ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்!!!
திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்த பொருட்கள்!!
🌺 அப்போது மலையை கடைவதால் ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட அது விஷமாக மாறி கடலில் கலந்து கடையப்பட்டதால் உருண்டு திரண்டு ஆலகால விஷமாக வெளிப்பட்டது. அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எவ்வண்ணம் என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.
🌺 உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
🌺 முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின் பயம் தெளிந்த தேவர்களும் அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடைய கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன. அவைகளை தேவர்களும் அசுரர்களும் ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து கொண்டனர்.
திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள் :
1. ஆலகால விஷம்
2. காமதேனு
3. உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை
4. ஐராவதம் என்னும் வெள்ளை யானை
5. கற்பக விருட்சம்
6. அப்சரஸ்திரிகள்
7. அகலிகை என்ற அழகான பதுமை
8. திருமகள் என்னும் லட்சுமி
9. அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி
ராகு கேது உருவானக் கதை :
🌺 காமதேனு உச்சை சிரவஸ் ஐராவதம் மற்றும் கற்பக விருட்சத்தை தேவேந்திரன் எடுத்துக்கொண்டார். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார்.
🌺 திருமகள் என்னும் லட்சுமியை மகாவிஷ்ணு தனது தேவியாக ஏற்றுக்கொண்டார். அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரியிடமிருந்து அசுரர்கள் திட்டமிட்டப்படி அமுத கலசத்தை அபகரித்து சென்றனர்.
🌺 அமுதத்தை யார் அடைவது என்ற சண்டையில் அமுதம் வீணாகிவிடும் என்ற நிலைக்கே சென்றது. இதைக் கண்ட தேவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள்.
🌺 மகாவிஷ்ணுவும் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை காணச் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி அசுரர்களும் அமுத கலசத்தை மோகினியிடம் ஒப்படைத்தனர்.
🌺 மோகினி அமுதத்தை இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்தளிப்பதாக கூறினாள். பின் அசுரர்களையும் தேவர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னார். முதலில் எந்த வரிசைக்கு கொடுக்கட்டும் அல்லது ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா என கேட்டார்.
🌺 மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமுத கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமுதத்தை தங்களுக்கும் தெளிந்த மேல் பகுதியை தேவர்களுக்கும் அளிக்கலாம் எனக் கூறினார்கள்.
🌺 தேவர்களுக்கு அமுதம் அதிகமாகவே மோகினியால் விநியோகம் செய்யப்பட்டது. இதை அறியாத அசுரர்கள் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
🌺 மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு தேவரை போல் உருவம் மாற்றிக் கொண்டு தேவர்கள் நின்ற வரிசையில் நின்றார். மோகினி ஆளைப் பாராமல் அமுதத்தை சுவர்பானுவிடம் கொடுத்து விட்டார்.
🌺 அமுதம் கிடைத்தவுடன் அதை சட்டென்று சுவர்பானு பருகிவிட்டான். ஆனால் எவரும் அறியவில்லை என்று கருதிய சுவர்பானுவின் செயலை கவனித்த சூரியன் மற்றும் சந்திரன் சுவர்பானுவை அசுரன் என்று காட்டிக் கொடுத்து விட்டார்கள்.
🌺 இதையறிந்த மோகினி சுவர்பானுவின் தலையை துண்டித்து விட சுவர்பானு தலை வேறு உடல் வேறாகிவிட்டான். இருப்பினும் அமுதம் உண்ட காரணத்தால் மரணம் ஏற்படாமல் தலைக்கு பாம்பின் உடலும் உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்து உயிரை காத்தன.
🌺 இத்தகைய மாறுபட்ட உருவ அமைப்பை கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவர்பானுவின் செயலால் அசுரர்களுக்கு கிடைக்க வேண்டிய அமுதம் கிடைக்காமல் போனது என்று அவரை வெறுத்தனர் அசுரர்கள். அதனால் சுவர்பானுவை அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
🌺 மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்த சுவர்பானு பிரம்மதேவரை தஞ்சமடைந்தார். பிரம்மதேவரும் மனமிறங்கி வரத்தை கேள் என்று கூறினார். சுவர்பானு தனது பழைய நிலையை அடைய அருள் பாவிக்குமாறு கூறினார்.
🌺 பிரம்மதேவரோ ஸ்ரீமந் நாராயணன் தண்டிக்கப்பட்ட உனக்கு அம்மாதிரியாக வரம் அளிக்க இயலாது. நீ இன்று போல் என்றும் இரு வேறு உடல் பிரிவுகளை கொண்டவராக இருப்பாய் என அருளினார்.
