4.4.18

பயம் எங்கிருந்து வருகிறது?


பயம் எங்கிருந்து வருகிறது?

கௌதம புத்தரின் சிந்தனைகள்..
............................................

ஒரு நல்ல பழக்கமாக, நேர்மையாக உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்:

 "நான் ஏன் பிறந்தேன்?".

இந்தக் கேள்வியைத் தினந்தோறும் காலையிலும், மதியத்திலும், இரவிலும் உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது.

இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது.

ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு? மரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், வாழ்க்கையே குழப்பமாகத்தான் தோன்றும்.

மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாக வேண்டும்.

அப்படியென்றால் என்ன? இறப்பது என்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான்.

நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா?

 முடியுமென்றால்..,

 கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும்...

நீங்கள் முறையான பயிற்சி பெற்று இருந்தீர்கள் என்றால், நோய் வாய்ப்படும் போது அச்சப்பட மாட்டீர்கள்,

 யாராவது இறக்கும் போது துயரப்பட மாட்டீர்கள்.

உங்களையும் ஒருநாள் மரணம் தழுவ வரும். யார் முதலில் போவார், யார் பிறகு போவார் என்பது தான் இப்போதைய கேள்வி.

" மருத்துவர்கள்  மரணத்தைத் தடுக்கப் போவது இல்லை.

அடுத்த மூச்சு எப்படி அருகில் இருக்கிறதோ, அதே போலத்தான் மரணமும் அருகிலேயே இருக்கிறது...

நீங்கள் நோய்க்குப் பயந்தாலும், மரணத்திற்குப் பயந்தாலும் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.

எங்கிருந்து வந்தது அந்தப் பயம்?

பிறப்பிலிருந்து வந்தது தான்.

அதனால் யாராவது இறந்தால் வருத்தப் படாதீர்கள் -

 அது இயற்கை............ 
---------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Good morning sir absolutely correct sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. செய்முறையில் கடினம்.

    ReplyDelete
  3. இறப்பைக் கண்டு பயமில்லாத நிலைக்குச் சூழலால் தள்ளப்பட்டேன்.

    "ஐயர் பிணம் அநாதையாகப்போகும்" என்று தமிழ் நாட்டில் ஒரு சொலவடை.இதில் ஓரளவு உண்மை உண்டு. எங்கள் சமூகத்தவர் பலரும் வீட்டில் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள்(சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்)அவர்களில் பலர் அலுவலக வேலை செய்பவர்கள்.எனவே பூஜையை நிறுத்த முடியாது, அலுவலகத்தில் விடுப்பு சொல்ல முடியாது என்ற காரணத்தால் சாவு வீட்டுக்கு வந்து துக்கம்(கேதம்?)விசாரித்துவிட்டு அவர் அவர் பணியைப் பார்க்கப் போய் விடுவர். அதனால் காடுவரை வரும் ஆட்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்தச் சூழலால் மனம் வருந்தி எனக்கு முகம் அறிந்த சாவு என்றால் அங்கே சென்று அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்வேன்.காடுவரை செல்வேன் மறு நாள் சஞ்சயனம் என்னும் பால் தெளிக்கவும் செல்வேன். இப்படி சுமார் 350 சாவுகளுக்கு இதுவரை சென்றுள்ளேன். இதில் எல்லா சமூகத்தவரும் அடக்கம்.என் இல்லத்திலேயே பல இறப்புக்கள். பிறந்த குழந்தை முதல்,தொண்டுக்கிழவர் வரை, நோய்வாய் பட்டு இறந்தவர், விபத்தில் இறந்தவர், தற்கொலை செய்து இறந்தவர் என்று பலதையும் பார்த்துவிட்டேன்.மனத்தில் சாவைப்பற்றி ஒரு கவலையுமே இல்லை.பயமும் இல்லை.இப்போதெல்லாம் சாவுச்செய்தி கேட்டு மனம் பதறுவதே இல்லை. 'ஒரு மட்டை விழுந்தது' என்று மனம் சொல்லிக்கொள்கிறது. மிகவும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள மனம் பழகி விட்டது.காட்டில் பிணம் எரிப்பவர்,எங்கள் சடங்குகளுக்கு உதவி செய்யும் சவுண்டி பிராமணர் ஆகியோரே எனக்கு ஆப்த நண்பர்கள்.அவர்களுடைய பரிபாஷை எனக்கு நன்றாகப் புரியும்.சில சமயம் இப்படி மனம் வரட்சியாக போய்விட்டதே. பிறர் துக்கத்தை உணர முடியவில்லையே என்றூ வருந்துவேன். என்ன செய்வது? என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir absolutely correct sir thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    செய்முறையில் கடினம்./////

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு நண்பரே!!!!

