Astrology: ஜோதிடம்: புதிர்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்!!!!
ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக் குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!
20-1-2019 ஞாயிறன்று சரியான பதில் வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நவகிரகங்களில் சனி,ராகு,கேது போன்ற பாவிகள் சாதகமற்று அமைந்து சுபர் பார்வை,சேர்க்கையின்றி இருந்து திசா, புக்தி நடைபெறும் போது தன்னிலை மறந்து மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
ReplyDelete- லக்கினாதிபதி சுக்ரன் 12 ல் நீசம்
- பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் (சூரியன் சிம்மத்தில் )
- குரு + கேது - தன்னிலை மறக்க குடிக்கும் பழக்கம்
- சனி தசையில் (தனது, மற்றும் புதன் புக்தியில் மது பழக்கம் ஆரம்பம் ஆனது, கேது புக்தியில் அளவுக்கு மீறி போய்விட்டது)
வணக்கம்
ReplyDeleteபுதிருக்கான பதில்
அதீத குடி பழக்கத்திற்கான காரணங்கள்
1. லக்கின அதிபதி சுக்கிரன் லக்கின கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில மறைந்து ஜாதகரின் வாழ்வை விரயம் செய்தது .
2. நவாம்ச கட்டத்திலும் லக்கின அதிபதி சுக்கிரனுடன் ராகு கூட்டு .
3. ஆறாம் இடது அதிபதி குரு மாந்தி யுடன் சேர்ந்து குடி பழக்கத்தை ஏற்படுத்தியது . மேலும் ஆறாம் இடத்தில ராகுவின் பார்வை அதை ஊக்க படுத்தியது .
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
வணக்கம்
ReplyDeleteபுதிருக்கான பதில்
அதீத குடி பழக்கத்திற்கான காரணங்கள்
1. லக்கின அதிபதி சுக்கிரன் லக்கின கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில மறைந்து ஜாதகரின் வாழ்வை விரயம் செய்தது .
2. நவாம்ச கட்டத்திலும் லக்கின அதிபதி சுக்கிரனுடன் ராகு கூட்டு .
3. ஆறாம் இடது அதிபதி குரு மாந்தி யுடன் சேர்ந்து குடி பழக்கத்தை ஏற்படுத்தியது . மேலும் ஆறாம் இடத்தில ராகுவின் பார்வை அதை ஊக்க படுத்தியது .
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
வணக்கம் ஐயா,1)லக்னாதிபதி சுக்ரன் நீசமாகி விரையத்தில் அமர்ந்து,6ம் இடமான நோய்க்கான பாவத்தை தன் பிடியில் வைத்துள்ளார்.அம்சத்திலும் அவர் பகை வீட்டில்.2)நீச சுக்ரனுக்கு லக்ன பாபர் குருவின் நீச பார்வை.செவ்வாய் பார்வை.யோககாரகன் சனி கேதுவுடன் சேர்ந்து கெட்டதால்,லக்ன சுபத்தன்மை மாறி,இயற்கை குணத்தை கொண்டதால்,அவர் பார்வையும் லக்னாதிபதிக்கு கெடுதலாய் ஆனது.செவ்வாய் லக்னத்திற்க்கு நடுநிலையானவர் ஆனாலும் அவரும் சனி பார்வையால் கெட்டு லக்னாதிபதியை பார்க்கிறார்.3)சரி.மனோகாரகன் சந்திரன் வளர் பிறையாகி வலுவுடன் நட்பு வீட்டில் இருந்தாலும்,அவரால் மனதை அடக்க முடியாது.காரணம் லக்னாதிபதி சொல்வதைத்தான் அவர் ஊக்கமாக செய்ய வேண்டும்.4)கஜகேசரி,சசிமங்களம் என்று சந்திரன் சம்மந்தபட்ட யோகங்கள் இருந்தாலும் அவற்றால்,லக்னாதிபதியின் வலுவை மீறிய பலன் இல்லை.5)குரு இயற்க்கை சுபர் என்பதால்,குரு தசா சுக்ர புத்தியில் கெடு பலன்களை தரவில்லை.அடுத்து வந்த சனி தசா,சுக்ர புத்தியில் மதுவிற்க்கு அடிமையானார்.மதுவிற்க்கு அடிமையான காரணம் பிடிபடவில்லை.சுக்ரனின் காரகங்களில் மதுவும் என்பதாலா?.நன்றி.
ReplyDeleteஜாதகனுக்கு, சோகம், பலவீனம் அளிக்கும் வகையில் முக்கிய கிரக அமைப்புகள் காணப்படுகின்றன. லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் நீசம் பெறுவதும் 10ம் அதிபதி (ஜலராசி - தொழில் ஸ்தானாதிபதி) சந்திரன் லக்கினத்தில் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெற்று இருப்பினும், அம்சத்தில் சுக்கிரன், செவ்வாய் புதன் கிரகங்கள் மேலும் பலவீனப் பட்டிருப்பது உடல், உள நிலையில் ஸ்திரமற்ற நிலையை கொடுத்தது.
