28.6.18

நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!

நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!

*பணம்..*

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், 

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.

அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.

இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*
-------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. இதை ஏற்கெனவே படித்திருக்கிறேன். பல இடம், பல கைகள் பார்த்த பணத்தால் வியாதிகள் வரும் என்பதை மனித மனம் நம்ப மறுக்கிறது! யதார்த்தம் அதுதானே?

    ReplyDelete
  2. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    சிறிய செயல், பெரிய சிலிர்ப்பு!
    அன்றாடம் நிகழும் இக்காரியங்களால் நிகழும் பெரிய விளைவுகள் பற்றி எத்தனை பேர்
    சிந்தித்திருப்பர்?! மிகவும் குறைவுதான், சந்தேகமேயில்லை
    எனலாம்! நோய்கள் பரவும் விதம் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு
    அதிஜோர்! என்னுடன் தொடர்பில்
    உள்ள அத்தனை பேருக்கும்
    இப்பதிவைப் பகிர்கிறேன், ஐயா!

    ReplyDelete
  4. /////Blogger ஸ்ரீராம். said...
    இதை ஏற்கெனவே படித்திருக்கிறேன். பல இடம், பல கைகள் பார்த்த பணத்தால் வியாதிகள் வரும் என்பதை மனித மனம் நம்ப மறுக்கிறது! யதார்த்தம் அதுதானே?/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சிறிய செயல், பெரிய சிலிர்ப்பு!
    அன்றாடம் நிகழும் இக்காரியங்களால் நிகழும் பெரிய விளைவுகள் பற்றி எத்தனை பேர்
    சிந்தித்திருப்பர்?! மிகவும் குறைவுதான், சந்தேகமேயில்லை
    எனலாம்! நோய்கள் பரவும் விதம் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு
    அதிஜோர்! என்னுடன் தொடர்பில்
    உள்ள அத்தனை பேருக்கும்
    இப்பதிவைப் பகிர்கிறேன், ஐயா!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. என் புத்திக்கி எட்டியவரை சொல்லமுயற்சிக்கிறேன்.

    நமது உடம்பே ஒரு பெரிய டாக்டர். உடம்புக்கு நோய் வரும்போது நம் உடலில் உள்ளேயே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி உடலே தன்னை காத்துக்கொள்ளும். அதற்கு உபத்திரம் செய்யாமல் சும்மா இருந்தால் போதும், நோய் சரியாகிவிடும். நோய்க்கு தகுந்தவாறு கசாயங்களை குடிக்கலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பது நமது முன்னோர் வழக்கு.

    ஆங்கில மருத்துவத்தை அறவே தவிர்த்து வந்தாலே நம் நோய் எதிர்ப்பு சக்தி அழியாமல் நோய் விரைவில் குணமாகும்.

    டெட்டால் போன்ற விஷங்களை விட்டு விடவேண்டும்.

    நம் உடலுக்குள் நடக்கும் வேதிவினைகளை இப்போதுள்ள அறிவியல் கண்டுபிடித்தது சிறிதளவே (5% முதல் 10% நுண்ணியிர்களை மட்டுமே தற்போது அறிவியல் அறிந்துள்ளது)
    அதுவும் தன் குருட்டு கண்ணைக்கொண்டு தப்பு தப்பாக அறிந்துள்ளது.

    நம் உடலின் உள்ளே ஏராளமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உயிர்வாழ்கின்றன.
    அவையே நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றன. இவற்றை ஒரு இடத்திலிருந்து அகற்றலாமே ஒழிய முற்றிலும் அழித்தொழிக்கமுடியாது (மிக மிக கடினம்).
    கொதிக்கும் நீருற்றிலும் சில பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வாதாக படித்திருப்பீர்.

    நம் முன்னோர்களான் சித்தர்கள் தங்களது மெய் ஞானத்தின் மூலம் சகலத்தையும் ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்துள்ளார்கள்.

    நோய்க்கான பாக்டீரியா அல்லது வைரஸ் நம் உடம்பினுள்ளேயே இருக்கின்றது. நோயை சரி படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் (இதுவே உடல் எதிர்ப்பு சக்தி என்றும் கூறலாம்) நம் உடம்பினுள்ளேயே இருக்கின்றது .

    ஏதோ ஒரு சத்து பற்றாக்குறை காரணமாக உடல் அதற்கு அறிகுறி காட்டுவதும் , அதை நிவர்த்தி செய்தால் அந்த அறிகுறி மாறுவதும் நிகழும்.
    உதாரணத்திற்கு கல்லீரல் செயல்பாட்டில் ஏதோ குறைபாடு எனில் அந்த குறையை உடல் எனும் மருத்துவர் நமக்கு கண்களில் அதன் அறிகுறியாக கண்களில் குறைபாடு (கிட்டப்பார்வை , தூரப்பார்வை, கண்ணைச் சுற்றி கருவளையம், கண் பார்வை மங்கல்,..)
    என காட்டி எச்சரிக்கும்.
    நாம் கண்ணை நோண்டாமல் கல்லீரலை பலப்படுத்தும் வேலையை பார்த்தால் உடலை காக்கலாம். மாறாக கண்ணை நோண்டிக்கொண்டிருந்தால் படிப்படியாக கல்லீரல் பழுதாகி சர்க்கரை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் அவதிப்பட்டு பாடை ஏறவேண்டியது தான்.

    இது சித்த மருத்துவ தத்துவம் : -- கண்ணில் குறைபாடு என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட உறுப்பு கல்லீரல். என்வே கல்லீரலை சரிபடுத்தும் வேலையைப் பார்க்க வேண்டும். கண்ணை நோண்டக்கூடாது. (ஆங்கிள மருத்துவத்தில் கண்ணுக்கு கண்ணாடி,பின் பெரிய சோடா புட்டி கண்ணாடி, பின் அறுவை சிகிச்சை .... என்று கண்ணை ஒரு வழி பண்ணுவார்கள்).

    அதற்காகவே - "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல் " -திருக்குறள்

    என்று சொல்லி வைத்தார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  8. ////Blogger Vel Murugan said...
    என் புத்திக்கி எட்டியவரை சொல்லமுயற்சிக்கிறேன்.

    நன்றி.//////

    நல்லது. உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com