23.11.18

Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரவு எட்டணா; செலவு பத்தணா!!!!


Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரவு எட்டணா; செலவு பத்தணா!!!!

கொடுத்துள்ள ஜாதகத்தை பொறுமையாக அலசி கேட்டுள்ள ஒரு  கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். பதில் சுருக்கமாக இருக்க வேண்டும்

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பருக்கு எப்போதுமே வரவிற்கு மேல் செலவாகின்றது.
அதாவது வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவு ஆகிறது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் (மட்டும்) எழுதுங்கள்!!!!

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவகாசம்! சரியான பதில் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

கேள்விக்கு உரிய ஜாதகம்:



அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. ஐயா,
    23-11-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் ரிஷப லக்ன ஜாதகம். லக்னத்தில் சுக்கிரன், சூரியன், குரு, ராகு ஆகியோர் உள்ளனர். தன ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் உள்ளார். லாபஸ்தானாதிபதி குரு சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகியுள்ளார். லக்னம் ராகுவின் பிடியில் உள்ளது.ஆகவே வரவைவிட செலவு அதிகமாக ஜாதகருக்கு உள்ளது.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்.


    ReplyDelete
  2. அய்யா வணக்கம்!
    கொடுக்கப் பட்டுள்ள அன்பரின் ஜாதகத்தின் அம்சங்கள்
    ரிஷப லக்னம். பகை கிரகங்கள் சூரியனும் குருவும் ராகுவுடன் இணந்து லக்கினத்தில் அமர்ந்ததால் லக்கினமும் லக்கினாதிபதி சுக்கிரனும் கெட்டுள்ளது. குரு 8ம் பதி லக்கினத்தில் கேடு விளைவிக்கும் அமைப்பு.
    வருமானத்தைக் குறிக்கும் 2ம் பதி புதன் 12 வது வீடான விரய ஸ்தானத்தில்.
    எவ்வளவு வருமானம் வந்தாலும் விரயமாகிக் கொண்டு இருக்கும் அமைப்பு.
    9ம் பதி சனி யோகாதிபதியாகி 10ல் அமர்ந்தாலும் தனது 3ம் பார்வையால் 12மிடமான விரய ஸ்தானத்தை பார்த்து பலப்படுத்துகிறது.விரையாதிபதி செவ்வாயின் பார்வையால் யோகாதிபதி சனியும் 10மிடமும்,லாப ஸ்தானமான 11மிடமும் கெட்டுள்ளது.
    குருவின் பார்வையால் 9மிட பலத்தால் பணம் வந்தாலும் 12மிடம் அதிக பலம் பெற்றுள்ளதால் எப்போதும் பற்றாக்குறையே மிஞ்சும்.
    அன்புடன்
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. தனாதிபதி+பூர்வபுண்யாதிபதி ஆகிய புதன் விரயம் சென்றது மற்றும் அந்த புதன் மீது பாதகாதிபதியின் பார்வை.

    பாக்கியாதிபதி அஷ்டமாதிபதி குரு சாரம் பெற்றது.

    பொதுவான தனகாரகன் இராகுவின் பிடியில் இருப்பதும்
    ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளைத் தந்தது.

    ReplyDelete
  4. Good morning sir, Above person born on29/05/1965 time 6.30am 2nd lord mercury in 12th house and Jupiter is in Graha yutti and combustion with sun hence he spend more money than earning

    ReplyDelete
  5. ஜாதகர் 29 மே 1965 அன்று காலை 6 மணி 32 நிமிடஙகளுக்குப் பிறந்தவர்.

    லக்கின‌த்திற்குப் பன்னிரண்டாம் இடத்தில், விரயத்தில், தன‌ ஸ்தானதிபதி புதன் மறைந்தது.தனகாரகன் குரு லக்கினத்திற்கு 8க்கும் உரியவர்,அவர் லக்கினத்தில்
    ராகு, கேது, சூரியனால் பாதிக்கப்பட்டவர். சூரியனால் குரு அஸ்தங்கதம்.

    இக்காரணங்கள் விரயத்தைக் கொடுத்தது.

    ReplyDelete
  6. 2 க்கு உடைய தனஸ்தானாதிபதி (புதன்) 12 ல் (மறைவு ஸ்தானத்தில்). ஆகவே வரவுக்கு மீறிய செலவு.