ReplyDeleteGood morning sir, The person was born on 02/09/1973 10.10am 12th house represents Ayana Sayana Bogasthanam here lagnathypathy Venus in 12 th house in debilitated state makes him Drunker
ReplyDeleteஐயா,
ReplyDelete18-01-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் துலா லக்ன ஜாதகம் ஆகும். லக்னாதிபதி சுக்கிரன் 12ல் நீசமாக உள்ளார். லக்னத்தில் தேய்பிறை சந்திரன். சுக ஸ்தானத்தில் நீச குருவுடன் மாந்தி. சுகக்கேடு. சனிதான் போதைக்குரிய கிரகம்.அது கேதுவுடன் சேர்ந்தது, சனி தசையில் ஜாதகரை முழு குடிகாரனாக்கியது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
அய்யா வணக்கம் 🙏
ReplyDeleteஅய்யா, இது துலாம் இலக்கின ஜாதகம். இலக்கினாதிபதி சுக்கிரன் நீசம் மற்றும் விரயம் ஸ்தானம் சென்றது. மூன்றாம் இடத்தோன் குரு நீசம் அடைந்து, மூன்றில் பாபர் இராகு வின் அமர்வு, மூன்றாம் இடத்தை சனி, கேது இவர்களின் பார்வை. மனோகாரகன் சந்திரனும் நீசன் வீட்டில் அமர்ந்தது ஆகிய காரணங்களால் ஜாதகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
வணக்கம் சார்
ReplyDeleteதுலா லக்கனம் நபரிடம் எல்லா கெட்ட பழக்கம் இருக்கும் இவர்களுக்கு குடி சினிமா சங்கீதம் உல்லாசம் எல்லா பிடிக்கும் பொதுவா லக்கினஅதிபதி சுகுரான் இது வேற நிசம் ஆகி 12 இல் இருக்கிறார் சனி 9இல் கேது கூட இருக்கிறார் அந்த வீடு சாமி குமிடுவது ஒழுக்கம் அ னிய நாடு எல்லாத்தியும் குறிக்கும் சனி மகா தசை அவரை குடிகரான ஆகிடுச்சு
சனி கெட பழக்கத்துக்கும் பொறுப்பு நல்ல பழக்கத்துக்கும்
வணக்கம் அய்யா,
ReplyDeleteதுலா லக்கின ஜாதகர். லக்கினாதிபதி 12 -இல் நீச்சம் பெற்று மறைந்துள்ளார். வாழ்க்கை பயனில்லாமல் விரயமாகிறது .
சுக்ரன் 8 மதிபதியும் ஆகிறார். சுக்ரன் 12 -இல் மறைவதும் ,
3 ,6 குடைய உச்ச குரு (நீச்ச வக்கிரம் ) சுக்ரனை பார்ப்பதும்,
நவாம்சத்தில் சுக்ரன் ராகுவோடு சேர்ந்ததும்
ஜாதகரை குரு தசையில் குடி பழக்கத்திற்கு அடிமையாக்கியது. குரு மாந்தியோடு சேர்ந்ததால் முழுமையான அசுபர் போல் செயல்படுகிறார்.
யோக காரகனான சனி,( ராகு - கேது) பிடியில் உள்ளார்.
3 மிட ராகுவும் , லக்கினத்தை பார்க்கும் ஆட்சி பெற்ற செவ்வாயும்
அதீத தைரியத்தையும் , யார் சொல்லையும் கேட்காத பிடிவாதத்தையும் தருகிறது.
நன்றி
வணக்கம்.
ReplyDelete02/09/1973 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 10.04.14 மணிக்கு ஸ்வாதி நட்சத்திரத்திர துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம் - சென்னை)
1. 7ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் சுலபமாக மதுக்கு அடிமையாவார்கள்.
2. 12ம் வீட்டில் லக்கினாதிபதி சுக்கிரன் மறந்து இருப்பதால் எப்பொழுதும் தவறான செயல்கள் செய்வார்கள் . மதிப்பும், மரியாதையும் கிடைக்காது . சுக்கிரன் நீசம் கன்னி ராசியில் .
3. ஜாதகருக்கு 18 வயது முதல் (1991) 37 வயது வரை (2010) சனி மஹா தசை . 4ம் வீட்டு அதிபதி சனி 9ம் வீட்டில் கேதுவுடன் அமர்ந்து 3ல் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வையில் உள்ளார் . துர திருஷ்டம் பின் தொடரும் . பாக்கியம் இல்லாமல் செய்து விட்டார் . பின் நாட்களில் சாமியாராகி விடுவார். கல்வி பாதிப்பு ஏற்பட்டது
4. லக்கினத்தில் உள்ள சந்திரனால் வாக்கு திறன் பாதிக்கப்பட்டது ஜாதகர் அழகானவர் .
சந்திரசேகரன் சூரியநாராயணன்