திருநள்ளாறும் சனீஷ்வரனும்!
தெரிந்து கொள்வோம்.
#திருநள்ளாறு சனி பரிகார ஸ்தலம் அல்ல.
பெரும்பாலோனோர் திருநள்ளாறு திருத்தலத்தை சனியின் பரிகாரத் தலமாக கருதுகின்றனர்.
அவ்வாலயம் சனியதன் ஆலயமோ - சனிக்கு ப்ரீதியான இடமோ அல்ல.
அவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் தளமாகும்.
வருத்ததிற்கு உரிய விஷயம் என்னவென்றால் சுவற்றில் குடையப்பட்டிருக்கும் சனியை பார்க்க முந்தியடித்து செல்லும் மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிப்பதில்லை.
தல வரலாறு:
நள தமயந்தியை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.
நளமகாராஜாவுக்கு 7 1/2 சனி பிடித்தது. அவரது ராஜ்யம், மனைவி தமயந்தி மக்கள் அனைவரையும் இழந்தார். எனினும் சனியானவர் நள மகாராஜாவை விடாமல் துரத்தினாராம்.
அப்பொழுது நளமகாராஜா திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று ஈசனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஈசன் அங்கு தோன்றி, சனியை ஆலயத்தின் உள்ளே வராதே என்று சொல்ல சனியும் ஆலய வெளியிலேயே நின்றுவிட்டார்.
அத்துடன் திருநள்ளாறு வந்து என்னை அதாவது, ஸ்ரீ தர்பாரனண்யேஸ்வரரை தரிசத்து செல்பவரை சனி பிடிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார்.
ஆக திருநள்ளாறு திருத்தலத்தில் தரிசிக்கப்பட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரே தவிர சனி அல்ல.
ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றாலே சனி பீடை தானாக விலகிவிடும்.
ஆகவே இதைப்படிக்கும் அன்பர்கள் திருநள்ளாறு சென்றால் சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை கட்டாயம் தரிசியுங்கள்.
தல விருட்சம்:
திருனள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தல விருக்ஷமாக இருப்பது தர்பைப்புல் தாவரம்.
இதுவே அவ்வாலயம் சனி பரிகார ஸ்தலம் அல்ல என்பதை நிரூபிக்கும். ஏனெனில் சனியின் அபிமான தாவரம் வன்னி எனப்படும் மரமே தவிர தர்ப்பைப்புல் அல்ல....!!!!
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteஅறிந்து கொண்டோம் ஆலய வரலாறு மற்றும் சனி பகவான் ஸ்தலம் அல்ல என்பதற்கு ஆன முக்கிய விஷயமான ஸ்தல விருட்சம்
தர்ப்பை என்பது!.
ஆனால் ஏனோ தினசரிகளில் எழுதும் எல்லா ஜோதிடர்களும் மற்றும் பரிகாரம் சொல்லும் குருக்களும் திருநள்ளாறு செல்லத்தான் எழுதித் தருகிறார்கள்?!
என்ன உலகமடா?
ஐயா வணக்கம்
ReplyDeleteஅருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டேன்.
நன்றி ஐயா
கண்ணன்
Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
/////K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
அறிந்து கொண்டோம் ஆலய வரலாறு மற்றும் சனி பகவான் ஸ்தலம் அல்ல என்பதற்கு ஆன முக்கிய விஷயமான ஸ்தல விருட்சம் தர்ப்பை என்பது!.
ஆனால் ஏனோ தினசரிகளில் எழுதும் எல்லா ஜோதிடர்களும் மற்றும் பரிகாரம் சொல்லும் குருக்களும் திருநள்ளாறு செல்லத்தான் எழுதித் தருகிறார்கள்?!
என்ன உலகமடா? ///////
எழுதித்தந்தால் என்ன? அங்கே உறைந்திருக்கும் மூலவரான சிவனாரை வணங்கிவிட்டு பிறகு சனீஷ்வரனை வணங்குங்கள்! நன்றி வரதராஜன்!!!!
//////Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டேன்.
நன்றி ஐயா
கண்ணன்//////
நல்லது. நன்றி கண்ணன்!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!