3.1.18

பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் பிடிக்கிறது தெரியுமா?


பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் 
அதிகம் பிடிக்கிறது தெரியுமா?

பொதுவாக ஆண்கள் மனைவி மீதான அன்பை விட., பலமடங்கு அன்பை தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்.

ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் நான்கு தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த  தாய்,
இரண்டாவதாக சகோதரி உருவிலான தாய்.
மூன்றாவதாக தனது மனைவி உருவிலான தாய்.,
நான்காவதாக  மகள் உருவிலான தாய். இது ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.

மகள்கள் தங்களது அம்மாவை விட., அப்பாவை அதிகம் விரும்ப என்ன காரணம் என்பது பற்றி இதில் பார்ப்போம்..

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தைதான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.

பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான்.

தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான்.

இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை.  தன்னால் முடிந்த வரை மகள்களை
மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர்.

அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும்
உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீருக்கு காரணமாகிறது.

ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா.

அதனால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!

அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. திருமண வயது வந்ததும் வேறு வீட்டுக்குப் போய்விடுவார்கள் நம்மோடு நம் உடைமை என்று இருக்கப்போவது கொஞ்ச காலம்தான் என்கிற எண்ணமே அதிக பாசத்துக்குக் காரணமாகி விடுகிறது போலும். கூடவே இருக்கும் பொருளைவிட, பிரியப்போகும் உறவு / பொருள்கள் மீது பற்று / பாசம் அதிகரிக்குமே!

    ReplyDelete
  2. Good morning sir its really true sir,nice article sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா மிகவும் உருக்கம்

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning...True relationship.... Thanks for sharing.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. Yes sir. It is very much true.I am the father of three daughters.

    ReplyDelete
  6. ஸ்ரீராம் கருத்துதான் என்னுடைய கருத்தும். அதே சமயம், பெண்குழந்தைகள் அப்பாவுடன் ஒரு ஒட்டுதலுடன் இருப்பார்கள் (அவங்களுக்கு மெச்சூரிட்டி லெவல் அதிகம்). பசங்க அப்படி இல்லை. அதுவும் பதின்ம வயதிலிருந்து, அப்பாவிடம் உள்ள நெருக்கம் குறைந்துகொண்டே போய், மீண்டும் நெருக்கம், அவர்கள் 35+ ஆகும்போதுதான் (குழந்தை பெற்றபின்) வரும். அதேபோல், பெண்குழந்தைகள் அப்பாவிடம் எதையும் நாசூக்காகக் கேட்கும் த்வனியில், எல்லா அப்பாக்களும் அன்பு மிகுதியால் மயங்கி செய்துகொடுத்திடுவாங்க. பசங்க கொஞ்சம் roughதான்.

    ReplyDelete
  7. காவல் துறையில் என் தந்தை இருந்ததால் என் போன்ற பெண்களுக்கு தாயிடமே அதிக பாசம் . தந்தை என்றால் பயமே, பாசத்தை காட்டிலும் அதிகமாய் இருந்தது,அது தற்போதும் தொடர்கிறது..
    அவர் வேலைக்காரணமாய் அதிக நேரம் எங்களுடன் செலவு செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  8. /////Blogger ஸ்ரீராம். said...
    திருமண வயது வந்ததும் வேறு வீட்டுக்குப் போய்விடுவார்கள் நம்மோடு நம் உடைமை என்று இருக்கப்போவது கொஞ்ச காலம்தான் என்கிற எண்ணமே அதிக பாசத்துக்குக் காரணமாகி விடுகிறது போலும். கூடவே இருக்கும் பொருளைவிட, பிரியப்போகும் உறவு / பொருள்கள் மீது பற்று / பாசம் அதிகரிக்குமே!////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir its really true sir,nice article sir thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ////Blogger Subathra Suba said...
    வணக்கம் ஐயா மிகவும் உருக்கம்////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  11. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...True relationship.... Thanks for sharing.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

  12. ////Blogger kmr.krishnan said...
    Yes sir. It is very much true.I am the father of three daughters.///

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  13. /////Blogger நெல்லைத் தமிழன் said...
    ஸ்ரீராம் கருத்துதான் என்னுடைய கருத்தும். அதே சமயம், பெண்குழந்தைகள் அப்பாவுடன் ஒரு ஒட்டுதலுடன் இருப்பார்கள் (அவங்களுக்கு மெச்சூரிட்டி லெவல் அதிகம்). பசங்க அப்படி இல்லை. அதுவும் பதின்ம வயதிலிருந்து, அப்பாவிடம் உள்ள நெருக்கம் குறைந்துகொண்டே போய், மீண்டும் நெருக்கம், அவர்கள் 35+ ஆகும்போதுதான் (குழந்தை பெற்றபின்) வரும். அதேபோல், பெண்குழந்தைகள் அப்பாவிடம் எதையும் நாசூக்காகக் கேட்கும் த்வனியில், எல்லா அப்பாக்களும் அன்பு மிகுதியால் மயங்கி செய்துகொடுத்திடுவாங்க. பசங்க கொஞ்சம் roughதான்.////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  14. /////Blogger kausalya muralikannan said...
    காவல் துறையில் என் தந்தை இருந்ததால் என் போன்ற பெண்களுக்கு தாயிடமே அதிக பாசம் . தந்தை என்றால் பயமே, பாசத்தை காட்டிலும் அதிகமாய் இருந்தது,அது தற்போதும் தொடர்கிறது..
    அவர் வேலைக்காரணமாய் அதிக நேரம் எங்களுடன் செலவு செய்ய முடியவில்லை./////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com