புது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்!!!!
புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்
-------------------------------------------------------------------------
1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. இந்துக்களாக இருப்பின்,மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால் நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப்பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கொருமுறை அரைமணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில் சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15 நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.
16. உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள், வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்,
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.
18 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .
இவற்றை முயற்சி செய்தால் 2018 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்.
-----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Happy new year 2018 to Sir and all friends in the classroom 2007.
ReplyDeleteThis article is circulating in social media like whatsapp wildly.
Thank you.
Happy new year 2018 to you all
ReplyDeleteGood morning sir wish you happy new year 2018, good advice for this year,let this year brings all prosperity and happiness in your life thanks sir vazhga valamudan
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐 💐
ReplyDeleteவணக்கம் ஐயா,வாழ்த்துகளோடு,வாழும் வழிமுறையும் காட்டிய,வாத்தியாருக்கு நன்றி.உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteWill try to follow to the max, very nicely said about current situation,most of the time my kids play with mobile games n slowly I'm reducing them to have conversation at their leisure time
ReplyDeleteHappy New year sir
ReplyDeleteRespected sir,
ReplyDeleteGood morning sir. HAPPY NEW YEAR 2018. This day your message to all our member is very impressive and every body should follow to live happily in this world. Thank you for your worthy message.
Regards,
Visvanathan N
Respected Sir,
ReplyDeleteHappy monring... Wish you happy New Year 2018 to you and all class students.
May lord krishna bless us all.
Have a great day.
With kind regards,
Ravi-avn
Arumai ayya Nantri anbudan kittuswamy
ReplyDeletesimple and effective for worth & peaceful life sir.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteHappy new year 2018 to Sir and all friends in the classroom 2007.
This article is circulating in social media like whatsapp wildly.
Thank you./////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கும், மேலான விமர்சனத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteHappy new year 2018 to you all////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!!!
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir wish you happy new year 2018, good advice for this year,let this year brings all prosperity and happiness in your life thanks sir vazhga valamudan
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
////Blogger Maheswari Bala said...
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐 💐////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!!!!
ReplyDelete////Blogger adithan said...
வணக்கம் ஐயா,வாழ்த்துகளோடு,வாழும் வழிமுறையும் காட்டிய,வாத்தியாருக்கு நன்றி.உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கும், மேலான விமர்சனத்திற்கும் நன்றி ஆதித்தன்!!!!
////Blogger kausalya muralikannan said...
ReplyDeleteWill try to follow to the max, very nicely said about current situation,most of the time my kids play with mobile games n slowly I'm reducing them to have conversation at their leisure time/////
நல்லது. உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி!!!!
////Blogger சர்மா said...
ReplyDeleteHappy New year sir/////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!!!
///Blogger Visvanathan N said...
ReplyDeleteRespected sir,
Good morning sir. HAPPY NEW YEAR 2018. This day your message to all our member is very impressive and every body should follow to live happily in this world. Thank you for your worthy message.
Regards,
Visvanathan N/////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கும், மேலான விமர்சனத்திற்கும் நன்றி விஸ்வநாதன்!!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy monring... Wish you happy New Year 2018 to you and all class students.
May lord krishna bless us all.
Have a great day.
With kind regards,
Ravi-avn/////
நல்லது. உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி அவனாசி ரவி!!!
////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteArumai ayya Nantri anbudan kittuswamy////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி அண்ணா!!!
///Blogger senthil said...
ReplyDeletesimple and effective for worth & peaceful life sir.////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
arumaiyana puthandu nataimurai,nanum itai follow panna muyaluven iyya.
ReplyDelete