25.1.19

Astrology: Jothidam: Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?

Astrology: Jothidam: Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?

ஒரு அன்பரின்  ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தனது 44 வது வரை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவரை காலதேவன் புரட்டிப் போட்டுவிட்டான். பார்த்துவந்த உத்தியோகத்தில் பல பிரச்சினைகள். வேலையை உதறிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் பல மடங்கு பிரச்சினை. அந்த நிறுவனம் கடும் நிதி நெறுக்கடியில் உள்ளதை அங்கே சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. உடனடித் தீர்விற்கும் வழி தெரியவில்லை.

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்:
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று
- என்னும் மனநிலை

கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 27-1-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. வணக்கம்

    தங்கள் இரண்டு மனம் வேண்டும் புதிருக்கான பதில்

    1. ஜாதகரின் பத்தாம் இடமானது ராகு கேட்டு கட்டு பாட்டில் உள்ளது .

    2. மேலும் பத்தாம் இடத்தில் மாந்தி சேர்ந்து மனிதரை பாடை படுத்தியது.

    3. நவாம்ச கட்டமும் ராகு கேது கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த நிலை தற்காலிகமாக அமைத்தது .

    4. வர்கோத்தம லக்கினத்தை பெற்றதால் இந்த நிலை பின்னர் சரியாகி நிலையான வேலையை அடைந்தார் .

    நன்றி

    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB. 8879885399

    ReplyDelete
  2. வணக்கம்

    தங்கள் இரண்டு மனம் வேண்டும் புதிருக்கான பதில்

    1. ஜாதகரின் பத்தாம் இடமானது ராகு கேட்டு கட்டு பாட்டில் உள்ளது .

    2. மேலும் பத்தாம் இடத்தில் மாந்தி சேர்ந்து மனிதரை பாடை படுத்தியது.

    3. நவாம்ச கட்டமும் ராகு கேது கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த நிலை தற்காலிகமாக அமைத்தது .

    4. வர்கோத்தம லக்கினத்தை பெற்றதால் இந்த நிலை பின்னர் சரியாகி நிலையான வேலையை அடைந்தார் .

    நன்றி

    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB. 8879885399

    ReplyDelete
  3. ஜாதகர் 3 ஆகஸ்டு 1950 அன்று மாலை 5 மணி 21 நிமிடங்கள் போலப் பிறந்த‌வ்ர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
    பத்தாம் இடத்தில் கேது,மாந்தி.பத்தாம் அதிபன் தன் வீட்டிற்கு 12ல் மறைவு.
    எட்டாம் இட‌ அதிபன் சந்திரன் 4ல் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்து பத்தாம் இடத்தைப்பார்த்தார்.வேலைக்கான காரகர் சனைச்சரன் சூரியனின் வீட்டில் வலுவிழந்தார்.
    44 வயதில் எட்டாம் அதிபன் சந்திரனின் தசா ஆரம்பித்தது.அந்த சமயம் வேலை போனது. பத்தாண்டுகள் சந்திரனின் தசாவில் ஜாதகர் தலை தூக்க முடியவில்லை.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  4. ஜாதகர் 3-08-1950 மாலை 5-15 மணியளவில் பிறந்தவர்.
    தனுசு லக்கினாதிபதி 3ல் மறைந்து 9ல் அமர்ந்த பாதகாதிபதி புதன் பகை பெற்ற சனி யுடன் இணைந்து பார்வைசெவதால் லக்கின பலம் கெட்டுள்ளது.
    10ம் பதி புதன் தன் வீட்டிற்க்கு 12 மிடமான 9ல் அமர்வு
    10ல் கேது அமர்ந்து ராகு மற்றும் 8ம் பதி சந்திரன் பார்வை சுகமில்லை.
    புதன் 11 வ + கேது 7 வ + சுக் 20 வ + சூரி 6 வ = 44 வருடங்களின் பின் வந்த தேய்பிறை சந்திர்ன் 8ம் பதி 4ல் அமர்ந்து 10மிடத்தை பார்த்து தொழிலை வேலைக்கு உலை வைத்திருப்பார். பின்னர் வந்த செவ்வாய் 11ல் அமர்ந்து லக்கினாதி குருவின் பார்வை பெற்று 5மிடத்தை பார்த்து பலப்படுத்துவதால் செவ்வாய் தசையில் நிம்மதியாக தொழிலில் பயணித்திருப்பார்.
    அன்புடன்
    - பொன்னுசாமி.

    ReplyDelete
  5. எட்டாம் அதிபதியின் தசை வருத்தியது.
    போதாக் குறைக்கு ஜாதகத்தில் அமர்ந்த எட்டாம் அதிபதி சந்திரன், ராகுவுடன் கூட்டுச் சேர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் 10 இல் கேது, மாந்தி சகிதம் நிற்பது மற்றும்
    10 இன் அதிபதி தனது வீட்டிற்கு 12ல் கூடவே சனி, வேலையில் ஆட்டத்தை கொடுத்தது.
    யோகன், குரு 10ம் வீட்டை பார்க்கவில்லை எனினும் இதர சுகங்களை அளித்திருப்பார்.

