21.4.19

Astrology: ஜோதிடம்: 19-4-2019 புதிருக்கான விடை!!!!



Astrology: ஜோதிடம்: 19-4-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் சிக்கியதோடு. பாபகத்தாரி யோகத்திலும் சிக்கி கெட்டுப்போய் உள்ளார். ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.
இது அல்ப ஆயுசு ஜாதகம். அல்ப ஆயுசிற்கான எல்லா அம்சங்களும் ஜாதகத்தில் உள்ளன.
1. இரண்டு கேந்திரங்களில் தீய கிரகங்கள். 4ல் சனி, 7ல் செவ்வாய்.
2. லக்கினாதிபதியைவிட சனீஷ்வரன் வலுவாக (strong) உள்ளான்
3. சனியின் பார்வை லக்கினத்தின் மேல், அத்துடன் லக்கினாதிபதியின் மேல். சனி உச்சம் பெற்றுள்ளான்
4. செவ்வாயின் பார்வையும் லக்கினத்தின் மேல்.
5. எந்த சுபகிரகமும் கை கொடுத்து உதவக்கூடிய நிலையில் இல்லை. சந்திரன், குரு, சுக்கிரன், புதன் என்று நான்கு சுபக்கிரகங்களும் ஆறாம் வீட்டில் மொத்தமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவை அனைத்திற்கும் பாபகர்த்தாரி யோகம் வேறு.
ஆகவே ஜாதகர் அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விட்டார் (இறைவனடிக்குத்தான்)

புதிருக்கான பதிலை 9 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 26-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger Ramanathan said...
Lord of 7th house Saturn is exalted in 4th house aspecting both lagna(as 12th aspect) and lagna lord Moon (as 3rd aspect)
Lord of 7th house Saturn, as life shortening agent, is more powerful compared to Lord of 8th house Saturn
Lord of 2nd house Sun is also life shortening agent.
The unfortunate end could have happened during Sun Dasa itself, during 7.5 saturn immediately after birth.
If not in Sun Dasa, then could possibly have happened during Guru Dasa
Friday, April 19, 2019 9:16:00 AM
-----------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
இளம் வயது மரணத்திற்கான காரணங்கள்
கடக லக்கினம் 1 டிகிரியில் நின்றது , மேலும் லக்கின அதிபதி சந்திரன் 6 இம் இடத்தில் அஸ்தங்கதம்
ஒருவர் மரணத்திற்கு 2 மட்டும் 8 ஆம் இடத்தில் நின்ற கிரகங்கள் தான் காரணமாகும் .
இவரின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் நவாம்சத்தில் நின்ற ராகு தசை சனி புக்தியில் மரணம் அணுகியது. ஏனென்றால் சனி 8 ஆம் அதிபதியும் மட்டும் உச்சமாக உள்ளதால் அவ்வாறு நடந்தது. கடக லக்கினத்திற்கு சனி உகந்த கிரகமல்ல. ஆதலால் ராகு தசை சனி புக்தியில் சூரியன் அந்தரத்தில் மரணம் அடைந்தார். சூரியன் இவருக்கு மாரகன் ஆவார்.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Friday, April 19, 2019 12:51:00 PM
----------------------------------------------
3
Blogger அரியபுத்திரன் நடராஜன் said...
ஐயா,
19-04-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்ன ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் ஆறில் மறைவு. லக்னாதிபதியுடன் பாதகாதிபதி சுக்கிரன் சேர்க்கை. எனவே, லக்னம் கெட்டுவிட்டது. சரி லக்னம் கெட்டால் ராசியை பாருங்களேன். ராசி தனுசு. ராசியாதிபதி குருவுடன் ராசிக்கு பாதகாதிபதி புதன் சேர்க்கை. ராசியும் சரியில்லை.
அஷ்டமாதிபதி சனி உச்சம். லக்னத்தைக் காட்டிலும் அஷ்டம ஸ்தானம் பலம் பெற்ற ஜாதகம். போதாதற்கு பாதக ஸ்தானத்தில் ராகு (விஷம்).
ஜாதகருக்கு ராகு தசையில் மரணம் ஏற்பட்டிருக்கும்.
அ.நடராஜன்
சிதம்பரம்.
Friday, April 19, 2019 4:56:00 PM
----------------------------------------------
4
Blogger classroom2007 said...
Horoscope lesson- 04-19-2019
வணக்கம்.
26 நவம்பர் மாதம் 1984, மாலை 10.25 மணிக்கு, உத்திராடம் நட்சத்திரம் தனுர் ராசி கடக லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
ஜாதகத்தில் 6 ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் பார்வை விழுந்தால், அது பாலரிஷ்ட தோஷம் ஆகும். ---- விதி.