🌺 மேலும்இ மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு" என்றும் மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது" என்ற பெயரும் நிலைக்கும் என்றார் பிரம்மதேவர்.
பிரம்மதேவர் சுவர்பானுவிற்கு அளித்த வரம் :
🌺 சூரியன் மற்றும் சந்திரனால் காட்டி கொடுக்கப்பட்டு இந்த நிலை அடைந்ததால் அவர்களை பழி வாங்குவதற்கு அருள் பாவிக்க வேண்டும் என்று வேண்டினார் சுவர்பானு. பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் சமாதானம் அடையாத சுவர்பானுவை கண்ட பிரம்மதேவர் நவகிரக பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்களாக என அருள் புரிந்தார்.
🌺 இதுவே அவர்களின் செயலுக்கான தண்டனை. இத்துடன் திருப்திக்கொள் என்றார் பிரம்மதேவர். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களை போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி எதிர் எதிராக சஞ்சாரம் செய்வீராக என அருள் பாவித்தார்.
🌺 அப்போது மகாவிஷ்ணு ராகு கேதுவின் முன் தோன்றினார். நவகிரக பரிபாலனத்தில் இடமளித்தும் ஒளியை அளிக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரகணமாக பிடிக்கும் வரத்தினை அளித்து விட்டீர்களா? என பிரம்மதேவரிடம் கேட்டார். மேலும் அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் ஒரு அசுரனை எவ்வாறு நவகிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்த முடியும்.
🌺 இது அசுரர்களின் பலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி அசுரன் இராவணன் அழியும் வரை இவர்கள் இருவரில் கேதுவானவன் கடக ராசியில் அமர்ந்து ரிக்இ யஜூர்இ சாம வேதங்களையும் ராகுவானவன் மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலம் கற்றுணர்ந்து வேத ஞானம் பெற்ற ராகு ஞானகாரனாகவும் கேது மோட்சகாரனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சம் பெற அனுகிரகம் செய்யட்டும் என்றார். அதன்படியே இறுதியில் அசுரன் இராவணன் மாண்ட பிறகு நவகிரகங்களில் இருவரும் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.
ராகுவால் ஏற்படும் தோஷங்கள் :
🌟 ராகு 2ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.
🌟 ராகு 4ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.
🌟 ராகு 7ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.
கேதுவால் ஏற்படும் தோஷங்கள் :
🌟 திருமணத் தடையை ஏற்படுத்துவார்.
🌟 குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.
🌟 அவச்சொற்களுக்கு ஆளாக்குவார்.
🌟 கேது 12ல் இருந்தால் மோட்சம் தருவார்.
ராகுவிற்கான பரிகாரங்கள் :
🌟 கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகுபகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
🌟 அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்ப கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.
🌟 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.
கேதுவிற்கான பரிகாரங்கள் :
🌟 விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
🌟 காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.
-------------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே!
ReplyDeleteஇராகு,கேதுவின் பிறப்பு, அவர்கள்
பூர்வீகம் மற்றும் பிரம்மாவின் வரத்தால் இன்றும் சூரிய தேவனுக்கு
எதிரி என்ற தனது முடிவைப்
பின்பற்றுகின்றனர் என்பதும், இராகு/கேதுவால் ஏற்படும் தோஷ
நிவர்த்தி போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட இன்றைய பதிவு சிறப்பான ஒன்று, வாத்தியார் ஐயா!
Good morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteVery useful
ReplyDeleteRespected Sir,
ReplyDeletePleasant morning... Wonderful post... Excellent ....
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn
வணக்கம்,
ReplyDeleteராகு, கேது கிரகங்கள் உருவான கதை,தோஷ்ங்கள் ம்ற்றும் பரிகாரங்கள் பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நான் படித்ததில் பிடித்த சில அதிகப்படி தகவல்கள்....ஒரு நீள் பதிவு....
அப்ஸரஸ் க்ன்னியரர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனரா?...
இல்லை...அரம்பையர்கள் என்பவர்கள் தேவ லோகத்தில் உமையம்மைக்கு துணையாக இருக்கும் தோழிகளாவர். இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள். இவர்களுக்கு அரம்பை தலைவியாக அறியப்படுகிறாள். அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் அறியப்படுகிறாகள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலர் அவர்களில் புகழ்பெற்றவர்கள்.
மேலும் அதிகத் தகவலுக்கு https://ta.wikipedia.org/wiki/ அரம்பையர்கள்.
