சுஜாதாவின் மருத்துவமனை அனுபவம்!!!!!
உடல் நலம் குன்றிய போதும் எழுதுவதற்கு எழுத்தாளர் சுஜாதாவால் மட்டுமே முடிந்திருக்கிறது!!!!.
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்...
முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் 'வேண்டாம்...!' என்று சொல்லி விடுங்கள் . முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள். எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.
சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..! யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில் அகப்படுவீர்கள்.
ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல் தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.
"ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?" என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.
"ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!" என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.
அடுத்து,அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ. "யார் லேசிக்சை நிறுத்தியது..?"...இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.
ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம்.
சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து ...ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது...!
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================
இதன் தொடர்ச்சி இதைவிட சுவாரஸ்யமாக இருக்கும். அவர் முடிவை அவர் அப்போதே அறிந்தது போல இருக்கும். விகடனில் வந்தபோதே படித்தது. என்னிடம் கற்றதும் பெற்றதும் தொகுப்பும் இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteமாத்திரைகள் முழுங்கினாலும மதி மயங்க விட மாட்டேன்,மனம் எழுதட்டும் என்று தன்னிகரில்லா
சுஜாதா வரித்துள்ள வார்த்தைகள் நகைச்சுவை கலந்த சிந்தனை
வாக்குகள், நாம் என்ன விதிவிலக்கா₹!
'ஆஸ்பத்திரி ஒரு த்ரில்லர் ஷோ'...
அநுபவம்...பேசுகிறதய்யா!!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஇதன் தொடர்ச்சி இதைவிட சுவாரஸ்யமாக இருக்கும். அவர் முடிவை அவர் அப்போதே அறிந்தது போல இருக்கும். விகடனில் வந்தபோதே படித்தது. என்னிடம் கற்றதும் பெற்றதும் தொகுப்பும் இருக்கிறது./////
நல்லது. மேலதிகத் தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்!!!!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
மாத்திரைகள் முழுங்கினாலும மதி மயங்க விட மாட்டேன்,மனம் எழுதட்டும் என்று தன்னிகரில்லா
சுஜாதா வரித்துள்ள வார்த்தைகள் நகைச்சுவை கலந்த சிந்தனை
வாக்குகள், நாம் என்ன விதிவிலக்கா₹!
'ஆஸ்பத்திரி ஒரு த்ரில்லர் ஷோ'...
அநுபவம்...பேசுகிறதய்யா!!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post...
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
unique writing!!
ReplyDeleteஇவ்வளவு நல்ல எழுத்தாளர் அனைத்தும் அறிந்தவர்.இருப்பினும் தன் ஆரோக்கியம் மீது அக்கறை இல்லாமல் இருந்துள்ளார்.
ReplyDelete////Blogger Elango Sellappan said...
ReplyDeleteஇவ்வளவு நல்ல எழுத்தாளர் அனைத்தும் அறிந்தவர்.இருப்பினும் தன் ஆரோக்கியம் மீது அக்கறை இல்லாமல் இருந்துள்ளார்./////
உண்மைதான். சூழ்நிலையும், நேரமின்மையும் கூட காரணமாக இருந்திருக்கலாம். நன்றி!!!!!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteunique writing!!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!