும், இரண்டு பக்கமும் சனி, சுரியன் ராகுவால் சூழப்பட்டுள்ளது. குடும்பதானமான் 2ல் கேது.7ம் இடத்திற்கு 23 பரல் மட்டுமே. 7ம் அதிபதிக்கு செவ்வாய் சுய வர்க்கம் 2 பரல் மட்டுமே. 40 வயது வரை ராகு தசா.இவையெல்லாம் அவருக்குத் திருமணம் ஆகாததற்கு காரணங்கள்..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா. 7ஆம் அதிபதி செவ்வாய் ஆச்சிபலம் பெறுவது முதல் தவறு. இது சில நேரம் திருமண வாழ்க்கை சரியாக அமைவதில்லை அல்லது திருமணம் அமைவதேயில்லை.இவர் இங்கு இரண்டாம் வீட்டில் உள்ள கேதுவை பார்க்கிறார்.7ஆம் வீடு பாபகர்த்தரி தோசத்தில் உள்ளது. புத்திரஸ்தானாதிபதி சனி ஆறில் மறைவது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.நன்றி

    ReplyDelete
  6. 1. திருமணத்தை நடத்தி வைக்கும் 5ஆம் அதிபதி சனியும், 9ஆம் அதிபதி புதனும் 6ல் மறைந்துள்ளது.
    2. அதனுடன் துலாம் லக்ன பாதகாதிபதி சூரியன் சேர்க்கை வேறு உள்ளது.
    3. இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் கேதுவின் ஆதிக்கம் உள்ளதால் குடும்பம் அமைய தடை
    4. துலாம் லக்னத்திற்கு பாவியான குரு பாக்ய ஸ்தானத்தில் நின்று திருமணத்தை தடை செய்தார்.

    ஆகவே 40 வயது வரை நடைபெற்ற சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு திசைகள் திருமணத்தை தரவில்லை.
    40 வயதுக்கு மேல் நடந்த குரு, சனி திசையும் திருமணத்தை தரவில்லை.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா🙏

    1. துலாம் இலக்கின ஜாதகம்.

    2. சூரிய தசை 05-06-23
    சந்திரன் தசை 10 ஆண்டுகள்
    செவ்வாய் தசை 7 ஆண்டுகள்
    இராகு தசை 18 ஆண்டுகள்
    இவ்வாறு 15வயதுக்கு மேல் 40 வயது வரை சாதகமற்ற தசைகள் நடைபெற்றதே
    திருமணம் நடைபெறாமைக்கு காரணமாகும்.

    3. 2 மற்றும் 7ஆம் இட அதிபதி அதாவது குடும்ப மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான செவ்வாய் கேந்திர மற்றும் ஆட்சி பலம் பெற்றாலும் ஏழாம் இடத்தில் செவ்வாய் சாதகமான பலன் தராது.

    4. மேலும் ஏழாம் இடமும், அவ்விடத்திற்கு அதிபதியும் பாப கர்த்தாரி யோகத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஏழாம் இடத்தின் மீது மாந்தியின் பார்வையும் பாதிக்கிறது.

    5. இரண்டு எட்டில் உச்சமான கேது-இராகுவின் பாதிப்பு.

    6. களத்திராதிபதி செவ்வாய் கேதுவின் சாரத்தில், களத்திர காரகன்
    சுக்கிரன் எட்டாம் இட இராகுவின் சாரத்தில் பாதிப்படைந்துள்ளனர்.

    7. 4,5இக்குடையோன் சனியும் ஆறில் மறைந்ததால், மனைவியின் சுகம், புத்திர பாக்கியம் மறைந்தது. ஐந்தோன் ஆறில் மறைந்ததால் சுக்கிரனும் பலப்பட வில்லை.

    இவ்விதமாக களத்திரம் கடுமையான பாதிப்புகளை அடைந்ததால் அன்பருக்கு 40 வயது வரை திருமணம் நடைபெறவில்லை. அதன் பின்னர் வந்த குரு தசை 3,6 ஆம் ஆதிபத்தியம் பெற்றதால் அதன் பின்னரும் திருமணம் நடைபெறவில்லை.

    பெரியோரே, பிழைகள் இருப்பின் பொருத் தருளுக ....


    பணிவுடன்,
    முருகன் ஜெயராமன்,
    புதுச்சேரி.


    ReplyDelete
  8. Good evening sir the above horoscope person born on 12/04/1966 8.20pm Coimbatore Thula lagnam lagna lord in 6th house seventh house lord and second house lord mars is hemmed between two malefic planets and from 22onwards rahu dasa begins till upto 40 rahu in 8th house hence marriage denied after that Jupiter dasa started on 40 here guru is functional malefic to thula lagna hence there is no chance of marriage upto 56

    ReplyDelete
  9. ஏழாம் இடம் உச்சமாகி சுக்கிரன் வீட்டை பார்ப்பதால் ஆண்மை இல்லாதவர் அவர்..இரண்டில் கேது செவ்வாய் வீட்டில் இதனை உறுதிபடித்துகிறது..5 க்கு உடையோன் ஆறில் மறைவு ...மேலும் உறுதிபடுத்துகிறது..

    ReplyDelete
  10. "ஜோதிடப் புதிர்: காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?"
    ஆசிரியருக்கு வணக்கம்.
    துலாம் லக்கினம், தனுசு ராசி ஜாதகர். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

    1) குடும்ப ஸ்தானத்தில் உச்ச கேது அமர்ந்துள்ளார்.
    2) குடும்பாதிபதியும், களத்திராதியுமான செவ்வாய் 7மிடத்தில் அமர்ந்தாலும், பாப கர்த்தாரியின் பிடியிலுள்ளார்.
    3) லக்கினாதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 5ல் அமர்ந்து குருவின் பார்வை பெற்றுள்ளார். அவர் ஜாதகருக்கு கஷ்டங்களை தாங்கும் மன வலிமையை கொடுத்தார்.
    4) ஜாதகருக்கு 22வயதிற்கு மேல் வந்த ராகு திசை 40 வயது வரை நடை பெற்றது. அதற்கு பிறகு வந்த 6ம் அதிபதி குரு தசையும் அவருக்கு உதவவில்லை.

    மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு திருமண பாக்கியம் கிடைக்கவில்லை.
    இரா. வெங்கடேஷ்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com