அது போல ராகு/கேதுவாக உருமாறிய அந்த அசுரன் சுவர்பானு இல்லை...சொ(ஸ்வ)ர்ணபானு என்பதே சரியான பெயர்....யாரிவர்????
சப்தரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விபரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன்பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்க, அதன் விளைவாக தலை அசுரத்தலையாகவும் கீழ்ப்பாகம் பாம்பு உருவாகவும் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே அவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்.
இதுபோலவே சொர்ணபானுவின் உடல்பாகம் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞானகாரகன் ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போல் கேதுவும் தவம் இருந்து, தலையற்ற உடலில் ஐந்து தலை பாம்பாகவும் உடல் அசுர உடலாகவும் மாறி கேது பகவான் என்ற பெயர் பெற்றார். அவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
ஆதியில் சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்கள்தான். ராகுவும்- கேதுவும் பிருகத் ஜாதக காலத்துக்குப் பிறகுதான் கணிக்கப்பட்டன.
திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தில் கூட கார்த்திகை நட்சத்திரம்தான் முதல் நட்சத்திரமாக இருந்திருக்கிறது. சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தில் இரண்டாவது பாடலில்,
"ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள் கேள் அவை தாம் அன்பொடு நல்ல நல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஆதிரை, பரணி, கிருத்திகை, ஆயில்யம், முப்பூரம், கேட்டை, தீதுறு விசாகம், ஜோதி, சித்திரை, மகம் ஈராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே' என்று ஜோதிட விதியில் 12 நட்சத்திரங்களும் நல்லவையல்ல என்று சொல்லப்படுகிறது.
"என்பொடு கொம்பாடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்த மாலை புனல் சூடிவந்து என் உளமே புகுந்த அதனால், (இந்த பன்னிரு நட்சத்திரங்களும்) அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.
கார்த்திகை நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாகக் கணக்கிட்டால்தான் அவர் பாடிய ஒன்பதொடு என்பது பொருத்தமாக வரும். சில பஞ்சாங்கங்கள் தசாபுக்தி அட்டவணையில் சூரிய தசையே முதல் தசையாக, "கார்த்திகை- உத்திரம்- உத்திராடம்- சூரிய தசை 6 வருடம்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில்தான் ராகுவும் கேதுவும் பின்னால் சேர்க்கப்பட்ட கிரக தசையாக வரும்.
ராகு துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
கேது துதி
பொன்னையன் வரத்திற் கொண்டோன் புலவர் தம்பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற
பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற்சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!
நன்றி!
வெங்கடேஷ்.
ஐயா வணக்கம்
ReplyDeleteபதிவு அருமை
ராகு கேது வின் வரலாறு தெரிந்து கொண்டேன்.
நன்றி
கண்ணன்
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
இராகு,கேதுவின் பிறப்பு, அவர்கள்
பூர்வீகம் மற்றும் பிரம்மாவின் வரத்தால் இன்றும் சூரிய தேவனுக்கு
எதிரி என்ற தனது முடிவைப்
பின்பற்றுகின்றனர் என்பதும், இராகு/கேதுவால் ஏற்படும் தோஷ
நிவர்த்தி போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட இன்றைய பதிவு சிறப்பான ஒன்று, வாத்தியார் ஐயா!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!
//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan////////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery useful/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Pleasant morning... Wonderful post... Excellent ....
Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn///////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!
//////Blogger venkatesh r said...
ReplyDeleteவணக்கம்,
ராகு, கேது கிரகங்கள் உருவான கதை,தோஷ்ங்கள் ம்ற்றும் பரிகாரங்கள் பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நான் படித்ததில் பிடித்த சில அதிகப்படி தகவல்கள்....ஒரு நீள் பதிவு....
அப்ஸரஸ் க்ன்னியரர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனரா?...
இல்லை...அரம்பையர்கள் என்பவர்கள் தேவ லோகத்தில் உமையம்மைக்கு துணையாக இருக்கும் தோழிகளாவர். இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள். இவர்களுக்கு அரம்பை தலைவியாக அறியப்படுகிறாள். அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் அறியப்படுகிறாகள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலர் அவர்களில் புகழ்பெற்றவர்கள்.
மேலும் அதிகத் தகவலுக்கு https://ta.wikipedia.org/wiki/ அரம்பையர்கள்.
அது போல ராகு/கேதுவாக உருமாறிய அந்த அசுரன் சுவர்பானு இல்லை...சொ(ஸ்வ)ர்ணபானு என்பதே சரியான பெயர்....யாரிவர்????