கடக லக்கினம், லக்கினாதிபதி சந்திரன் 6ம் வீட்டில், 6ம் வீட்டு அதிபதி குருவுடன் கூட்டு சேர்ந்தும், பாதகாதிபதி சுக்கிரனுடனும் சேர்ந்து, 3ம் வீட்டு அதிபதி புதனுடனும் சேர்ந்தும் ,8ம் வீட்டு அதிபதி உச்சமான சனியின் 3ம் பார்வையில் உள்ளார். அல்ப ஆயுளில் மரணம் ஏற்பட்டது.
கடக லக்கின சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும்.
புதன் 3ம் வீட்டு அதிபதி. 3ம் வீடு 8ம் வீட்டில் இருந்து 8ம் வீடு.
இந்த ஜாதகத்தில் 11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 6ல் அமர்ந்து சனியன் 3ம் பார்வையில் உள்ளார் . 11ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார்.
சந்திரனும் புதனும் 6ம் வீட்டில் சேர்ந்து இருந்தால் ஜாதகர் மரணம் விஷத்தால் ஏற்படும் .
6ம் வீடு பாபகர்தாரி தோஷம் ஒரு பக்கம் செவ்வாய் மறு பக்கம் கேது. அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
சந்திர மகா தசை - 5 வயது (1989) முதல் 15 வயது (1999) வரை.
7ம் வீட்டு மாரக அதிபதி உச்ச சனி (6 பரல்) 4ல் அமர்ந்து 3ம் பார்வையால் 6ல் உள்ள சந்திரனை பார்க்கிறார். சந்திர தசை சனி புக்தியில் (1994) 10 வயதில் அல்ப ஆயுளில் மரணம் ஏற்பட்டது
2ம் வீட்டு அதிபதி சூரியன் 5ல் அமர்ந்து, 11ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் பார்வையில் உள்ளார். 11ம் வீடு பாதக ஸ்தானம்.
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சமான செவ்வாயின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது உள்ளது. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். உச்சம் பெற்ற செவ்வாய் பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். அடுத்து வருகிற மகா தசை செவ்வாய். அதற்குள் ஆயுள் முடிந்து விட்டது.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, April 20, 2019 12:20:00 AM
----------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 26 நவ‌ம்பர் 1984ல் இரவு 10.30 மணி அளவில் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1. லக்கினாதிபதி சந்திரன் நோய் ஸ்தானமான 6ம் இடத்தில் மறைந்தது பிறக்கும் போதே உடல் நிலை சரியில்லாத நிலையைக் காட்டுகிறது.
2. உடல் ஆரோக்கியதிற்கு முக்கியமான சூரியன் கேதுவால் கெட்டார்.
3.ஆயுள் ஸ்தானாதிபதியும்(எட்டாம் இட‌ அதிபதி), ஆயுள் காரகனுமான சனி பகவான் 4ல் அமர்ந்து உச்சமானாலும் சூரியனால் எரிக்கப்பட்டு அஸ்தங்கதம் ஆனார்.
4.லக்கினாதிபதி சந்திரன், ராசியதிபதி குரு, 12க்கு அதிபன் புதன் அனைவரும் ஆறில் மறைந்தது.
5. மேற்கண்ட கிரகங்கள் எல்லாம் சனி செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டன.
6.துவக்க நிலை தசா சூரியன் ,சந்திரன் அவர்களுடைய‌ வலுவிழந்த நிலையால் பயனில்லை.செவ்வாய் தசா (யோககாரன் தசா) சிறிது மூச்சு வாங்கிக் கொண்டிருக்கலாம்.ஆனால் தொடர்ந்து வந்த ராகு தசா படுத்தி எடுத்திருக்கும்.
ராகு தசா குரு புக்தி அல்லது சனிபுக்தி காவு வாங்கியிருக்கும், 30 வயதிற்குள்.
7. நாடி சோதிட விதிகளின் படி இவருக்கு 40 வயதிற்கு மேல் இல்லை.
kmrk1949@gmail.com
Saturday, April 20, 2019 5:57:00 AM
--------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. கடக இலக்கின ஜாதகம்.
2. இலக்கினாதிபதி சந்திரனும், இலக்கினமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆம், இலக்கினாதிபதி ஆறாம் இடத்தில் அமர்வு. அவருடன் 3,12ஆம் இட அதிபதி புதன், ஆறாம் இடத்தோன் குரு, பாதகாதிபதி சுக்கிரன் ஆகியோரின் கூட்டணி.
3. மற்றும் அட்டமாதிபதி சனியின் உச்ச பார்வை சந்திரன் மீதும் இலக்கினத்தின் மீதும் உள்ளது. மேலும் செவ்வாய், இராகு இவர்களின் பார்வையும் இலக்கினத்தின் மீது உள்ளது.
4. சந்திரன் பாப கர்த்தாரி யோகத்தால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளார்.
