தமிழை தாலாட்டிய வெண்கலம்...
விநாயகனே வினை தீர்ப்பவனே..என்று கேட்க ஆரம்பித்தால் அந்த விடியற்காலைப்பொழுது அவ்வளவு பக்திமயமாகிவிடும்..
பக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது
இவரின் குரல்
தொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..
இரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..
திரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..
கர்நாடக இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கம் ஈடுகொடுத் சாகசம் செய்துகொண்டே திரைப் பாடல்கள் மூலமும்
மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை
எம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி
கட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..
ஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர்.. ஆனானப்பட்ட
ஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லி யமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால்தான்
ஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம்
திரைப்பாடல்கள்..
உழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர்
குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாகிவிட்டது..
சந்திரோதயத்தில், டிஎம்எஸ்சுடன் இணைந்து பாடிய, காசிக்கு போகும் சன்யாசி..பாடல் இன்றளவும் குரல் வள மேதைகளின்
ரகளைக் கச்சேரி என்றே சொல்லலாம்..
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...
பட்டணந்தான் போகலாமடி,,,
அறுபடை வீடு கொண்டதிருமுருகா..
தேவன் கோவில் மணியோசை.
பணம் பந்தியிலே..குணம் குப்பையிலே
எங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.
அமுதும் தேனும் எதற்கு...
இப்படி போய்க்கொண்டே இருக்கும் கானங்களின் பட்டியல்..
கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத்தின் ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....'' பாடலின் கம்பீரக்குரல்.
புதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்..
இசைக்காக எண்ணற்ற பட்டங்களை வென்று தமிழினத் தின் நிகரற்ற அடையாளமாகத் திகழும் மறைந்த பத்ம ஸ்ரீ சீர்காழி
கோவிந்தராசனின் 55 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார்.
Sirkazhi Govindarajan (19 January 1933 - 24 March 1988)
ஆக்கம்: எழுமலை வெங்கடேசன்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir good news to hear vazhga valamudan thanks sir
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteநமக்கெல்லாம், தெய்வத்தால் தேன் குரலோடு தமிழ் பாடல்களைப் பாட
வாரம் பெற்று தமிழகம் வந்துதித்த
செம்மல் பத்மஸ்ரீ சீர்காழி அவர்கள்.
வாழ்ந்தது 65 ஆண்டுகளே ஆனாலும்
அவரது பாடல்கள் சிரஞ்சீவித்வம்
வாய்ந்தவை.
தொகுப்பாளர் திரு எழுமலை வெங்கடேசன் கூறியுள்ளது பொல்
அவரது பாடல்களை பற்றி சொல்லிக்
கொண்டே போகலாம்.எல்லாமே சிறந்தவை!
என் நீஞ்சில் நீங்காத இடம் பெற்ற
அவரது பாடல்: " நீயல்லால் தெய்வமில்லை....என்று தொடங்கும் முருகன் பாடல்...
ஐயா
ReplyDeleteஅவருடைய முட்டை முட்டை கண்களும்ம், குள்ள உருவமும், மண்டையை ஆட்டி கொண்டு படும் தோரணையும், தும்பிக்கையில்லா பிள்ளையார் போலவே இருக்கும். சின்னசிறு பெண் போலே.... பாட்டு கேட்டால் அப்படியே கண் எதிரே அம்பாள் தோன்றிவிடுவாள்..
வெ நாராயணன்
புதுச்சேரி
Agreed Sir.
ReplyDelete/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir good news to hear vazhga valamudan thanks sir////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
நமக்கெல்லாம், தெய்வத்தால் தேன் குரலோடு தமிழ் பாடல்களைப் பாட
வரம் பெற்று தமிழகம் வந்துதித்த
செம்மல் பத்மஸ்ரீ சீர்காழி அவர்கள்.
வாழ்ந்தது 65 ஆண்டுகளே ஆனாலும்
அவரது பாடல்கள் சிரஞ்சீவித்வம்
வாய்ந்தவை.
தொகுப்பாளர் திரு எழுமலை வெங்கடேசன் கூறியுள்ளது பொல்
அவரது பாடல்களை பற்றி சொல்லிக்
கொண்டே போகலாம்.எல்லாமே சிறந்தவை!
என் நீஞ்சில் நீங்காத இடம் பெற்ற
அவரது பாடல்: " நீயல்லால் தெய்வமில்லை....என்று தொடங்கும் முருகன் பாடல்...//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!
/////Blogger Narayanan V said...
ReplyDeleteஐயா
அவருடைய முட்டை முட்டை கண்களும்ம், குள்ள உருவமும், மண்டையை ஆட்டி கொண்டு படும் தோரணையும், தும்பிக்கையில்லா பிள்ளையார் போலவே இருக்கும். சின்னசிறு பெண் போலே.... பாட்டு கேட்டால் அப்படியே கண் எதிரே அம்பாள் தோன்றிவிடுவாள்..
வெ நாராயணன்
புதுச்சேரி/////
உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நாராயணன்!!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteAgreed Sir./////
நன்றி கிருஷ்ணன் சார்!!!!