    ReplyDelete
  7. Answar for quiz 23.11.2018

    Dob for the horoscope person on 29.05.1965 time 6.10am

    1-Second lard in 12th house
    2.Second lard in enemy house
    3.Saturn saw second lard
    4.Saturn saw moon (punarpu thosam)

    Above all reasons for economically problem for him

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,லக்னத்தில் சூரியன் மட்டுமே சுபர்.சுக்ரன் லக்னாதிபதி என்பதால் சமம்.குரு,ராகு மற்றும் மாந்தி பாப கிரகங்கள்.சுபரான 2ம் அதிபதி,12ல் லக்ன பாபரான சந்திரனுடன் சேர்ந்து மறைவு.அடுத்து வருமானம் வரும் 10 ம் இடத்தில் பாக்யாதிபதியும் யோககாரனும் ஆன சனி ஆட்சி.அதே சனி அம்சத்தில் நீசம்.வருமானமே அதிகம் வர வாய்பில்லை.4ம் இடத்தில் அமர்ந்த சுபாரான செவ்வாய்க்கும் அதே சனியின் பார்வையால்,4ம் இடத்தின் சுகங்களை அனுபவிக்க முடியவில்லை.வருமானம் வரும் 10ம் இடமும் சேமிக்கும் இரண்டாம் இடமும்,சுகங்களை அனுபவிக்கும் நாலாமிடமும் கெட்டதே காரணம்.ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி அம்சத்தில் கெட்டது நன்மையே ஆனாலும்,நன்மைகளை அனுபவிக்க பாதகாதிபதி தசா வரை காத்திருக்க வேண்டும்.நன்றி

    ReplyDelete
  9. Dear sir

    THE FOLLOWING REASONS FOR VARAVU ETTANA AND SELAVU PATHU ANA

    1. 2nd house Head Mercury - Lagna thirku 12im veetil - viraya sthanam
    2. Dhana Karagan and 11th House House Head Jupiter has spoiled or collapsed by Mandhi and Rahu successfuly.
    3. Ascendant lord Venus also spoiled and collapsed by Rahu and Maandhi

    thanks & regards
    P.CHANDRASEKARA AZAD

    ReplyDelete
  10. DEAR SIR

    THE FOLLOWING REASONS FOR VARAVU ETTANA AND SELAVU PATTHU ANA

    1. 2ND HOUSE HEAD MERCURY - IS IN 12TH PLACE - VIRAYA STHANAM
    2. DHANA KARAGAN AND 11TH HOUSE LORD IS COLLAPSED AND SPOILED BY MAANDI AND RAHU SUCCESSFULLY.
    3. ASCENDANT LORD ALSO SPOILED AND COLLAPSED BY RAHU AND MAANDI.

    THANKS & REGARDS
    P.CHANDRASEKARA AZAD

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    லக்னாதிபதி சுக்கிரன்ஆட்சி, ராகு மாந்திகூட்டு

    நவாம்சத்தில் சுக்கிரன் பகை மற்றும் மாந்தி வீட்டில்...

    2ஆம் வீட்டு அதிபதி 12 ல் விரையத்தில் .....
    மற்றும் சனி
    பார்வை

    11ஆம் வீட்டு அதிபதி மாந்தி, ராகு உடன் கூட்டு...

    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  12. ஜாதகர் 29 மே மாதம், 1965 காலை 6.05 மணிக்கு சனி கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்
    1. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்தில், குரு (8ம் வீட்டு அதிபதி) ராகு , 6ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. கேதுவின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது.

    2. 2ம் வீட்டு அதிபதி புதன் 12ல் இருந்தால் பணம் தங்காது . 11ற்கு உரிய குரு லக்கினத்தில் ராகு கேது பிடியில் . பைப்பும் அடைபட்டிருக்கிறது.

    3. 2 & 11 கெட்டால் பணம் எப்படி வரும்? செல்வம் எப்படி சேரும். ஆகவேதான் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.

    4. பத்தாம் வீட்டுக்காரன் சனி (39 பரல்) அந்த வீட்டில். கடுமையாக உழைக்க கூடியவர். அரசாங்க உத்தியோகத்தில் இருக்க கூடியவர்.

    5. முக்கியவில்லன்களான 6ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனும் , எட்டாம் அதிபதி குருவும் லக்கினத்தில் சென்று அடிதடி சண்டையில் ஈடு பட்டிருக்கிறார்கள்.

    6. சுபக்கிரகங்கள் 3ல் ஒன்றுகூட தப்பிக்காமல் கெட்டுப் போயிருக்கின்றன. சுபக்கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை ஒளிமயமாகஇருக்கும்

    7. சனியின் 7ம் பார்வையில் 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் , 7ல் கேது இருந்தால் மனைவி வியாதியில் இருக்க கூடியவர் அதனால் தான் செலவு அதிகம்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com