5. அட்டமாதிபதி சனி நான்கில் உச்சம் பெற்றாலும், நான்காம் இடத்தோன் ஆறில் மறைந்ததால் ஆயுள் காரகன் மற்றும் ஆயுள் காரகாதிபதியுமாகிய சனி முழு வலிமை பெறவில்லை.
உயிர் உடல் ஆயுள் ஆகியவை இவ்விதமாக கடுமையான பாதிப்புகளை அடைந்ததால் அன்பர் இளம் வயதிலேயே மறைந்தார்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக பெரியோரே.
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி
Saturday, April 20, 2019 10:37:00 AM
-------------------------------------------
7
Blogger ஃபெர்னாண்டோ said...
சுபர் சம்பந்தம் பெறாத, ருசக யோகம் அடைந்த உச்ச செவ்வாய் மற்றும் அவ்வாறே சுபர் சம்பந்தம் இன்றி, சச யோகம் அடைந்து, மாரகாதியான உச்ச சனி இருவரின் கெடு வலு மிகுந்த பார்வையால் லக்னம் கெட்டுள்ளது. லக்னத்தின் மேல் சுபர் பார்வை, இணைவு இல்லை.
லக்னாதிபதி, நோய் ஸ்தானமான 6-ல் மறைந்து, 6-ம் அதிபதி குரு அங்கு ஆட்சி பலம் பெற்று, உடன் 12-ம் அதிபதி புதன் இணைந்து, பாதகாதிபதி சுக்கிரன் கூடி, சுப வலு இல்லாத, சச யோக மாரகாதிபதி உச்ச சனியின் அதிக கெடு வலு கொண்ட பார்வையும் சேர்ந்து, கெட்டுள்ளார்.
ராசி, ராசிக்கு 6-ம் அதிபதி சுக்கிரன் இணைவால், சுபவலுவற்ற, சச யோக, மாரகாதிபதி உச்ச சனியின் கெடுவலு மிஞ்சிய பார்வையால் கெட்டுள்ளது.
ஆயுள் காரகன் சனி உச்சம், ஆனால், அவருக்கு 8-ம் பாவத்தில் ராகு.
உடம்பு உயிருக்கு காரகனான சூரியன் ராகு-கேதி அச்சில் கெட்டுள்ளார்.
முற்றிலும் பலமிழந்த லக்னாதிபதி தசை 5 வயது நடக்கும்போது தொடங்கியது.
- ஐ எஸ்ஃபெர்னாண்டோ
Saturday, April 20, 2019 12:33:00 PM
----------------------------------------------
8
Blogger Lokes said...
பிறப்பு: 26/11/1984, 22:50 PM.
கடக லக்கினமாகி லக்கினத்தை 7 க்குரிய மாரகாதிபதியும் அட்டமாதிபதியுமான சனி பார்க்க, லக்கினாதிபதி சந்திரன் ஆறில் மறைந்து ஆட்சிபலமுடைய ஆறாம் அதிபதி குருவோடும் விரயஸ்தானாதிபதி புதனோடும் பாதகாதிபதி சுக்ரனோடும் இருக்க ஆறாம் வீடு வலுப்பெற்ற ஜாதகம். அட்டமாதிபதி சனி பார்வையால் லக்கினமும் லக்கினாதிபதியும் வலுவிழந்த ஜாதகம்.
லக்கின யோகாதிபதி செவ்வாய் 7 இல் உச்சம் பெற்று லக்கினத்தை பார்ப்பதாலும் ஆயுள் காரகன் சனி 4 இல் உச்சம் பெற்றதாலும் , மாரகாதிபதி சூரியன் சனி சாரம் பெற்று 8 டிக்ரீக்குள் கேதுவின் பிடியில் இருப்பதால் 4 வயது வரை நடந்த சூரியன் தன் தசையில் மாரகத்தை தரவில்லை. அடுத்தடுத்து 21 வயது வரை நடந்த லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி செவ்வாய் தசை சுமாராக சென்றிருக்கும். அதன் பின் மாரகாதிபதி சூரியனின் சாரமும் பார்வையும் பெற்று பாதகாதிபதி சுக்ரனின் வீட்டில் அமர்ந்த ராகு தசையில் ராகுவிற்கு எட்டில் அமர்ந்த குருபுத்தியில் அல்லது ஆறில் அமர்ந்த சனி புத்தியில் சுயமரணத்தில் வெற்றிகண்டிருப்பார்.
Saturday, April 20, 2019 8:12:00 PM
--------------------------------------------
9
Blogger sundari said...
Dear sir,
Lagana moon in 6th house with 12th house owner mercury mercury is suka owner(3rd house) 6th house owner jupiter in own house 12th house has mandhi that is why he died in young age sir.
Sunday, April 21, 2019 1:18:00 PM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com