9.1.19

நீங்களும், நானும் தனியார் தொலைக் காட்சிகளும்!!!!



நீங்களும், நானும் தனியார் தொலைக் காட்சிகளும்!!!!

*தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாகத்தானிருந்தது.*

இல்லத்தரிசிகள் இல்லத்தில் ஊறுகாய்  போடுவார்கள், வடகம் போடுவார்கள், கூடை பின்னுவார்கள், ஸ்வட்டர்  பின்னுவார்கள்.

இப்பொது இவை எல்லாம் செய்வது இல்லை.  வேலை செய்யாததால் நோய்கள் பெருகி வருகின்றது. வந்தாரை வரவேற்கும் தமிழர் பண்பாடும் வழக்கொழிந்து வருகின்றது.

தொலைக்காட்சித் தொடருக்கு அடிமையாகி விட்டனர். இவர்களை மீட்டு எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சித் தொடர்களில் கள்ள உறவு, பழிக்குப் பழி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் விதமாகவே காட்சிகள் வருகின்றது.

மாமியார் மருமகள் சண்டையிட்டுக் கொள்ள  பயிற்சி தரும் விதமாகவே தொடர்கள் வருகின்றது .

தொடர்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பவர்களுக்கு , ஒளிபரப்பும் தொலைக் காட்சிகளுக்கு யாருக்குமே சமூக அக்கறை இல்லை.

பணம் சேர்ப்பது ஒன்றே குறிகோளாக இருக்கின்றனர்.

திரைப்படங்கள் தணிக்கை செய்வது போல தொடர்களும் தணிக்கை செய்த பின்பே ஒளிப்பரப்பப்பட வேண்டும்.

திரைப்படங்கள்  தணிக்கை சரியாக செய்வது இல்லை வேறு விஷயம். கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும்.

தொடர்களில் திரைப்படங்களை விஞ்சும் வண்ணம் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. மனிதர்களை விலங்காகும் வண்ணம் தீய எண்ணத்தை கற்பிக்கின்றனர்.

ஒரு பெண் இவ்வளவு மோசமாக இருப்பாளா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெண்ணை மோசமாக, 
கேவலமாக, கொடூரமாக தொடர்களில் காட்டிப் பெண் இனத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர்.

ரவுடிகளை கதாநாயகனாகச்  சித்தரித்து வருகின்றனர். சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் இந்தத் தொடர்களுக்கு எதிராக உரக்கக் குரல்  கொடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு ஆனால் அதனை மூடநம்பிக்கைப் பரப்பவே பயன்படுத்துகின்றனர்.

சாமியார் சகல சக்தி உள்ளவர் போல தொடர்களில் காட்டுகின்றனர். செய்தியில் சாமியாரின் பித்தலாட்டத்தை காட்டுகின்றனர் 
முரண்பாட்டைப் பாருங்கள் .
------------------
அயல் நாடுகளில் தொலைக்காட்சியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர். நம் நாட்டில் தொலைக்காட்சியை சாப்பாடுப் போல சாப்பிடுகின்றனர்.
------------------
பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும்  நடிகர்களை அவதாரப் புருசர்கள் போல் சித்தரித்துப் பித்தலாட்டம் செய்கின்றனர்.

பாட்டுக்கு நடுவராக வரும் பாடகிகள் கவர்ச்சி  நடிகைகளை மிஞ்சும் வண்ணம் குத்தாட்டம் போடுகின்றனர். குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க முடிய வில்லை. இப்போது  தொலைக்காட்சியும் பார்க்க முடிவதில்லை.

ஆபாசத் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புவதற்கு என்றே தனி சேனல்கள். அரசு தொலைக்காட்சியில் அன்று வெள்ளிக் கிழமை மட்டும் அரை மணி நேரம் ஒளியும் ஒளியும் ஒளிப்பரப்பானது. இன்று 24 மணி  நேரமும் ஒளிப்பரப்பாகின்றது. சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றனர்.

திரைப்படத்தில் வரும் வன்முறை வசனங்களை  தொலைக்காட்சியில் விளம்பரத்தில் அடிக்கடி ஒளிப்பரப்பி இன்று குழந்தைகள் கூட பொருள் புரியாமல் கொன்னு புடுவேன்  என்கின்றனர்.

அரசியல் விவாதங்கள் பொய்யை பரப்பும் களமாக மாறிவிட்டது. புழுகுமூட்டை கொட்டப்பட்டு மக்களின்  உள்ளங்களை அழுக்காக்குவதற்கே துணை போகின்றன, 90 சதவீத விவாதங்கள்.

குடியும், விபச்சாரமும் நாகரிகம் எனும் பிம்பம்  பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஊடுருவ கங்கணம் கட்டிக்கொண்டு பல சேனல்கள் அலைகின்றன. தங்கள் வருமானத்தை  பெருக்கிக் கொள்ள எந்தவித இழிவான செயலுக்கும் செல்ல மக்களை மக்களின் நற்குணங்களை சீரழிப்பது போலவே பல நிகழ்ச்சிகள் அறங்கேற்றப்படுகின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சொல்லி உள்ளேன் இது போன்று ஏராளம் கெட்ட பின் விளைவுகள் தொலைக் காட்சிகளால் நிகழ்கின்றது.

