11.12.18

நாமும் நமது குறைகளும்!


நாமும் நமது குறைகளும்!

1. மாற்றுத் தீர்வு சொல்லத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே குறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை இருக்கிறது._*

2. வீட்டுக்கு யாரும் வந்திடாதீங்க. தொல்லை பண்ணாதீங்க என்று நாம நினைக்கிற அளவில் தான் உறவுகள் இருக்காங்க. மனசோடு ஒட்டி எந்த உறவும் இல்லை.

3. வாழ்க்கையை பலமாக்குவது மகிழ்ச்சி. வாழ்க்கையை பலவீனம் ஆக்குவது சந்தேகம்.

4. உனக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்கினால் தாழ்வு மனப்பான்மை வரும். கீழே உள்ளவர்களைப் பார்த்தால் தலைக்கனம் வரும். உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள், நீங்கள் உங்கள் தனித் தன்மையோடு இருங்கள் தன்னம்பிக்கை வரும்.

5. இந்த உலகில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. கவலை இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே அனுபவித்தவர் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை என்று அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.*

6. ஒரே ஒரு சந்தோஷம் என்னன்னா யாருமே சந்தோசமா இல்ல . இது தான் பலரின் உள் மனம்.*

7. அவமானங்களை சகித்துக் கொள்வதும், தோல்விகளை ஏற்றுக் கொள்வதுமே, நமக்கான முதல் வெற்றி.

8. நல்ல உறவினர்களுக்குள் எந்த விதமான வாக்குறுதிகளும் நிபந்தனைகளும் தேவை இல்லை. அவர்களுக்குள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே போதும்.

9. பதட்டம் உங்களுக்கு வந்தால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் அதே பதட்டம் வரும்,  வரணும், பயப்படணும்  என நினைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

10. ஆடம்பர வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நாம் விரும்பும் வாழ்க்கை அந்தந்த வயதில் தான் முடியும். படிப்பு, வேலை, திருமணம் சரியான வயதில் சரியான முடிவு எடுக்க வேண்டும்!!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Respected Sir,

    Happy morning... Nice post...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy
    morning... Nice post...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com