    ReplyDelete
  6. Blogger kmr.krishnan said...
    இறப்பைக் கண்டு பயமில்லாத நிலைக்குச் சூழலால் தள்ளப்பட்டேன்.

    "ஐயர் பிணம் அநாதையாகப்போகும்" என்று தமிழ் நாட்டில் ஒரு சொலவடை.இதில் ஓரளவு உண்மை உண்டு. எங்கள் சமூகத்தவர் பலரும் வீட்டில் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள்(சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்)அவர்களில் பலர் அலுவலக வேலை செய்பவர்கள்.எனவே பூஜையை நிறுத்த முடியாது, அலுவலகத்தில் விடுப்பு சொல்ல முடியாது என்ற காரணத்தால் சாவு வீட்டுக்கு வந்து துக்கம்(கேதம்?)விசாரித்துவிட்டு அவர் அவர் பணியைப் பார்க்கப் போய் விடுவர். அதனால் காடுவரை வரும் ஆட்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்தச் சூழலால் மனம் வருந்தி எனக்கு முகம் அறிந்த சாவு என்றால் அங்கே சென்று அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்வேன்.காடுவரை செல்வேன் மறு நாள் சஞ்சயனம் என்னும் பால் தெளிக்கவும் செல்வேன். இப்படி சுமார் 350 சாவுகளுக்கு இதுவரை சென்றுள்ளேன். இதில் எல்லா சமூகத்தவரும் அடக்கம்.என் இல்லத்திலேயே பல இறப்புக்கள். பிறந்த குழந்தை முதல்,தொண்டுக்கிழவர் வரை, நோய்வாய் பட்டு இறந்தவர், விபத்தில் இறந்தவர், தற்கொலை செய்து இறந்தவர் என்று பலதையும் பார்த்துவிட்டேன்.மனத்தில் சாவைப்பற்றி ஒரு கவலையுமே இல்லை.பயமும் இல்லை.இப்போதெல்லாம் சாவுச்செய்தி கேட்டு மனம் பதறுவதே இல்லை. 'ஒரு மட்டை விழுந்தது' என்று மனம் சொல்லிக்கொள்கிறது. மிகவும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள மனம் பழகி விட்டது.காட்டில் பிணம் எரிப்பவர்,எங்கள் சடங்குகளுக்கு உதவி செய்யும் சவுண்டி பிராமணர் ஆகியோரே எனக்கு ஆப்த நண்பர்கள்.அவர்களுடைய பரிபாஷை எனக்கு நன்றாகப் புரியும்.சில சமயம் இப்படி மனம் வரட்சியாக போய்விட்டதே. பிறர் துக்கத்தை உணர முடியவில்லையே என்றூ வருந்துவேன். என்ன செய்வது? என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.///

    மற்ற தொண்டுகளைவிட, இறந்து விட்ட மனிதரை அடக்கம் செய்வதற்கு உதவுவது மிகவும் உயரிய செயலாகும். முன்பு எனது தந்தையார் பல குடும்பங்களுக்குச் செய்துள்ளார். தற்சமயம் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா! என் பெயர் ப்அபிதா. இளமைக்காலத்தில் நானும் சக மனிதர்கள் போல் வேதனைப்பட்டுள்ளேன். ஆனால் சிறு காலங்களாக என் எண்ணங்களும் தங்களின் எண்ணங்கள் போலே வருகின்றன. உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் விருப்பமாக உள்ளது ஐயா. தொடர்ந்து தங்களின் நற்பணியை சிறப்புற நடத்திவர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com