8.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?


Astrology: ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம்.

1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 10-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. 12 இல் இருக்கும் அதிபதி புதன் தசை முடியும் தருவாயில் கேது தசை ஆரம்ப தில் அவருக்கு ரொம்ப கஷ்டம் கேது 6 ஆம் அதிபதி செவ்வாய் நேரடி பார்வை இல் இருக்கிறது மேலும் சனி பார்வை இதே கேது சந்தரனுக்கு அஷ்டமத்தில் இருக்குது பொதுவா 7 ஆண்டுகள் ஞான காரன் கேது அவருக்கு எல்லாத விஷயகளையும் அறியா வைத்து நல்ல துவைத்து காயவைத்து உச்ச சுக்காரன் மகா தசை அவருக்கு நல்ல இருக்கும் அது மிதுன லகனத்துக்கு யோகா கிரகம்

    ReplyDelete
  2. ஐயா கேள்விக்கான பதில்
    1 ..லக்கினாதிபதி பனிரெண்டில் விரயத்தில் நீச கேதுவுடன் கூட்டு
    2 .55 ஆவது வயதில் நீச கேது திசை ஆரம்பித்தவுடன் ஆறாம் இடத்தை பார்த்து உடல் நல குறைவு
    3.மேலும் நாலாம் அதிபதி புதனும் கேதுவுடன் சேர்க்கை நாலாம் இடத்தை பார்த்து பண பிரச்னை மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளார்
    4 .பத்தாம் இடத்தில அமர்ந்துள்ள உச்ச சுக்ரனின் தசை ஆரம்பமானவுடன் நிலைமை சரியாகி இருக்கும்
    கூடவே பாக்கியாதிபதி சனியும் உள்ளார்
    நன்றி
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  3. 7 வருடங்கள் துன்பம் என குறிப்பிட்டு கேது தசாவை வாத்தியார் சுட்டிக்காட்டுகின்றார்.

    விரயத்தில் லக்கினாதிபதியுடன்(உடல்) அமர்ந்த கேது நீச குருவின் பார்வை பெறுவதுடன், கேது அமர்ந்த வீட்டின் அதிபதி 10ம் வீட்டில் உச்சம் பெற்று, சனியுடன் கூட்டுச் சேர்ந்தது மாத்த்திரமன்றி வர்க்கோத்தமம் பெற்றது உசித பலன்களை தரும் நிலையயில் இருந்து விலக்களிப்பதாகவே கருதுகின்றேன்.
    எனவே 55 வயதில், கேது தசையில் தொடங்கி 7 வருடங்கள் மிகப் பெரிய பாதிப்பு; (தொடர்ந்த சுக்கிர தசை மிகப்பெரிய சாதகம் கொடுத்திருக்குமா??).

    ReplyDelete
  4. ஐயா,
    08-03-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிதுன லக்ன ஜாதகம். லக்னாதிபதி புதன் 12ல் மறைவு. கேதுவுடன் சேர்க்கை. 55 வயதில் அவருக்கு கேது தசை நடைபெறும். ஏது தசை வந்தாலும் கேது தசை வரக்கூடாது அல்லவா? கேது மிதுன லக்ன பாவரான செவ்வாய் சாரம் பெற்று, செவாயின் பார்வையும் பெறுகிறார். அதனால், கேது தசையின் ஏழு வருடங்களும் அவருக்கு கஷ்டம் தான். அடுத்த சுக்கிர தசை பூர்வ புண்ணியாதிபதி தசையாவதால் அதில் எல்லா சுகமும் கிடைக்கும். சுக்கிரன் உச்ச வர்கோத்தமம்.
    அ.நடராஜன்
    சிதம்பரம்.

    ReplyDelete
  5. வணக்கம் சார்
    55வயதில் தொடங்கிய செவ்வாயின் சாரம் பெற்ற கேதுதிசை தொடங்கியவுடன் ஜாதகருக்கு பதிப்பு நோய் கடன் மனஉளைச்சல் வெறுப்பு பற்றற்ற நிலை போன்ற பல பிரச்சனை ஏற்பட்டன. இவை அனைத்திற்கும் கேதுதிசை தான் காரனம் சார். அடுத்ததாக வந்த லக்க யோககார சுக்கிரனுக்குரிய திசை நடந்த பிறகு ஜாதகர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் சார். த மாணவன் தொட்டியம் சிவக்குமார்.

    ReplyDelete
  6. வணக்கம்.
    26 ஏப்ரல் மாதம் 1937, காலை 10.09 மணிக்கு, ஸ்வாதி நட்சத்திரம் துலா ராசி மிதுன லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
    ஜாதகருக்கு 55 வயதில் கேது மகா தசை (1991-1998)

    1. கஷ்டங்களுக்கு ஜாதகபடி என்ன காரணம்.

    மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் (4 பரல்) கேதுவுடன் சேர்ந்து 12ம் வீட்டில் மறைந்துள்ளார். கஷ்டங்கள் வரும் பொழுது தாங்கும் சக்தி இல்லாமல் அவதி படுகிறார்.
    6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ல் அமர்ந்து, மேலும் ராகுவுடன் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி புதனை பார்க்கிறார்.
    சனியின் 3ம் பார்வையும் 12ம் வீட்டின் மீது இருப்பதால் இழப்புக்கள். விரையங்கள், அயனம், சயனம், போகம் பாதிப்பு.
    12ம் வீட்டு அதிபதி சுக்கிரன் சனியுடன் 10ம் வீட்டில் கூட்டு சேர்ந்து உள்ளார்.
    குரு மகர ராசியில் நீசம். அவருடைய 5ம் பார்வை பலன் இல்லாமல் போய்விடுகிறது.