சப்தரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விபரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன்பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்க, அதன் விளைவாக தலை அசுரத்தலையாகவும் கீழ்ப்பாகம் பாம்பு உருவாகவும் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே அவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்.
இதுபோலவே சொர்ணபானுவின் உடல்பாகம் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞானகாரகன் ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போல் கேதுவும் தவம் இருந்து, தலையற்ற உடலில் ஐந்து தலை பாம்பாகவும் உடல் அசுர உடலாகவும் மாறி கேது பகவான் என்ற பெயர் பெற்றார். அவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
ஆதியில் சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்கள்தான். ராகுவும்- கேதுவும் பிருகத் ஜாதக காலத்துக்குப் பிறகுதான் கணிக்கப்பட்டன.
திருஞான சம்பந்தப் பெருமான் காலத்தில் கூட கார்த்திகை நட்சத்திரம்தான் முதல் நட்சத்திரமாக இருந்திருக்கிறது. சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தில் இரண்டாவது பாடலில்,
"ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள் கேள் அவை தாம் அன்பொடு நல்ல நல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஆதிரை, பரணி, கிருத்திகை, ஆயில்யம், முப்பூரம், கேட்டை, தீதுறு விசாகம், ஜோதி, சித்திரை, மகம் ஈராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே' என்று ஜோதிட விதியில் 12 நட்சத்திரங்களும் நல்லவையல்ல என்று சொல்லப்படுகிறது.
"என்பொடு கொம்பாடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்த மாலை புனல் சூடிவந்து என் உளமே புகுந்த அதனால், (இந்த பன்னிரு நட்சத்திரங்களும்) அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.
கார்த்திகை நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாகக் கணக்கிட்டால்தான் அவர் பாடிய ஒன்பதொடு என்பது பொருத்தமாக வரும். சில பஞ்சாங்கங்கள் தசாபுக்தி அட்டவணையில் சூரிய தசையே முதல் தசையாக, "கார்த்திகை- உத்திரம்- உத்திராடம்- சூரிய தசை 6 வருடம்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில்தான் ராகுவும் கேதுவும் பின்னால் சேர்க்கப்பட்ட கிரக தசையாக வரும்.
ராகு துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.
கேது துதி
பொன்னையன் வரத்திற் கொண்டோன் புலவர் தம்பொருட்டால்
ஆழி தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற
பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற்சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!
நன்றி!
வெங்கடேஷ்.///////
நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி வெங்கடேஷ்!!!!
/////Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
பதிவு அருமை
ராகு கேது வின் வரலாறு தெரிந்து கொண்டேன்.
நன்றி
கண்ணன்//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
////// உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரையே அழிக்கும் சக்தியைக் கொண்ட ஆலகால விஷத்தை அவரது தொண்டை பகுதியிலே உமையவளான பரமேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.//////
ReplyDeleteஆலகால நஞ்சு மட்டுமல்ல, எந்த சக்தியாலும் சிவபெருமானை அழிக்க முடியாது. சிவனை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை. அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம் அவரே. எதிலும் இங்கு இருப்பவனை எதால் அழிக்க இயலும்?
இந்த பதிவு வேதனை தந்தது. முடிந்தால் இந்த ஒரு பகுதியை மட்டுமாவது நீக்க வேண்டுகிறேன். அல்லது மாற்ற வேண்டுகிறேன்.
/////Blogger thozhar pandian said...
ReplyDelete////// உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரையே அழிக்கும் சக்தியைக் கொண்ட ஆலகால விஷத்தை அவரது தொண்டை பகுதியிலே உமையவளான பரமேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.//////
ஆலகால நஞ்சு மட்டுமல்ல, எந்த சக்தியாலும் சிவபெருமானை அழிக்க முடியாது. சிவனை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை. அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம் அவரே. எதிலும் இங்கு இருப்பவனை எதால் அழிக்க இயலும்?
இந்த பதிவு வேதனை தந்தது. முடிந்தால் இந்த ஒரு பகுதியை மட்டுமாவது நீக்க வேண்டுகிறேன். அல்லது மாற்ற வேண்டுகிறேன்.//////
அன்பரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியை நீக்கி விட்டேன். மீண்டும் படித்துப் பாருங்கள்!
இந்த எளிய சிவபக்தனின் கோரிக்கையை ஏற்று அந்த பகுதியை நீக்கிய தங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி அய்யா.
ReplyDelete