    ReplyDelete
  6. சார் வணக்கம்
    8 ஆம் அதிபதி சந்தரன் 4 இல் ராகு உடன் அப்புறம் 8 இல் சூரியன் புதன் 10 கு 12 இல் 4 ஆம் அதிபதி குரு 4 கு 12 இல் அப்புறம் சூரிய தசை ரொம்ப நல்ல இருக்காது அதிலேயே பிரச்னை அதுக்கப்பறம் வைத்த சந்திர தசை வேலை இல் கஷ்டம் கொடுத்து வேற வேலைக்கு போகவைத்தது அப்புறம் அங்கயும் பிரச்சன்னை அந்த தசை முடியும் வரை ரொம்ப கஷ்டம்

    ReplyDelete
  7. ஐயா,
    கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி குரு பத்தாம் இடத்திற்கு ஆறில் அமர்ந்துள்ளார்
    2 லாபாதிபதி சுக்ர திசையில் அவருக்கு நல்ல வேலையில் அமர்ந்து சுகமாக இருந்திருப்பார்
    3 நாற்பத்து நாலாவது வயதில் எட்டாம் இடத்தில் அமர்ந்த சூரியன் இரண்டாம் இடத்தை பார்த்து லாபத்தை கெடுத்திருப்பார்
    4 .மேலும் அடுத்து வந்த எட்டாம் அதிபதி சந்திரா திசையும் நன்றாக இருந்துஇருக்காது
    தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete
  8. - லக்கினத்திற்கு பத்தில் கேது (சுவிட்ச் ஆப்)
    - லக்கினத்திற்கு பதத்தில் மாந்தி (இறப்பை சொல்லும்)
    - பத்தாம் அதிபதி புதன், பத்திற்கு பன்னிரெண்டாம் இடமான ஒன்பதில்
    - பத்தாம் அதிபதி சனி / கேதுவிற்கு இடையில் (கத்திரி யோகம்)
    - ராசிக்கு பத்தாம் இடம் லக்கினம், அதன் அதிபதி (குரு), பன்னிரெண்டில் மறைவு.
    - லக்கினாதிபதி மூன்றில், சுய முயற்சியில் தான் முன்னேற்றம், சிபாரிசு கிடைத்திருக்க வாய்ப்பில்லை

    ReplyDelete
  9. ராகுவுடன் இணைந்து, திக்பலம் பெற்று வலுவடைந்து, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும் அஷ்டமாதிபதி சந்திரன் தசையில் வேலையில் சிக்கல்கள். அம்சத்திலும் சந்திரன் பகை வீட்டில், நீச குருவுடன். ஜீவனாதிபதி சனியுடன் இணைவு. அம்சத்தில் நீசமான குரு ஜீவனாதிபதியை பார்த்தாலும், நீச குருவிற்கு பார்வை பலம் குறைவு.
    - ஐ எஸ் ஃபெர்னாண்டோ

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,1)10 ம் இடமும் அதன் அதிபதி புதனும் பாபகர்த்தாரி யோகத்தில்.10ம் இடத்திற்க்கு ராகுஉடன் சேர்ந்த அட்டமாதிபதி தேய்பிறை சந்திரனின் பார்வை.2)10 அதிபதி புதனுக்கு லக்னாதிபதி குரு பார்வை எனவே புதன் தசாவில் 10ம் இடத்திற்கான பாதகம் ஏதுமில்லை.அடுத்து வந்த கேது தசாவில் 10ல் அமர்ந்த கேது, மாந்தியால் அந்த இடத்திற்க்கு பாதகம் இல்லை.கேதுவிற்க்கும் அட்டமாதிபதி பார்வை இருந்தாலும்,கேது தசாவில் படிக்கும் பருவமாய் ஆனது.அடுத்து வந்த 6,11 அதிபதி சுக்ர தசாவில்,சுக்ரன்7ல் நட்பு வீட்டில் அமர்ந்து சுபராகி லக்னத்தை பார்த்ததால்,லாபாதிபதி வேலையை மட்டும் செய்து அவர் தசா முடியும் வரை,10ம் அதிபதியுடன் சேர்ந்த கர்மகாரகன் சனி பார்வையினால் பலம் பெற்று வேலையில் ஏற்றங்களையே கொடுத்தார்.அடுத்து வந்த பாக்யாதிபதி சூரியன் 8ல் அமர்ந்தாலும், சுபர் வீட்டில் அமர்ந்ததாலும்,சுபர் குரு பார்வையாலும் சுபத்தன்மை கெடாததால் அவர் தசாவும் மேன்மையாகவே அமைந்தது.அடுத்து வந்த,சுகஸ்தானத்தில் அமர்ந்த சந்திர தசா,ராகு புத்தியின் பார்வையில் பத்தாமிடம் கெட்டு மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது.லக்னாதிபதியும் அம்சத்தில் நீசமாகி போனதால்,பிரச்சினையை சமாளிக்கும் வலிமை இல்லாமல் போனது.நன்றி.





    ReplyDelete
  11. Quiz: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக?
    ஆசிரியருக்கு வணக்கம்.
    தனுசு லக்னம், மீன ராசி ஜாதகர்.
    இவரின் வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்?
    1) லக்னாதிபதியும்,ராசியாதிபதியுமான குரு பகவான் 3ல் அமர்ந்து, நவாம்சத்தில் நீசமடைந்து வலுவிழந்துள்ளார்.
    2) 10மிடமான தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் மாந்தியுடன் அமர்வு மற்றும் ராகு, அட்டமாதிபதி சந்திரனின் பார்வை உள்ளது.
    3) ஜாதகரின் 44 வயதில் வந்த ஏழரை சனி மற்றும் அட்டமாதி சந்திர தசை, ராகு புத்தியில் பார்த்து வந்த உத்தியோகத்தை பிரச்சினைகள் காரணமாக விட நேர்ந்தது. பின்னர் புது நிறுவனத்திலும் பிரச்சினைகள் தொடர்ந்தன.
    சந்திரன் மனோகாரகன், ராகு பகவானுடன் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தன்னுடைய தசையில் மனக் கஷ்டங்களை கொடுத்தார்.
    இரா. வெங்கடேஷ்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com