எப்படி வாழ வேண்டும்?
மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்!!!
மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...
கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...
சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....
பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...நேர்மையாய் வாழ்ந்தால்!!!
படித்தேன்
பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அருமை வாத்தியார் அவர்களே ...
ReplyDeleteGood morning sir very useful information from bagawat geeta, thanks sir vazhga valamudan
ReplyDeletebeutiful ,Sir
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Excellant ...
Have a great day.
With regards,
Ravi-avn
எல்லாமே மிரட்டும் நெகட்டிவ்ஸ்
ReplyDeleteவணக்கம் ஐயா,ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு படிப்பினையே என்ற வித்தியாசமான கோணம்.அற்ப்புதம்.நன்றி.
ReplyDeleteபெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
ReplyDeleteபிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...
Is it not a wrong message? May be for rhyming it is good. But karma of a person decide his own fate not his parents.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
////Blogger SELVARAJ said...
ReplyDeleteஅருமை வாத்தியார் அவர்களே ...////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!!!
ReplyDeleteBlogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very useful information from bagawat geeta, thanks sir vazhga valamudan
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger kmr.krishnan said...
ReplyDeletebeutiful ,Sir////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Excellant ...
Have a great day.
With regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!
////Blogger P Vinayagam said...
ReplyDeleteஎல்லாமே மிரட்டும் நெகட்டிவ்ஸ்/////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு படிப்பினையே என்ற வித்தியாசமான கோணம்.அற்புதம்.நன்றி./////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteபெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...
Is it not a wrong message? May be for rhyming it is good. But karma of a person decide his own fate not his parents.
தீதும் நன்றும் பிறர் தர வாரா////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி செல்வா!!!!!