    அப்பொழுது கோள்சாரத்த்தில் 1990-1993 வரை சனி 8ம் வீட்டில் அமர்ந்து ( அஷ்டமத்து சனி) 2ம் வீட்டை பார்ப்பதால் வருமானம் பாதிப்பு, பண கஷ்டம்.
    அதே சமயத்தில் லக்கினத்தில் கேது 7ம் வீட்டில் ராகு அமர்ந்து ராகு-கேது பெயர்ச்சி. ராகுவின் பார்வை லக்கினத்தை பார்ப்பதால் நோயில் பாதிக்க பட்டார்.
    கோள்சாரத்த்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து 8ம் வீட்டில் இருப்பதால் மனதினால் கஷ்டம், உடல் நிலை பாதிப்பு ஆகியவை.

    2. கஷ்டங்கள் எப்பொழுது நிவர்த்தியாகும்

    ஜாதகரின் 61 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் (1998-2018) . சுக்கிரன் (3 பரல்) மீன ராசியில் உச்சம். நவாம்சத்த்திலும் உச்சம். வர்க்கோத்தமம் அடைந்துள்ளார். எல்லா கஷ்டங்களிருந்தும் மீண்டு வருவார்.

    11ம் வீட்டில் மேஷ ராசியில் சூரியன் உச்சம். சூரியனும், சந்திரனும், ஒருவருக்கு ஒருவர் 7ம் பார்வையில் உள்ளனர். இது ஒரு ராஜ யோகம்.

    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா🙏

    ஒருவருடைய வாழ்வில் நிகழும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக அமைவது தசாபுத்தி ஆகும். எனவே மிதுன இலக்கின ஜாதகமான அவருக்கு 55 அகவையில் நடந்த துன்பங்களுக்கு காரணம், அந்த அகவையில் தொடங்கிய கேது மகா தசையாகும். இந்த ஜாதகத்தில் கேது பகவான், ஆறுக்குடையோன் சாரம் பெற்று, 12இல் அமர்ந்துள்ளார். மேலும் ஆறாம் இடத்தான் செவ்வாயின் பார்வையிலும் உள்ளார் கேது பகவான்.

    7 ஆண்டுகள் கேது தசை முடிந்து அடுத்து வரும் சுக்கிர தசையில் நலம் பெறுவார். ஜாதகப்படி சுக்கிர பகவான் பூர்வபுண்யாதிபதி அல்லவா. அவர் உச்ச கேந்திரத்தில் உச்சம் பெற்று வர்க்கோத்தமமும் அடைந்துள்ளார். எனவே அவர் நற்பலன்கள் அருள்வார்.


    முருகன் ஜெயராமன்
    புதுச்சேரி.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    ஜோதிடப் புதிர்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?
    மிதுன லக்கினம், துலா ராசி ஜாதகர்.
    அவருடைய 55 வயதில் தொடங்கிய கஷ்ட காலம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரத்தினை ஏற்படுத்தியது.
    1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
    2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?
    அ) லக்கினாதிபதி புதன் 12ல் கேதுவுடன் கூட்டணி வைத்து வலுவிழந்துள்ளார். அவரின் மேல் 6ம் அதிபதி செவ்வாய் மற்றும் ராகுவின் நேர் பார்வையுள்ளது. அட்டமாதி சனியின் மூன்றாம் தனிப்பார்வை வேறு அவரின் மேலுள்ளது.
    ஆ) ஜாதகரின் 55 வயதில் வந்த கேது தசை தொடர்ந்து ஏழு வருடங்கள் அவருக்கு எண்ணொனாத் துயரங்களை கொடுத்தது.ஆறாம் அதிபதி செவ்வாய் 6ல் ராகுவுடன் கை கோர்த்து (குஜ‍ ராகு சந்தி) ஜாதகருக்கு வியாதியை ஏற்படுத்தி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார். உடல் காரகன் சூரியன் மேசத்தில் உச்சமாகியிருந்தாலும், இரு புறங்களிலும் கேது, சனியினால் சூழப்பட்டு கத்திரியின் பிடியில் அகப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
    இ) பிறகு வந்த வர்க்கோத்தம உச்ச சுக்கிரனின் தசை, ஜாதகரின் எல்லா கஷ்டங்களையும் நீக்கி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  9. ஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் பிறந்தவர்.
    இவரது 55வது வயதில் கேதுதசா துவங்கியது 12ல் மறைந்த லக்கினாதிபதியை கேதுவும் சேர்ந்து வலுவிழக்கச்செய்தது. கேதுதசா 7 ஆண்டுகளும் நரகம் போல வாழ்வு அமைந்தது.

    அதன் பின்னர் 62 வயதில் துவங்கிய சுக்கிர தசா,ஜாதகத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் உதவி செய்து,அவரைக் கை தூக்கிவிட்டது. கடமைகளை நன்கு ஆற்றியிருக்க வேண்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com