காவிரிக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?
*மீண்டும் நீதிமன்ற கூண்டில் நின்றாள், காவிரி.*
*"என்னமா காவிரி, நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா?",* அதிர்ச்சியுடன் கேட்டது நீதி தேவதை...
"இல்லை, இன்னும் சிறைப்பட்டுத்தான் கிடக்கிறேன்...
நிரந்திர விடுதலையும் இல்லை, பரோலும் இல்லை...
இன்னும் எத்தனை நாட்கள் தான்,
நான் அணையிலே சிறைப்பட்டுச் சாக வேண்டும்?".
*"ஏம்மா, உன்னை மீட்டெடுத்துச் செல்ல வாரியம் அமைத்தேனே?".*
"உங்களைப் பார்த்தல் சிரிப்புதான் வருகிறது..
நடை பாதையில் விளம்பரப் பலகை வைக்க கூடாதுன்னு சொன்னீங்களே,
*கேட்டார்களா?*
மதுபானக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்தீர்களே,
*கேட்டார்களா?*
இன்னும் எவ்வளவோ ஆணைகள் கேட்பாரற்று போனது...
இதில் வாரியம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்!?".
*"சரி, உனக்காக யாரு வாதாடப்போறா?".*
"என்னக்காக நிறையபேர் போராடுவதால், வாதாட யாரும் வரவில்லை...".
*"சரி, நான் உனக்கு என்ன செய்யணும்?".*
"உங்களை மதிக்காத நாட்டில், எனக்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?
முடிந்தால், இந்நாள் வரைக்கும் வாரியத்தை அமைக்காத ஆதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைது செய்து அந்த அணையில் இடுங்கள்".
*"கேட்க மறந்தேன்... நீ ஏன் அந்த மண்ணிற்கு செல்ல வேண்டுமென துடிக்கிறாய்? பல வருடங்களாக தண்ணீரை சேமிக்க ஒரு சிறு அணையோ, குளமோ, குட்டையோ வெட்டாத அந்த மண்ணிற்கு நீ சென்றாலும், இறுதியில் கடலில் தான் கலப்பாய்... இருந்தாலும் ஏன்...?".*
"என்னால் அந்த மண் குளிருமென்றால்,
என்னால் அங்கு ஜீவன்கள் வாழுமென்றால்,
என்னால் அங்கு காய் கனிகள் விளையுமென்றால்,
அங்குச் செல்ல எப்போதும் துடிப்பேன்..
நான் கடலில் கலப்பது அவர்கள் தேர்தெடுக்கும் தலைவர்கள் கொடுக்கும் சாபம்...
அதற்காக என்னை கடவுளாய் போற்றும் அவர்களைத் தண்ணீரின்றி சாகடிக்க எனக்கு விருப்பமில்லை...".
*"புரிகிறது உன் வேதனை.. ஆனால் என் ஆணையை மதிக்காதவர்களை என்னால் என்ன செய்ய முடியும்... என்றாவது ஒரு புரட்சி வெடித்தால், அதனூடே உனக்கு விடுதலை கிடைத்தால், எனக்கு மகிழ்ச்சியே... இருந்தாலும் காவிரி நீரில் அரசியல் சாக்கடை கலந்திருக்கும் வரை அது கடினமே... காத்திரு மகளே, காவிரி".*
---------------------------------------------------------------------------
தூரத்தில்..., தமிழ் நாட்டில், யாரோ ஒரு விவசாயி, தொண்டை நீர் வற்றக் கத்தினார், *"அடேய், கர்நாடகத்துக்கு போக வேண்டிய காய்கறி லோடு கிளம்பியாச்சா... சீக்கிரம் கிளம்பு...".*
அன்பிற்குரிய அயல்வாசியே!!
இறுதிச் சொட்டு நீர் இந்த மண்ணில் இருக்கும் வரை,
இங்கு விவசாயம் இருக்கும்..,
விவசாயியும் இருப்பான்..,
அவன் விவசாயமும் செய்வான்..,
தான் பட்டினி கிடந்தாலும்,
விளையும் கனியை உனக்கு அனுப்புவான்..,
அதைத் தின்று விட்டு....காவிரியை மட்டும் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்!!!
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அருமை.
ReplyDeletegood reading Sir.
ReplyDeleteவணக்கம் ஐயா,தலைப்பை பார்த்தவுடன் சோதிடம் சம்மந்தப்பட்ட பதிவு என்று நினைத்தேன்.ஆனால் இது அரசியல் வியாதிகளிடம் சிக்கி நீதி படும் பாட்டை கூறும் மனதை தொடும் பதிவு.நன்றி.
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteகாவிரித் தாயின் கருணையை என்னென்பது!அவள் தாய் அல்லவா!
தாயன்பு இருக்கத்தானே செய்யும்!
அவளன்பு மனம் உள்ளவரை தமிழினம் தப்பிக்கும்!
வந்தாரை வாழ வைக்கும் எனும்
வரிகளைப் படித்துள்ளேன், அதை
என் வயதில் பார்க்கவும் செய்கிறேன், நம் விவசாயிகள்
தண்ணீர் தர மறுக்கும் கேர்ள், கர்னாடக மாநிலங்களுக்கு தடையின்றித் தந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும்
மற்றொரு உண்மை!
தமிழகத்துக்கு துரோகம் செய்வோர்
வேறு யாருமில்லை, இதுவரை
ஆண்டவர்களும்,இப்போது ஆள்பவர்களும் தான்!அவர்கள்
தமிழர்களல்லவா?
மனம் நொந்து கிடக்கிறது,ஐயா!
அருமையான பதிவு நன்றி
ReplyDelete////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஅருமை.////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeletegood reading Sir./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,தலைப்பை பார்த்தவுடன் சோதிடம் சம்மந்தப்பட்ட பதிவு என்று நினைத்தேன்.ஆனால் இது அரசியல் வியாதிகளிடம் சிக்கி நீதி படும் பாட்டை கூறும் மனதை தொடும் பதிவு.நன்றி./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
///Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
காவிரித் தாயின் கருணையை என்னென்பது!அவள் தாய் அல்லவா!
தாயன்பு இருக்கத்தானே செய்யும்!
அவளன்பு மனம் உள்ளவரை தமிழினம் தப்பிக்கும்!
வந்தாரை வாழ வைக்கும் எனும்
வரிகளைப் படித்துள்ளேன், அதை
என் வயதில் பார்க்கவும் செய்கிறேன், நம் விவசாயிகள்
தண்ணீர் தர மறுக்கும் கேர்ள், கர்னாடக மாநிலங்களுக்கு தடையின்றித் தந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும்
மற்றொரு உண்மை!
தமிழகத்துக்கு துரோகம் செய்வோர்
வேறு யாருமில்லை, இதுவரை
ஆண்டவர்களும்,இப்போது ஆள்பவர்களும் தான்!அவர்கள்
தமிழர்களல்லவா?
மனம் நொந்து கிடக்கிறது,ஐயா!/////
கவலைப் படாதீர்கள். காலதேவன் எல்லாவற்றையும் சரி செய்வான். நன்றி வரதராஜன்!!!
////Blogger classroom2012 said...
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி////
நல்லது. நன்றி!
உங்களின் பெயரை எழுதியிருக்கலாமே!!