*இப்படிக்கு மனம் பதறும் ஒரு சாமானியன்....!!*
-----------------------------------------------------------
படித்து அதிர்ந்ததை பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. வணக்கம் குரூவே,
    நியாயமா அங்கலாய்ப்பு!நாட்டு
    நடப்பை அப்படியே படம் பிடித்துக்
    காபட்டப்பட்டுள்ளது. ஆனால், சென்ஸார் உள்ளது பெரிய விஷயம்
    அல்ல. சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது அங்கும் பணம் சம்பாதிப்பது என்பது தானே குறிக்கோளாக உள்ளது.மக்கள்
    நலனை எங்கே பார்க்கிறார்கள்?
    பொன்மனச் செம்மல் கூறியது போல்
    "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது".....

    ReplyDelete
  2. This is true. My daughter never see TV, she has been teased by her friends in school that she doesn't know the latest flim songs and character in TV Serials. 4th std students discussing the TV characters and reality shows in their class. She came home and crying to me that she doesn't know anything. I don't know what to do except worrying for the present situtation.

    But who will take action against Media.

    ReplyDelete
  3. இன்னமுமா உங்கள் வீட்டில் டிவி இருக்கிறது..
    எங்கள் வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக டிவி இல்லை..

    உங்கள் வீட்டில் இருந்தால்
    முதலில்
    விற்று விடுங்கள்..

    இல்லை என்றால் வாங்க வேண்டும் என்ற
    எண்ணத்தை மாற்றி விடுங்கள்.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Fact...

    Thanks for sharing.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,நிறைய குடும்ப தலைவிகள்,இந்த டிவிக்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டார்கள்.ஏதாவது தடங்களால் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை காண முடியவில்லை என்றால்,அவர்களுக்கு சித்தசுவாதீனமே லந்துவிடும். ஆண்களுக்க இந்த பிரச்சினை அதிகம் இருப்பதாய் தெரியவில்லை.நன்றி.



    ReplyDelete
  6. This is true. Parents are spoiled by watching too much TV and they are the ones who are supposed to guide their kids on what to watch! Even elixir turns poisonous when taken in excess same applies here. Better alternatives are reading books, exercising, going for walk and traveling. Peace.

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குரூவே,
    நியாயமா அங்கலாய்ப்பு! நாட்டு
    நடப்பை அப்படியே படம் பிடித்துக்
    காபட்டப்பட்டுள்ளது. ஆனால், சென்ஸார் உள்ளது பெரிய விஷயம்
    அல்ல. சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது அங்கும் பணம் சம்பாதிப்பது என்பது தானே குறிக்கோளாக உள்ளது.மக்கள்
    நலனை எங்கே பார்க்கிறார்கள்?
    பொன்மனச் செம்மல் கூறியது போல்
    "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"...../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  8. ////Blogger GAYATHRI said...
    This is true. My daughter never see TV, she has been teased by her friends in school that she doesn't know the latest flim songs and character in TV Serials. 4th std students discussing the TV characters and reality shows in their class. She came home and crying to me that she doesn't know anything. I don't know what to do except worrying for the present situtation.
    But who will take action against Media./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    இன்னமுமா உங்கள் வீட்டில் டிவி இருக்கிறது..
    எங்கள் வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக டிவி இல்லை..
    உங்கள் வீட்டில் இருந்தால்
    முதலில்
    விற்று விடுங்கள்..
    இல்லை என்றால் வாங்க வேண்டும் என்ற
    எண்ணத்தை மாற்றி விடுங்கள்.//////

    நல்லது. உங்களின் யோசனைக்கு நன்றி வேப்பிலையாரே! நான் டி.வி.பார்ப்பதில்லை!!!!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Fact...
    Thanks for sharing.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நிறைய குடும்ப தலைவிகள்,இந்த டிவிக்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டார்கள்.ஏதாவது தடங்களால் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை காண முடியவில்லை என்றால்,அவர்களுக்கு சித்தசுவாதீனமே லந்துவிடும். ஆண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் இருப்பதாய் தெரியவில்லை.நன்றி.//////

    நல்லது. உங்களின் எண்ணப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  12. /////Blogger Arunmozhi said...
    This is true. Parents are spoiled by watching too much TV and they are the ones who are supposed to guide their kids on what to watch! Even elixir turns poisonous when taken in excess same applies here. Better alternatives are reading books, exercising, going for walk and traveling. Peace.//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    very much true Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  14. Dear sir

    I didnot watch tv but i am always using computer machine what to do this machine so many people are spoiled by these machine

    ReplyDelete
  15. /////Blogger sundari said...
    Dear sir
    I didnot watch tv but i am always using computer machine what to do this machine so many people are spoiled by these machine//////

    நல்லது. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  16. Vanakkam Ayya,

    You have published a very important issue in current society. Any crime happens the issues oversized and for the whole day is broadcasted. Movie stars are made Superman and woman are shown as a showpiece. The TV channels compete between themselves and dragging the youths to a disaster. TV broadcasting is a very big tool reach people even in the remote areas which should be used wisely and entertain people.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com