1.3.18

முருங்கைக் கீரையின் மகத்துவம்!


முருங்கைக் கீரையின் மகத்துவம்!

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Good information Sir. Thank you.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. /////Blogger ஸ்ரீராம். said...
    மிகவும் பயனுள்ள குறிப்புகள்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்பதோடு எல்லா மருத்துவ குணங்கள் நிறைந்தது முருங்கைக்
    கீரை தான் என்றால் உசத்தியல்லவா!

    ReplyDelete
  6. Good morning sir. This is useful information.

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்பதோடு எல்லா மருத்துவ குணங்கள் நிறைந்தது முருங்கைக்
    கீரை தான் என்றால் உசத்தியல்லவா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ///Blogger Anuradha Selvakumar said...
    Vaazhga valamudan////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  9. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    Good morning sir. This is useful information.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com